2. தொடரும் தொடர்பும் அறிதல்
(i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
(ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
தொடரும் தொடர்பும் அறிதல்
கொடுக்கப்பட்டிருக்கும் தொடருக்கு, தொடர்புடைய ஒன்றைக் கண்டறிதல் என்று பொருள். இதில் இரண்டு வகையாக வினாக்கள் கேட்கப்படும்.
1. அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் யார்? (இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்)
2. அடைமொழியால் அறியப்படும் நூல்கள்? (அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்)
தொடர் : இங்கு தொடர் என்று சுட்டிக்காட்டுவது ஒரு சான்றோரை அல்லது ஒரு நூலை புகழ்ந்தோ, வியந்தோ சொல்லும்படியான சொற்களைக் கொண்டது ஆகும்.
தொடர்பு: கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடருக்கு எந்த நூல் அல்லது எந்த சான்றோர் தொடர்பானவர் என்பதைக் குறிப்பதாகும்.
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
உதாரணம் 1: தேசியக்கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- போன்ற அடைமொழிகளால் அழைக்கப்பெறுபவர் - பாரதியார்.
உதாரணம் 2: பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக்கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல்கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி -போன்ற அடைமொழிகளால் அழைக்கப்பெறுபவர் - பாரதிதாசன்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்:
உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள், முத்தமிழ்க்காப்பியம், முதன்மைக் காப்பியம், பத்தினிக் காப்பியம், நாடகப் காப்பியம், குடிமக்கள் காப்பியம், பைந்தமிழ் காப்பியம், புதுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், ஒருமைப்பாட்டுக் காப்பியம், தமிழ்த் தேசியக் காப்பியம் போன்ற அடைமொழிகளால் அழைக்கப்பெறுபவர் பாரதிதாசன்.
கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,கம்ப நாடகம்-
சீவகசிந்தாமணி – மணநூல், மறைநூல், இயற்கை தவம், முக்திநூல், காமநூல்
மணிமேகலை – மணிமேகலை, மணிமேகலை துறவு, குண்டலகேசி, பௌத்தக் காப்பியங்கள்
பெரியபுராணம் – திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம், வழிநூல்
எந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்?
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சான்றோர்களையும் அவர்கள் தொடர்பான பட்டப்பெயர்களையும் நூல்களையும் நூல்கள் தொடர்பான புகழாரங்களையும் ஒன்று திரட்டி வாசித்தாலே இது போன்ற வினாக்களுக்கு எளிதாக விடையளிக்கலாம்..
தேர்வில் கேட்கப்பட்ட வினா மாதிரி:
minnal vega kanitham