Type Here to Get Search Results !

முத்துலெட்சுமி (9th New தமிழ் & 10th Old சமூக அறிவியல்)

0
முத்துலட்சுமி ரெட்டி (10th Old சமூக அறிவியல்)
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
• சமுதாய மாற்றத்திற்கு முன்னோடியாக தமிழ்நாடு விளங்குகிறது.
• தமிழ் சமூகத்தில் கரும்புள்ளிகள் போல சில சீர்கேடுகள் காணப்பட்டு அவை நீக்கப்படுகின்றன.
• அவற்றுள் ஒன்று தேவதாசி முறையாகும்.
• இந்த சமூக அவலத்தைப் போக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தீவிரமாக போராடிய பெண்மணிகளில் முக்கியமானவர்களில் ஒருவராவர்.
• டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30, 1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார்.
• இந்தியாவின் முதல் பெண் மருத்துவராவார்.
• 1923ஆம் ஆண்டு இவரது தங்கை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
• அதனால் புற்று நோயை அடியோடு ஒழிக்கவேண்டும் என்று சபதம் மேற்கொண்டார்.
• எனவே 1949-ம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண மருத்துவமனையை தொடங்கினார்.
• இவரது சீறிய முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
• இந்தியப்பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார்.
• டாக்டர் முத்துலட்சுமி மருத்துவம் மட்டுமின்றி அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.
• தமிழ்நாட்டில் காணப்பட்ட கொடிய பழக்கமான தேவதாசி முறையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
• தேவதாசி முறை ஒழிப்பில் ஆர்வம் கொண்டிருந்ததால், மகாத்மா காந்தி இவரது சமூக பணிகளை பாராட்டி பேசினார்.
• தேவதாசி முறை ஒழிப்பில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக 1929-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
• தந்தை பெரியார், திரு.வி.கல்யாணசுந்தரம் போன்றவர்கள் இவரது கருத்தை தீவிரமாக ஆதரித்தனர்.
• இதன் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
• 1930-ம் ஆண்டு பூனாவில் அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்தினார்.
• 1933 முதல் 1947 வரை இடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்கத் தலைவியாக இருந்தார்.
• ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம் என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார்.
• தற்சமயம் இவ்வில்லம் சென்னை அடையாறில் செயல்பட்டு வருகிறது.
• இலட்சிய வேட்கை கொண்ட எந்தப் பெண்ணுக்கும் தோல்வி இல்லை என்பதை வாழ்ந்து நிரூபித்த டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி 1968-ம் ஆண்டு தனது 82- வது வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார்.

முத்துலெட்சுமி (9th தமிழ் புதிய புத்தகம்)
• பெண்மை புரட்சி - முத்துலெட்சுமி (1886 - 1968)
• தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்? முத்துலெட்சுமி
• இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்? முத்துலெட்சுமி
• சென்னை மாநகராட்ச்சியின் முதல் துணை மேயர் யார்? முத்துலெட்சுமி
• சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்? முத்துலெட்சுமி
• தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்? முத்துலெட்சுமி
• முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம்? 1930ஆண்டு
• முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு? 1952 ஆண்டு

-->
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்