கல்வியில் சிறந்த பெண்கள்(9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 5)
தெரிந்து தெளிவோம்
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர்
• ஔவையார்,
• ஒக்கூர் மாசாத்தியார்,
• ஆதிமந்தியார்,
• வெண்ணிக் குயத்தியார்,
• பொன்முடியார்,
• அள்ளூர் நன்முல்லையார்,
• நக்கண்ணையார்,
• காக்கைப்பாடினியார்,
• வெள்ளிவீதியார்,
• காவற்பெண்டு,
• நப்பசலையார்.
பெண்மை – புரட்சி
முத்துலெட்சுமி (1886 - 1968)
• தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
• இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
• சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
• தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.
• அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
பெண்மை – உயர்வு
பண்டித ரமாபாய் (1858 - 1922)
• இவர் சமூகத் தன்னார்வலர்.
• தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர்.
• பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்.
பெண்மை – சிறப்பு
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் (1870-1960)
• பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.
பெண்மை - அறிவு
சாவித்திரிபாய் பூலே (1831 - 1897)
• 1848 இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட படள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.
யார் இவர்?
• பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு (1997).
பெண்மை – துணிவு
மூவலூர் இராமாமிர்தம் (1883 - 1962)
• தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.;
• தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
• தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.
சிறுபஞ்சமூலம் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 5)
தெரிந்து தெளிவோம்
சாதனைக்கு வயது தடையன்று
• 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.
• 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி 'பாரதி' என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
• 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.
• 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்.
• 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ.
தெரியுமா?
• சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
• அது போல, ஒரு பாடலில் மூன்று, ஆறு கருத்துகளைக் கொண்ட அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு வரிசையில் அமைந்துள்ளன.
-->
வீட்டிற்கோர் புத்தகசாலை (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 5)
தெரியுமா?
• 2009 ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
• 2010ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
இன்றும் நிலைபெற்றுள்ள பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளுள் சில
1. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
2. கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
3. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
4. சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
5. மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.
6. நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
7. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
8. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
9. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
தெரிந்து தெளிவோம்
புகழுக்குரிய நூலகம்
• ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.
• இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
• உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே.
• இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
• இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது, திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.
• கொல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும்.
• இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.
• உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.
minnal vega kanitham