Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

இரா.பி.சேது, செய்குதம்பிப் பாவலர் & தனிநாயகம் அடிகள்

7th தமிழ் இயல் 3 கப்பலோட்டிய தமிழர்ை (இரா.பி.சேது)
நூல் வெளி
•இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
•இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
•செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.
•இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
•ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

9th தமிழ் இயல் 9 விரிவாகும் ஆளுமை (தனிநாயகம் அடிகள்)
நூல் வெளி
• தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.
• அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.
• இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பாடமாக இடம்பெற்றுள்ளது.
• தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பினார்.
• அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தார் இவர் தொடங்கிய தமிழ்ப் பண்பாடு என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.

10th தமிழ் இயல் 5 நீதிவெண்பா (செய்குதம்பிப் பாவலர்)
நூல் வெளி
• ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்;
• பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்;
• சீறாப்புராணத்திற்கு -உரை எழுதியவர்;
• 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றார்.
• இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன.
• இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
சதாவதானம்
• 'சதம்' என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்