Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

6th New Tamil Book Unit -1 நூல்வெளி & தெரிந்து தெளிவோம்


நூல்வெளி
இயல் 1.1 இன்பத்தமிழ் (பாரதிதாசன்)
• பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
• தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
• இவர் பாவேந்தர் என்னும் சிறப்பிக்கப்படுகிறார்.
• இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.

நூல்வெளி
இயல் 1.2 தமிழ்க்கும்மி (பெருஞ்சித்திரனார்)
• பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
• இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
• தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
• இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
• இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
• இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.

தெரிந்து தெளிவோம்.
இயல் 1.3 வளர்தமிழ்

தெரிந்து தெளிவோம்.
இயல் 1.4 கனவு பலித்தது
தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
● மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல்கலாம்
● இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
● இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
  1. சார் மாணவர்கள் வணக்கம். ஆறாம் வகுப்பு இயல் 1 நிறைய வினாக்கள் இருக்கு . கேள்வி தாளில் நிறைய வினா புதிதாக உள்ளது சார் . புத்தகம் இல்லாமல் உங்களை மட்டுமே இருக்கும்

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham