| முத்துலெட்சுமி (1886 - 1968) (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 5) |
|---|
|
• பெண்மை - புரட்சி
• தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் • இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர். • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர். |
| மூவலூர் இராமாமிர்தம் (1883 - 1962) (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 5) |
|---|
|
• பெண்மை - துணிவு
• தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி ; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.; தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர். • தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது. |

minnal vega kanitham