குறுந்தொகை (9th புதிய தமிழ் புத்தகம்) |
---|
நூல் வெளி
• எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. • இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது; • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது. • இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை. • 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார். • நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் ஆகும். • இப்பாடலின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. • இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்; • கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப் பெற்றார். |
குறுந்தொகை (9th புதிய தமிழ் புத்தகம்) |
---|
நுழையும்முன்
• 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று மனிதம் பேசிய சங்கக் கவிதைகள் தமிழ்ச் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்வன. • அவற்றுள் ஒன்றான குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்; • அதன் சிறப்புக் கருதியே நல்ல குறுந்தொகை என்று அழைக்கப்படுகிறது; • குறுந்தொகைப் பாடல்கள் பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்த காட்டுவன. • தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரைத் துடைக்கத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த ஒரு பாடல் மனிதத்தை உணர்த்துகிறது. |
குறுந்தொகை (9th தமிழ் புதிய புத்தகம்) |
---|
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழி அவர் சென்ற ஆறே. (37) பேரன்பு உடையவன் பெரிதுனக்குத் தருவான் பொருள் தேடச் சென்றவன் பறந்தோடி வருவான் பசித்தீ அணைக்க மெல்லிய யாமரக் கிளையொடித்து உதவும் யானைக் காட்சியே உன்நினைவு தூவி இங்கவனை அழைத்துவரும் மலரினும் மெல்லியளே மனக்கவலை கொள்ளாதே திணை: பாலை துறை: தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது. |
குறுந்தொகை (9th பழைய தமிழ் புத்தகம்) |
---|
நூற்குறிப்பு :
• குறுமை + தொகை = குறுந்தொகை. • குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. • இந்நூல், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. • இதில், கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன. • அகப்பொருள் பற்றிய பாடல்களைப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பாடியுள்ளார்கள். • இப்பாடல் குறைந்த அளவாக நான்கடிகளையும் அதிக அளவாக எட்டு அடிகளையும் கொண்டிருக்கின்றன. • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. • பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். • இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை. • இந்நூல் வாயிலாகப் பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு முதலியவற்றை அறியலாம். |
minnal vega kanitham