கம்பராமாயணம் (9th தமிழ் பழைய புத்தகம் இயல் - 1) |
---|
ஆசிரியர் குறிப்பு :
• கம்பர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் பிறந்தார். • இவர் கம்பராமாயணம், ஏர் எழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். • இவர், குலோத்துங்கச் சோழனின் அவைப்புலவராக விளங்கினார்; • திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றார். • இவர், கவிச்சக்கரவர்த்தி எனவும் கல்வியில் பெரியர் கம்பர் எனவும் போற்றப்படுகிறார். • இவரின் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவர். நூற்குறிப்பு: • வடமொழியில் வான்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம். • கம்பர், இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். • இது பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம் யுத்தகாண்டம் என ஆறு காண்டங்களை உடையது. |
திருக்குறள் (9th தமிழ் பழைய புத்தகம் இயல் – 1) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• திருவள்ளுவர், திருக்குறளில் அனைத்து நாட்டினரும் இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துகளைப் படைத்தவர். • நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர் என்னும் சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு. • இவரின் காலம் கி.மு.31ஆம் ஆண்டு என அறிஞர் கூறுவர். நூற்குறிப்பு : • திரு + குறள் = திருக்குறள். திரு - செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத் தன்மை எனப் பல பொருள் கொண்ட ஒருசொல். குறள் - குறுகிய அடி உடையது. • ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது, திருக்குறள். • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது; • அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. • இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூலைப் போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவமாலை. • திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர் தமிழ்ச் சான்றோர். • இன்றும் பலர் திருக்குறளுக்கு உரை எழுதி வருகின்றனர். • இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள். • திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்: 1. தருமர் 2. மணக்குடவர் 3. தாமத்தர் 4. நச்சர் 5. பரிதி 6. பரிமேலழகர் 7. திருமலையர் 8. மல்லர் 9. பரிப்பெருமாள் 10. காளிங்கர் |
திருக்குறள் - திருவள்ளுவர்(9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 3) |
---|
நூல் வெளி
• உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல் திருக்குறள். • இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல். • இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. • தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. • இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை. • உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள். • தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல். • பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு. |
திருக்குறள் |
---|
குறளும் ஏழு என்னும் எண்ணுப்பெயரும் • திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது. • திருக்குறள் எழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது. • ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது. • அதிகாரங்கள், 133. இதன் கூட்டுத்தொகை எழு மொத்த குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகையும் ஏழு. |
தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
நூல் வெளி
• ஈரோடு தமிழன்பன் எழுதிய 'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. • இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒருகுழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார். • ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். • ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார். • இவரது வணக்கம் வள்ளுவ என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. • 'தமிழன்பன்’ கவிதைகள் தமிழக அரசின் பரிசுபெற்ற நூல். • இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. |
தமிழ்விடு தூது (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
நூல் வெளி
• தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. • இது, 'வாயில் இலக்கியம்', 'சந்து இலக்கியம்' என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. • இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். • தமிழ்விடு தூது, மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. • இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. • இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். • இதன் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை. |
minnal vega kanitham