மாணிக்கவாசகர் |
---|
ஆசிரியர் குறிப்பு :
• சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர். • இவர், திருவாதவூரில் பிறந்தவர். இவ்வூர், மதுரைக்கு அருகில் உள்ளது. • மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர்; • பாண்டியனுக்காகக் குதிரை வாங்கச் சென்றபோது, திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர். • அவ்விறைவனை, மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர். இதனால் மாணிக்கவாசகரை, 'அழுது அடியடைந்த அன்பர்' என்பர். • திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் அருளியன. • இவர் எழுப்பிய கோவில், தற்பொழுது ஆவுடையார்கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம் ) உள்ளது. • இவர்தம் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. நூற்குறிப்பு : • சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. • திருவாசகத்தில் அறுநூற்று ஐம்பத்தெட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. • திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யுமாதலால், 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்னும் தொடர் வழங்கலாயிற்று. • திருவாசகத்தின் சிறப்பை உணர்ந்த ஜி. யு. போப், இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். • திருவாசகத்திலுள்ள திரு என்பது, நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி; சதகம் என்பது, நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் • உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு,துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை. -ஜி.யு. போப் |
திருக்குறள். |
---|
ஆசிரியர் குறிப்பு:
•திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். •தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர் முதலிய பெயர்களால் போற்றுகின்றது. •பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர். •இவர் கி.மு. 31இல் பிறந்தவர் என அறிஞரால் உறுதி செய்யப்பட்டுத் திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. •தமிழக அரக, தைத் திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது. நூற்குறிப்பு : • திரு + குறள் = திருக்குறள். • மேன்மையான கருத்துகளைக் குறள் வெண்பாக்களால் கூறும் நூலாதலின், திருக்குறள் எனப் பெயர் பெற்றது. • இஃது ஈரடிகளில் இயற்றப்பட்டிருப்பினும் விரிவான பொருளைத் தருகின்றது. • இந்நூல் நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறது; • உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறுகிறது. • திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இஃது அறம், பொருள், இன்பம் என முப்பாலாகப் பகுக்கப்பட்டுள்ளது; • ஒன்பது இயல்களையும் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களையும், ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் கொண்டு விளங்குகிறது. • ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன் முதலிய உலகமொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. • திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். • தமிழ்ச் சான்றோர் பலரால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை, திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் புகழ்கிறது. • 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்றும், இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்றும், பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். • மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார். |
ஏலாதி |
---|
ஆசிரியர் குறிப்பு :
• ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார். • இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு. • இவர், சமண சமயத்தவர் என்பர். • இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துக்களை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார். • இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார். நூற்குறிப்பு : • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று. • இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது. • நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது. • இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது. • ஏலம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர். • இம்மருந்து, உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல, இந்நூலின் நற்கருத்துகள், கற்போரின் அறியாமையை அகற்றும். |
தந்தை பெரியார். |
---|
• ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப்பற்றே.
• மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது என்பது உறுதி. • தேசம் என்பது மொழியை அடிப்படையாகக்கொண்டு இயங்குவது. • ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த்தனை. - தந்தை பெரியார். |
Super sir
பதிலளிநீக்குminnal vega kanitham