Type Here to Get Search Results !

இராணி மங்கம்மாள் (9th Old Tamil Book)

0
இராணி மங்கம்மாள் (9th Old Tamil Book)

• மதுரையை ஆண்டுவந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள்.
• அக்காலத்தில், கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுவது வழக்கமாக இருந்தது.
• இராணி மங்கம்மாளின் கணவர் இறந்தபோது தன்மகன் அரங்க கிருட்டின முத்துவீரப்பன் இளம் வயதினனாக இருந்தான். அவனுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்னும் கடமையுணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை.

மகனுக்கு அரசும் அறிவுரையும்

• மங்கம்மாள், தன் மகன் அரங்க கிருட்டின முத்துவீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார்.
• அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும்.
• முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது; பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்படவேண்டும் என்றெல்லாம் மகனுக்கு அறிவுரை கூறினார்.
• மக்களின் பசிப்பிணியைப்போக்க ஆங்காங்கே சத்திரங்களும் சாவடிகளும் கட்டினான்; நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை என்னும் உணர்வோடும் நடுவுநிலைமைப் பண்போடும் அமைதியாக ஆட்சி நடத்தி மக்களிடம் நற்பெயர் பெற்றான்.
• ஏழாண்டுக்காலம் ஆட்சி நடத்திய அம்மைநோய் கண்டு உலக வாழ்வை நீத்தான்.

மங்கம்மாள் ஆட்சிப்பொறுப்பேற்றல்

• மகன் இறந்த சில நாளில் மருமகள் சின்னமுத்தம்மாள் அழகிய ஆண்மகனைப் பெற்றெடுத்தாள்.
• சில நாளில் மருமகள் முத்தம்மாளும் காலமானாள். இருப்பினும், அரசியல் பட்டறிவும் ஆட்சிப்பொறுப்பும் இராணி மங்கம்மாளின் மனத்தைக் கல்லாக்கியிருந்தன.
• மகன் முத்துவீரப்பன் இறந்ததனால், கி.பி.1688ம் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணையில் ஏற்றப்பட்டான்.
• மங்கம்மாள் துயரங்களைத் தாங்கிக்கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக்கூடிய வீராங்கனை என மக்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

 திருவிதாங்கூர்ப் போர்
• திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மா, மதுரை நாயக்க அரசுக்குச் செலுத்த வேண்டிய திறைப்பொருள்களைச் செலுத்தவில்லை.
• கல்குளம் பகுதியிலிருந்த நாயக்கர் படை திருவிதாங்கூர்ப் படையைத் தோற்கடித்துத் திறைப்பொருள் மற்றும் பொன், பீரங்கி முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது.

தஞ்சைப் போர்

• தஞ்சையை ஆண்ட மராத்தியருக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் இடையில் நல்லுறவு நிலவவில்லை.
• ஒருமுறை தஞ்சை ஷாஜி, மதுரை நாயக்கர் ஆட்சிப்பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார். அவற்றை மீட்க, தளபதி நரசப்பையன் தலைமையில் மங்கம்மாள் ஒரு படை அனுப்பினார். அப்படை அப்பகுதிகளை மீட்டுத் தஞ்சையை அச்சுறுத்தியது.
• தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் படையெடுப்பாளர்களுக்குப் பெரும்பொருள் கொடுத்தனுப்பினார்.

மைசூர்ப் போர்

• இராணி மங்கம்மாள் காலத்தில் மைசூர் மன்னன் சிக்கதேவராயன் காவிரியின் குறுக்கே அணைகட்டியபோது, மங்கம்மாள் தஞ்சையுடனான பகையை மறந்து, அந்நாட்டு அரசு உதவியுடன் எதிர்ப்புத் தெரிவித்ததோடு அன்றி, மைசூர்மீது படையெடுக்க தஞ்சை -மதுரைக் கூட்டுப்படை ஒன்றனை உருவாக்கினார்.
• படை தயாரானது. இவ்வேளையில் கர்நாடகப் பகுதியில் கடும்மழை பெய்ததனால் சிக்கதேவராயன் கட்டிய அணைகள் உடைந்தன; சிக்கல் முடிவடைந்தது.

சமயக் கொள்கை

• ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம் என்ற கொள்கையை மங்கம்மாள் பின்பற்றினார்.
• சமயத் தொடர்பாகச் சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்ததோடு போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.
• இசுலாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காகவும் நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

மங்கம்மாள் அறச்செயல்கள்

• மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரத்தைக் கட்டினார்;
• கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை, மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது.
• தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள்தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்குப் பொன்னும் பொருளும் வழங்கினார்.
• ஆனித்திங்களில் ஊஞ்சல் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தார்.
• மத்தியச் சந்தை, மதுரைக் கல்லூரி உயர்நிலைப்பள்ளிக் கட்டடம், இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகம் முதலியவற்றை மங்கம்மாள் கட்டியதாகக் கூறுவர்.

மங்கம்மாள் இறையுணர்வும் பெருந்தன்மையும்

• மங்கம்மாள் திறமையான ஆட்சியாளர்; எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்து வெற்றி நடைபோட்டவர் தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர்:
• நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டவர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்