Type Here to Get Search Results !

புறநானூறு 9th தமிழ் புதிய/பழைய புத்தகம்

புறநானூறு (9th தமிழ் பழைய புத்தகம் இயல் – 3)
ஆசிரியர் குறிப்பு:
• மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
• இவர், இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்;
• பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல்வாடையையும் இயற்றியவர்.
• இப்பாடலில் இவர், உலகியல் உண்மையைக் கூறியுள்ளார்.
நூற்குறிப்பு:
• புறநானூறு = புறம் + நான்கு + நூறு.
• புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதனால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
• புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.
• இஃது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
• இப்பாடல்கள் வாயிலாகப் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச்சிறப்பு, வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறியலாம்.
• இந்நூலின் சில பாடல்களை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்

புறநானூறு – குடபுலவியனார் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 2)
நூல் வெளி
• எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
• இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.
• இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.