திருக்குறள் (9th தமிழ் பழைய புத்தகம் இயல் – 1) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• திருவள்ளுவர், திருக்குறளில் அனைத்து நாட்டினரும் இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துகளைப் படைத்தவர். • நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர் என்னும் சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு. • இவரின் காலம் கி.மு.31ஆம் ஆண்டு என அறிஞர் கூறுவர். நூற்குறிப்பு : • திரு + குறள் = திருக்குறள். திரு - செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத் தன்மை எனப் பல பொருள் கொண்ட ஒருசொல். குறள் - குறுகிய அடி உடையது. • ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது, திருக்குறள். • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது; • அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. • இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூலைப் போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவமாலை. • திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர் தமிழ்ச் சான்றோர். • இன்றும் பலர் திருக்குறளுக்கு உரை எழுதி வருகின்றனர். • இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள். • திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்: 1. தருமர் 2. மணக்குடவர் 3. தாமத்தர் 4. நச்சர் 5. பரிதி 6. பரிமேலழகர் 7. திருமலையர் 8. மல்லர் 9. பரிப்பெருமாள் 10. காளிங்கர் |
திருக்குறள் - திருவள்ளுவர்(9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 3) |
---|
நூல் வெளி
• உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல் திருக்குறள். • இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல். • இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. • தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. • இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை. • உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள். • தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல். • பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு. |
திருக்குறள் |
---|
குறளும் ஏழு என்னும் எண்ணுப்பெயரும்
• திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது. • திருக்குறள் எழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது. • ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது. • அதிகாரங்கள், 133. இதன் கூட்டுத்தொகை எழு மொத்த குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகையும் ஏழு. |
Super sister
பதிலளிநீக்குminnal vega kanitham