Type Here to Get Search Results !

இராணி மங்கம்மாள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

0
இராணி மங்கம்மாள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
1. தமிழ்நாட்டில் நாயக்கர் மரபில் பெண்கள் முடிசூடி ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை.
2. காப்பாட்சியாளராக ஆட்சி புரிந்து உள்ளனர்.
3. மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள்.
4. இராணி மங்கம்மாளின் கணவர் இறந்தபோது அவர் மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பன் இளம் வயதினனாக இருந்தான், அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்னும் கடமை உணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை.
5. மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார்.
6. அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும்; முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது.
6. பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்பட வேண்டும்" என அறிவுரை கூறினார். முத்துவீரப்பன், "நேர்மையை காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை" என்ற கொள்கையுடன் ஆட்சி புரிந்தான்.
7. முத்துவீரப்பன் இறந்த சில நாட்களில் அவன் மனைவி சின்னமுத்தம்மாள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து, சில நாட்களில் அவரும் இறந்தார்.
8. முத்துவீரப்பன் ஏழாண்டுக்காலம் ஆட்சி செய்தார்.
9. அம்மைநோயால் பாதிக்கப்பட்டு உலக வாழ்வை நீத்தார்.
10. கி.பி.1688 ஆண் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணை ஏற்றப்பட்டான்.
11. பாட்டி மங்கம்மாள் காப்பாட்சியாளராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்.
12. அரசியல் பட்டறிவும், ஆட்சிப் பொறுப்பும் இராணி மங்கம்மாளின் மனத்தைக் கல்லாக்கியிருந்தன.
13. கி.பி. 1688 ஆம் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணையில் ஏற்றப்பட்டான.
14. மங்கம்மாள் துயரங்களைத் தாங்கிக்கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக்கூடிய வீராங்கனை என மக்கள் போற்றிப் புகழ்ந்தனர்.
15. திருவிதாங்கூரின் மன்னர் - இரவிவர்மா
16. இராணி மங்கம்மாள் காலத்தில் மைசூர் மன்னன் - சிக்கதேவராயன்
17. முகலாய பேரரசர் அவுரங்கசீப் தனது தக்கான நடவடிக்கை மேற்கொண்டிருந்த நேரம் மங்கம்மாள் பெரும் செல்வம் அவர்களுக்கு கொடுத்து தனது ஆட்சியை காப்பாற்றிக்கொண்டார்.
18. முகலாயரின் உதவியோடு மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார்.
19. தளபதி நரசப்பையன் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மாவை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.
20. தளபதி நரசப்பையன் தலைமையில் சென்ற படை தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜியை தோற்கடித்து, தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதரிடம் இருந்து பெரும் பொருள்களை பெற்றுவந்தது.
20. மைசூர் மன்னர் சிக்கதேவராயன் காவிரியின் குறிக்கே அணைகட்டிய போது, அவரை மங்கம்மாள் எதிர்த்தார்.
21. மங்கம்மாளுக்கு துணையாக தஞ்சை மராட்டியர் உதவினார்.
22. அச்சமயம் பெரும் மழைப் பொழிவால் அணைகள் உடைந்தன. சிக்கல் தற்காலிகமாக முடிவடைந்தது.
23. ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம் என்ற கொள்கையை மங்கம்மாள் பின்பற்றினார்.
24. சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்து, போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.
25. மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரத்தைக் கட்டினார்.
26. இவர் பல சாலைகளை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை, "மங்கம்மாள் சாலை" எனப்படுகிறது.
27. ஆணித்திங்களில் "ஊஞ்சல் திருவிழா" நடத்தினார்.
28. மங்கம்மாள் மத்தியச் சந்தை, மதுரைக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளிக் கட்டடம், இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகம் போன்றவற்றை கட்டினார்.
29. மங்கம்மாளின் பெயர் மங்காத புகழோடு விளங்கும்.

TNPSC Last 10 Years Question Papers
1. கோடிட்ட இடத்தை நிரப்புக: கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் _____? இராணி மங்கம்மாள் (2013 G4)
2. பொருந்தாக் கூற்றைத் தேர்க : இராணி மங்கம்மாள் தன் ஆட்சி;க் காலத்தில் தன் படைத்தளபதி நரசப்பையன் தலைமையில்? முகலாயரோடு போரிட்டு வெற்றி பெற்றார் (2013 VAO)
3. நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசியார்? இராணி மங்கம்மாள் (2014 G4)
4. தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்? இராணி மங்கம்மாள் (2019 G4)
5. எந்தெந்த ஊருக்கு இடையே அமைந்த நெடுஞ்சாலை, மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது? கன்னியாகுமரி – மதுரை (2019 TNPSC)
6. ஒவ்வொருவரும் தாம். சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம் எனக் கூரியவர்? இராணி மங்கம்மாள் (2017 G2)
7. "ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம்" என்றவர் யார்? இராணி மங்கம்மாள் (2014 TNPSC MHC)
8. மங்கம்மாள் அன்னச்சத்திரம் கட்டிய இடம் எது? மதுரை (2014 TNPSC MHC)
9. கோடிட்ட இடங்களை நிரப்புக. இராணி மங்கம்மாள் கட்டிய அன்னச்சத்திரம் உள்ள இடம்______? மதுரை (2017 TNPSC)
10. உரிய விடையை எழுதுக. முத்துவீரப்பன் ஆட்சிக்காலம்? ஏழாண்டு (2017 TNPSC)
11. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக (2016 G2)
a. மதுரை சொக்கநாதநாயக்கர் மனைவி இராணி மங்சும்மாள்
b. இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டின மூத்து வீரப்பன் மனைவி இராணி முத்தம்மாள்
c. இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன்
d. பட்டினப்பாலை, பாண்டியனின் வீரச்செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பனுவல்
12. பொருந்தாக் கூற்றைத் தேர்க : இராணி மங்கம்மாள் தன் ஆட்சிக் காலத்தில் தன் படைத்தளபதி நரசப்பையன் தலைமையில் (2013 EO4)
A) திருவிதாங்கூர்ப் போரில் வெற்றி பெற்றார்.
B) தஞ்சை மன்னரால் கைப்பற்றப்பட்ட பகுதியை மீட்டெடுத்தார்.
C) மைசூர் மீது படையெடுக்க தஞ்சை-மதுரை கூட்டுப் படை ஒன்றை உருவாக்கினார்.
D) முகலாயரோடு போரிட்டு வெற்றி பெற்றார்
13. பொருந்தாததைக் கண்டெழுதுக. (2014 TNPSC MHC)
A) இராணி மங்கம்மாள் கணவன் - சொக்கநாத நாயக்கர்
B) இராணி மங்கம்மாள் மகன் - முத்து வீரப்பன்
C) இராணி மங்கம்மாள் மருமகள் - கமலாம்பிகை
D) இராணி மங்கம்மாள் பெயரன் - விஜயரங்கச் சொக்கநாதன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்