இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 4) |
---|
தெரிந்து தெளிவோம்
• நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்துப் பயன்படுத்துவதற்கொரு வழியைச் சிந்தித்தேன். • சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது. • அங்கு சாக்லேட்; இங்கே பணம். - ஜான் ஷெப்பர்டு பாரன் தெரிந்து தெளிவோம் • ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு (Adrian Ashfield) என்பவர் 1962 இல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றிருந்தார். • ஆரம்பத்தில் பெட்ரோல் தருவதற்குப் பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது. அதுவே பின்னர் அனைத்துப் பயன்பாட்டுக்குமான காப்புரிமையாக மாற்றப்பட்டது. தெரிந்து தெளிவோம் • 1990இல் டிம் பெர்னெர்ஸ் லீ (Tim Berners - Lee) வையக விரிவு வலை வழங்கியை (www - server) உருவாக்கினார். • "இணையத்தில் இது இல்லையெனில், உலகத்தில் அது நடைபெறவேயில்லை!" என்பது லீயின் புகழ் பெற்ற வாசகம். தெரியுமா? • பத்தாம் வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் முடித்த மாணவர்களுக்கு, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்படவேண்டிய பதிவு, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே ஆண்டுதோறும் இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது. • அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற்ற மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. |
உயிர்வகை - தொல்காப்பியர் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 4) |
---|
minnal vega kanitham