உ.வே.சாமிநாதர் (6th Old Tamil Book) |
---|
• ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
• இயற்பெயர் - வேங்கடரத்தினம் • ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. • அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன் • உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா • தமிழ்த்தாத்தா என்று உ.வே.சா அவர்களை அழைக்கின்றோம். • இவரின் தந்தை - வேங்கடசுப்பையா • காலம் - 19.02.1855 முதல் 28.04.1942 • 1942 இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது. • உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது. • உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர். • இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. • பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர். • ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது. • ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட்ட நாள் ஆடிப்பெருக்கு • உ.வே.சாமிநாதர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் ஆற்றில்விட்ட ஓலைச் சுவடியை எடுத்தார். • நமக்காகத் தாளில் எழுதிஅச்சிட்டுப் புத்தகத்தை வழங்கியவர்? உ.வே.சாமிநாதய்யர் • ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர். • குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர். • தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. • ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா • உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார். • உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம். • குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது (99) • உ.வே.சா பதிப்பித்த நூல்கள்: 1. எட்டுத்தொகை - 8 2. பத்துப்பாட்டு - 10 3. சீவகசிந்தாமணி - 1 4. சிலப்பதிகாரம் - 1 5. மணிமேகலை - 1 6. புராணங்கள் - 12 7. உலா - 9 8. கோவை - 6 9. தூது - 6 10. வெண்பா நூல்கள் - 13 11. அந்தாதி - 3 12. பரணி - 2 13. மும்மணிக்கோவை - 2 14. இரட்டைமணிமாலை - 2 15. பிற பிரபந்தங்கள் – 4 • ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள் 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர். |
உ.வே.சாமிநாதர் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் 1)
ஜனவரி 08, 2024
0
Tags
minnal vega kanitham