Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

எச்.ஏ. கிருட்டிணனார்

12th தமிழ் இயல் 8 இரட்சணிய யாத்திரிகம் (எச்.ஏ. கிருட்டிணனார்)
நூல் வெளி
• ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (Pilgrims Progress) எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் படைக்கப்பட்டது.
• இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம்.
• இது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.
• இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
• இதன் ஆசிரியர் எச்.ஏ. கிருட்டிணனார்.
• பிற சமய இலக்கியங்களைப் போலவே கிறித்துவ சமய இலக்கியங்களும் தமிழ் இலக்கிய வளமைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன.
• எச்.ஏ. கிருட்டிணனார் போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
• இவரைக் கிறித்துவக் கம்பர் என்று போற்றுவர்.
தெரியுமா?
• திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த 'நற்போதகம்' எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் பதின்மூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
• இரட்சணிய யாத்திரிகம், 1894ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.

எச்.ஏ. கிருட்டிணனார் (9th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு:
• இரட்சணிய யாத்திரிக நூலாசிரியர் எச்.ஏ. கிருட்டிணனார்.
• திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு என்னும் ஊரில், 1827 ஏப்பிரல் இருபத்து மூன்றாம் நாள் பிறந்தார்.
• இவருடைய தந்தை சங்கரநாராயணர் பெரும்புலவராக விளங்கினார்.
• அன்னையார் பெயர் தெய்வநாயகி அம்மாள்.
• இவர்கள் ரெட்டியாபட்டியில் வாழ்ந்தவர்கள்.
• பிறகு, கரையிருப்பு சென்று வாழ்ந்த கிருட்டினனார், முப்பதாவது அகவையில் தம்பெயரை எச்.ஏ. கிருட்டினனார் என வைத்துக்கொண்டார்.
• கிருட்டினனார் தந்தையிடம் தமிழிலக்கியங்களையும் மாணிக்க வாசகத்தேவரிடம் இலக்கணங்களையும், பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்.
• சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
• இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள் என்னும் நூல்களையும் இயற்றினார்.
• கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெற்ற பெருங்கவிஞர் 1900 பிப்ரவரி மூன்றாம் நாள் இயற்கை எய்தினார்.
நூற்குறிப்பு:
• இரட்சணியயாத்திரிகம் என்பதன் பொருள் (உயிர், தன்னைக் காக்க வேண்டி) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பது.
• ஆன்ம ஈடேற்றத்தை விரும்புபவர் என்பதும் பொருந்தும்
• ஜான் பன்யன் என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலைத்தழுவி, ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டினனார் வழிநூலாகத் தமிழில் இரட்சணிய யாத்திரிகம் என்னும் பெயரில் இயற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்