தமிழ்ச்சொல் வளம் - தேவநேயப் பாவாணர்(10th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
யார் இவர்?
• தமிழாசிரியர்; நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்; சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார். • திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்திருப்பவர்; • பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்; • தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்; • தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர். • விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்; அதற்காக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்; • இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர். • பற்பல நூல்களை எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துக்கள். அவர்தான் உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார். தெரியுமா? • உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. • மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே. • பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார் • பாவாணர், தமிழ்ச்சொல்வளம் கட்டுரையில் வித்துவகை, வேர்வகை, அரிதாள் வகை, காய்ந்த இலைவகை, இலைக்காம்பு வகை, பூமடல் வகை, அரும்பு வகை, பூக்காம்பு வகை, இதழ்வகை, காய்வகை, கனி வகை, உள்ளீட்டு வகை, தாவரக் கழிவு வகை, விதைத்தோல் வகை, பதர் வகை, பயிர் வகை, கொடி வகை, மர வகை, கரும்பு வகை, காய்ந்த பயிர் வகை, வெட்டிய விறகுத்துண்டு வகை, மரப்பட்டை வகை, பயிர்ச்செறிவு வகை, நிலத்தின் தொகுப்பு வகை, செய் வகை, நில வகை, நன்செய் வகை, வேலி வகை, காட்டு வகை ஆகியவற்றின் சொல்வளங்களையும் விளக்கியுள்ளார். |
இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார் (10th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
தெரிந்து தெளிவோம்
• இரட்டுற மொழிதல் ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். /இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. |
உரைநடையின் அணிநலன்கள் - எழில்முதல்வன் (10th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
தெரியுமா?
• முதல் தமிழ்க் கணினி • தமிழ் மறையான திருக்குறளைத் தந்த "திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது. • இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது. • இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக் கூடியதாக அமைந்தது. • சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் "திருவள்ளுவரே'! |
minnal vega kanitham