எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
2024 Group 4 (VAO) 2 கேள்விகள் உறுதி
காலம் மற்றும் வேலை
1. நேரம் மற்றும் வேலை (8th New
Book) 2. விகிதங்கள் 3. சதவீதம் 4. மடங்கு 5. விலகிச் செல்வது 6. நேர்–எதிர் மாறல் (8th
New Book) 7. நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
(7th New Book) |
|||||
2013 Gr4 |
2014 Gr4 |
2016 Gr4 |
2018 Gr4 |
2019 Gr4 |
2022 Gr4 |
2 |
1 |
3 |
0 |
2 |
2 |
8th New Math Book
இவற்றை முயல்க [Box] |
1.
விக்ரம் ஒரு வேலையின் மூன்றில் ஒரு பகுதியை p நாள்களில் முடிப்பார் எனில், அவர் அந்த
வேலையின் 3/4 பகுதியை _____ நாள்களில் முடிப்பார்.
= 9/4
P
2.
m நபர்கள் ஒரு வேலையை n நாள்களில் முடிப்பர் எனில், 4m நபர்கள் அந்த வேலையை
______ நாள்களில் முடிப்பார் = n/4
3.
m நபர்கள் ஒரு வேலையை n நாள்களில் முடிப்பர் எனில், m/4 நபர்கள் அதே வேலையை
______ நாள்களில் முடிப்பார். = 4n
4.
ஒரு மாணவனால் 15 நிமிடங்களில் 21 பக்கங்களைத் தட்டச்சுச் செய்யமுடியும். இதே வேகத்தில்,
அந்த மாணவனுக்கு 84 பக்கங்கள் தட்டச்சுச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? = 60 நிமிடங்கள்
5.
35 பெண்கள் ஒரு வேலைய 16 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 28 பெண்கள் அதே. வேலையை
எத்தனை நாள்களில் செய்து முடிப்பர்? =
20 நாள்கள்
6.
x மற்றும் y ஆகியவை நேர் மாறலில் உள்ளன எனில், x = y = 5 எனும்போது, k இன் மதிப்பைக்
காண்க? k = 1
7.
x மற்றும் y ஆகியவை எதிர் மாறலில் உள்ளன எனில், x = 64 மற்றும் y = 0.75 எனும்போது,
விகிதசம மாறலின் மாறிலியைக் காண்க? 48 |
நேரம் மற்றும் வேலை
1.
A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாள்களில் முடிப்பர். A தனியே அந்த
வேலையை 48 நாள்களில் முடிப்பர் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பார்?
24 நாள்களில் முடிப்பார்.
2.
P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 30 நாள்களில் முடிப்பர் அவர்கள்
இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாள்கள் வேலை செய்த பிறகு Q ஆனவர்
சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P ஆனவர் 5 நாள்களில் முடிக்கிறார் எனில், தொடங்கியதிலிருந்து
எத்தனை நாள்களுக்கு பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்? Q ஆனவர்
வேலைத் தொடங்கி 9 நாள்களுக்கு பிறகு வேலையை விட்டுச் சென்றார் [விலகிச் செல்வது]
3.
A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை,
B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும்
சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க. = 9 நாள்கள்.
[மடங்கு]
4.
X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாள்களில் முடிப்பர்.
X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ₹
31000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க. = ₹15000, ₹10000,
₹6000. [விகிதங்கள்]
5.
கனி என்பவர், கொடுக்கப்பட்ட ஒரு வேலையை 2 மணி நேரத்திலும், விஜி என்பவர் 3 மணி நேரத்திலும்
முடிப்பார்கள் எனில், இருவரும் அந்த வேலையை ஒன்றாகச் சேர்ந்துச் செய்தால், எவ்வளவு
நேரத்தில் முடிப்பார்கள்? 6/5 மணிகள்.
நேர்–எதிர் மாறல்
6.
ஒரு நிறுவனமானது 20 நாள்களுக்கு 15 வேலையாள்களுக்கு ₹6
இலட்சம் தொகையை ஊதியமாக வழங்குகிறது எனில், அந்நிறுவனத்திற்கு 5 வேலையாள்களுக்கு
12 நாள்களுக்கு ஊதியமாக வழங்க எவ்வளவுத் தொகை தேவை? = ₹ 1.2 இலட்சம்.
(நேர்–நேர் மாறல்)
7.
180மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாள்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு
பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாள்கள் ஆகும்? = 16 நாள்கள். (நேர்–எதிர் மாறல்)
8.
81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஓர் ஓவியத்தை 56 நாள்களில் வண்ணமிடுவர் எனில்,
160 மீ நீளமுள்ள அது போன்ற ஒரு சுவரில் 27 நாள்களில் அந்த ஓவியத்தை எத்தனை மாணவர்கள்
வண்ணமிடுவர்? = 60 மாணவர்கள். (எதிர்–நேர்
மாறல்)
9.
48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாள்களில் முடிப்பர்
எனில், 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாள்களில்
முடிப்பர்? = 36 நாள்கள். (எதிர் – எதிர் மாறல்)
பின்வரும் வினாக்களில் இடம் பெற்றுள்ள வெவ்வேறு மாறல்களைக் கண்டறிக. [Book
Back]
10.
24 ஆண்கள் 12 நாள்களில் 48 பொருள்களை செய்வர் எனில், 6 ஆண்கள் 6 பொருள்களை 6 நாள்களில்
செய்வர்? = 6 நாள்கள்.
11.
15 வேலையாள்கள் 4 கி.மீ நீளமுள்ள சாலையை 4 மணி நேரத்தில் அமைப்பர் எனில், 15 வேலையாள்கள்
8 கி.மீ நீளமுள்ள சாலையை 8 மணி நேரத்தில் அமைப்பர்? 15
12.
நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 25 பெண்கள் 36 நாட்களில் முடிப்பர்
எனில், 20 பெண்கள் நாளொன்றுக்கு ………….. மணி நேரம் வேலை செய்து அதே வேலையை 30 நாள்களில்
முடிப்பர்? = 18 நாள்கள்
13.
ஒரு முகாமில் 98 நபர்களுக்கு 45 நாள்களுக்கு போதுமான 420 கி.கி அரிசி உள்ளது எனில்,
42 நபர்களுக்கு 60 கி.கி அரிசியானது …………. நாள்களுக்கு மட்டுமே போதுமானதாகும்? = 18 நாள்கள்
கலப்பு மாறல்,நேரம் மற்றும் வேலை (Book Back)
14. கோடிட்ட இடங்களை நிரப்புக :
(i)
A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும்
ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பர். = 2
(ii)
5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை
_________ நாள்களில் செய்து முடிப்பர். =
5
(iii)
A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து
ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை _______ நாள்களில்
முடிப்பார்.= 8
(iv)
A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல்
திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ______ நாள்களில் முடிப்பார். = 25 [சதவீதம்]
(v)
A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர்.
அவர்கள் இந்த வேலையை ₹200000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர்
எனில், A பெறும் தொகை _______ ஆகும். = ₹1,20,000 . [விகிதங்கள்]
15. 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து
ஒரு வேலையை 18 நாள்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து,
20 நாள்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை? =
162 ஆண்கள்
16.
ஒரு சிமிட்டி தொழிற்சாலையானது 36 இயந்திரங்களின் உதவியுடன் 12 நாள்களில் 7000 சிமிட்டி
பைகளைத் தயாரிக்கிறது. 24 இயந்திரங்களைப் பயன்படுத்தி 18 நாள்களில் எத்தனை சிமிட்டி
பைகளைத் தயாரிக்கலாம்? = 7,000
17.
ஒரு சோப்புத் தொழிற்சாலையானது நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்து 6 நாள்களில்
9600 சோப்புகளைத் தயாரிக்கிறது. நாளொன்றுக்கு கூடுதலாக 3 மணி நேரம் வேலை செய்து
14400 சோப்புகள் தயாரிக்க அதற்கு எத்தனை நாள்கள் ஆகும்? = 7 1/2 நாள்கள்.
18.
6 சரக்கு வண்டிகள் 5 நாள்களில் 135 டன்கள் சரக்குகளை இடம் பெயர்க்கின்றன எனில்,
180 டன்கள் சரக்குகளை 4 நாள்களில் இடம் பெயர்க்க எத்தனை சரக்கு வண்டிகள் கூடுதலாகத்
தேவை? = 4
19.
A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி
நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை
B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? =
4 மணிகள்.
20.
A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாள்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாள்களிலும்
A மற்றும் C ஆகியோர் அதை 20 நாள்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை
எத்தனை நாள்களில் முடிப்பர்? = 30 நாள்கள்,
20 நாள்கள், 60 நாள்கள்.
21.
தச்சர் A ஆனவர் ஒரு நாற்காலியின் பாகங்களைப் பொருத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார்.
அதே வேலையைச் செய்ய தச்சர் B ஆனவர் தச்சர்
A ஐ விட 3 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறார். இருவரும் இணைந்து வேலை செய்து
22 நாற்காலிகளின் பாகங்களைப் பொருத்த எவ்வளவு நேரமாகும்? = 180 நிமிடங்கள் (or) 3 மணி
22.
A ஆனவர் ஒரு வேலையை 45 நாள்களில் முடிப்பார் அவர் 15 நாள்கள் மட்டுமே வேலையைச் செய்கிறார்.
மீதமுள்ள வேலையை B ஆனவர் 24 நாள்களில் முடிக்கிறார் எனில், அந்த வேலையின் 80% ஐ இருவரும்
இணைந்து முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க. =
16 நாள்கள்.
23.
A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர்
ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை
நாள்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க. =
6 நாள்கள். [மடங்கு]
24.
32 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பர்
எனில், அந்த வேலையின் இரு மடங்கை எத்தனை ஆண்கள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து
24 நாள்களில் முடிப்பர்? = 48 ஆண்கள்
25.
அமுதா, ஒரு சேலையை 18 நாள்களில் நெய்வார். அஞ்சலி, அனிதாவை விட நெய்வதில் இரு மடங்கு
திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாள்களில் நெய்து முடிப்பர்?
= 6 நாள்கள். [மடங்கு]
26.
P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 12 மற்றும் 15 நாள்களில் முடிப்பர். P ஆனவர்
அந்த வேலையைத் தனியேத் தொடங்கிய பிறகு, 3 நாள்கள் கழித்து Q ஆனவர் அவருடன் சேர்ந்து
வேலையானது முடியும் வரை அவருடன் இருந்தார் எனில், வேலையானது எத்தனை நாள்கள் நீடித்தது?
= 8 நாள்கள். [விலகிச் செல்வது]
27.
ஒரு சிறு தொழில் நிறுவனம், 40 ஆண்களைப் பணியமர்த்தி 150 நாள்களில் 540 விசைப்பொறி இறைப்பிகளைத்
(Motor Pumps) தயாரித்து வழங்க ஓர் ஒப்பந்தத்தை எடுத்துக்கொள்கிறது. 75 நாள்களுக்குப்
பிறகு, அந்நிறுவனத்தால் 180 விசைப்பொறி இறைப்பிகளை மட்டுமே தயாரிக்க முடிந்தது. வேலையானது
ஒப்பந்தத்தின்படி நேரத்திற்கு முடிய வேண்டுமெனில், கூடுதலாக எத்தனை ஆண்களை அந்நிறுவனம்
பணியமர்த்த வேண்டும்? = 20
28.
P என்பவர் தனியே ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாள்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின்
2/3 பகுதியை 4 நாள்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை
எத்தனை நாள்களில் முடிப்பர்? = 3 நாள்கள்.
29.
X என்பவர் தனியே ஒரு வேலையை 6 நாள்களிலும், Y என்பவர் தனியே அதே வேலையை 8 நாள்களிலும்
முடிப்பர். X மற்றும் Y ஆகியோர் இந்த வேலையை ₹48000 இக்கு
ஒப்புக் கொண்டனர். Z என்பவரின் உதவியுடன் அவர்கள் அந்த வேலையை 3 நாள்களில் முடித்தனர்
எனில், தொகையில் Z இன் பங்கு எவ்வளவு? ₹
6000. [விலகிச் செல்வது]
7th New Math நேர்
மற்றும் எதிர் விகிதங்கள்
நேர் விகிதம்
1.
24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல் கொடுத்தால்
18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு? 72
2.
15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 1/2 கி.கி எடையில்
எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்? 750 அட்டைகள்
3.
அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ₹ 24 இக்கு வாங்கினார்.
அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்? ₹ 108
4.
ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள்.
அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? 5 மணி
50 நிமிடங்கள்.
6.
கோடிட்ட இடங்களை நிரப்புக
i)
8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை
_______ விடை : ₹84
ii)
பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3½ கி.கி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை
_______ விடை : 21 கி.கி
iii)
ஒரு மகிழுந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து
200 கி.மீ தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு _______ விடை : 10 லிட்டர்
iv)
7 மீ அளவுள்ள துணியின் விலை ₹ 294, எனில்
5 மீ அளவுள்ள துணியின் விலை? விடை : ₹210
v)
குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி
நேரத்தில் நிரப்புகிறது. எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின்
எண்ணிக்கை ______ விடை : 360
7.
ஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை ₹ 20 எனில்,
48 வாழைப் பழங்களின் விலை என்ன?
₹ 80
8.
ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டுகளிக்க 21 மாணவர்களுக்கு ₹840
நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்டது ₹1,680 ஐ நுழைவுக்
கட்டணமாகச் செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்? 42 மாணவர்கள்.
9.
ஒரு உணவு விடுதியின் 3 ஆம் தளத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
120 ஆட்கள் 8 முறை மின்தூக்கி (இயங்கு ஏணி) யில் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர்.
மின் தூக்கி, 12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் எத்தனை ஆட்கள் அங்குச்
சென்றிருப்பர்? 180 ஆட்கள் சென்றிருப்பார்.
10.
8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும்
மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு? கம்பத்தின்
நீளம் 40 மீ
11.
ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணி நேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில்.
அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்? 1107 கடிதங்கள் பிரிக்கப்படுகிறது.
12.
அரை மீட்டர் துணியின் விலை ₹ 15 எனில்,
8 1/3 மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு? ₹
250
13.
72 புத்தகங்களின் எடை 9 கி.கி எனில், அதே அளவுள்ள 40 புத்தகங்களின் எடை என்ன? (அலகு
முறையைப் பயன்படுத்துக) = 5 கிகி
14.
தாமரை வாடகைப் பணமாக ₹7500 ஐ, 3 மாதங்களுக்குச் செலுத்துகிறார்
எனில், அதே போல, அவர் ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் எவ்வளவு? (அலகு
முறையைப் பயன்படுத்துக) = ₹ 30,000
15.
30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில்
அவ்வயலை அறுவடை செய்வார்கள்? (அலகு முறையைப் பயன்படுத்துக) = 10 நாட்கள்
16.
வள்ளி 10 பேனாக்களை ₹ 108 இக்கு வாங்குகிறார். கமலா
8 பேனாக்களை ₹ 96 இக்கு வாங்குகிறார். இருவரின்
யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர்? (அலகு முறையைப் பயன்படுத்துக) = ₹
12 (கமலா விலை குறைவான பேனாக்களை வாங்கினார்)
17.
ஓர் இருசக்கர வாகனம் 100 கி.மீ தொலைவைக் கடக்க 2 லி பெட்ரோல் தேவைப்படுகிறது எனில்
250 கி.மீ தொலைவைக் கடக்கத் தேவையான பெட்ரோல் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக)
= 5 லிட்டர்
கொள்குறி வகை வினாக்கள் (Book Back)
18.
3 புத்தகங்களின் விலை ₹90, எனில் 12 புத்தகங்களின் விலை
i)
₹ 300 ii) ₹ 320 iii) ₹
360 iv) ₹
400 விடை : iii) ₹
360
19.
மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ₹ 75 இக்கு வாங்குகிறார்
எனில், அவர் ₹105 இக்கு ________ கி.கி உருளைக்கிழங்கை
வாங்குவார்.
i)
6 ii) 7 iii) 8 iv) 5 விடை : ii) 7
20.
ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது
எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை
__________
i)
150 ii) 70 iii)100 iv) 147 விடை : iv) 147
21.
280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில்
1400 நபர்கள் ________ முறை பயணம் செய்யலாம்.
i)
8 ii) 10 iii) 9 iv) 12 விடை : ii) 10
22.
50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3 கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது. எனில், 150 நபர்களுக்கு
இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ________
i)
9 ii)
10 iii)
15 iv) 6 விடை : i) 9
எதிர் விகிதம்
1.
60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள்
அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? 10
2.
ஒரு பெட்டி தக்காளியின் விலை ₹
200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை
₹ 260 என அதிகரித்தால் அவரிடம்
உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்? 10
3. கோடிட்ட இடங்களை நிரப்புக
i)
ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே
தொட்டியை _________ நிமிடங்களில் நிரப்பும். விடை
: 32
ii)
40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை
4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை _______ விடை : 80
4.
ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை நிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன.
ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு?
1 மணி 48 நிமிடம்
5.
ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர்
32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப்
போதுமானதாக இருக்கும்? 36 நாட்கள்
6.
ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக் கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும்
ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில் 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்? = 20 நாட்கள்
7.
நாற்பது மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 30 நாள்களுக்குத் தேவையான
உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால்
அவ்வுணவுப் பொருள் அவர்களுக்கு எத்தனை, நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? = 15 நாட்கள்
8.
500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (Parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம்
மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (Parcels) அவள் அனுப்புகிறாள்
எனில், ஒரு சிப்பத்தின் (Parcel) எடை எவ்வளவு இருக்கும்? = 100 கிராம்
9.
ஒரு தோட்டத்தைக் களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன
எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள்
தேவை? = 18 தோட்டக்காரர்கள்
10.
நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12
கி.மீ / மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில்
பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு? = 16 கி.மீ / மணி
11.
ஒரு பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 36 இயந்திரங்களைக் கொண்டு 54 நாள்களில் மகிழுந்து
பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. அதே அளவிலான மகிழுந்து பொம்மைகளை 81 நாள்களில் உற்பத்தி
செய்ய இயந்திரங்கள் தேவை? = 24 இயந்திரங்கள்
கொள்குறி வகை வினாக்கள் (Book Back)
12.
12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய
________ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.
i)
15 ii) 18 iii) 6 iv) 8 விடை : iii) 6
13.
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள்
கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை ________ நாள்களில் செய்து முடிப்பர்
i)
7 ii) 8 iii) 9 iv) 10 விடை : ii) 8
Book Back [நேர் மற்றும் எதிர் விகிதங்கள்]
14.
7 கி.கி வெங்காயத்தின் விலை ₹ 84 எனில் பின்வருவனவற்றைக்
காண்க
i)
₹ 180 இக்கு வாங்கிய வெங்காயத்தின்
எடை = 15 கிகி
ii)
3 கி.கி வெங்காயத்தின் விலை = ₹36
15.
C = kd, என்பதில்
i)
C இக்கும் d இக்கும் இடையேயுள்ள உறவு என்ன?
நேர் விகிதம்
ii)
C = 30 மற்றும் d = 6 எனில் k ன் மதிப்பு என்ன?
k = 5
iii)
d = 10 எனில், Cன் மதிப்பு என்ன? C = 50
16.
தமிழ்ச்செல்வன் ₹ 5000 ஐ மூன்று மாதத்திற்கு ஒரு
முறை வங்கிக்கணக்கில் சேமித்து வருகிறார். அவர் ₹1,50,000 ஐ
சேமிக்க எத்தனை வருடங்களாகும். = 90 மாதங்கள்
17.
ஓர் அச்சு இயந்திரம் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை 1 நிமிடத்தில் 30 பக்கங்கள்
என அச்சிடுகிறது. அவ்வச்சு இயந்திரம் அதே புத்தகத்தை 1 நிமிடத்தில் 25 பக்கங்கள் என
அச்சிட்டால், அச்சிட்டு முடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்? = 12 நிமிடங்கள்
19.
6 பழரசப் பாட்டில்களின் விலை ₹210, எனில்
4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன? = ₹ 140
20.
x ஆனது yன் இருமடங்கோடு எதிர்விகிதத் தொடர்புடையது. கொடுத்துள்ளபடி y = 6, எனில் xன்
மதிப்பு 4 y = 8 எனில் xன் மதிப்பைக் காண்க? =
3
21.
ஒரு சரக்கு வண்டி 594 கி.மீ தூரத்தை கடக்க 108 லி டீசல் தேவைப்படுகிறது எனில் அவ்வண்டி
1650 கி.மீ தூரத்தைக் கடக்கத் தேவைப்படும் டீசலின் அளவு எவ்வளவு? = 300 லிட்டர்
22.
ஒரு டசன் (dozen) சோப்புகளின் விலை ₹ 396, எனில்,
35 சோப்புகளின் விலை என்ன? = ₹ 1155
23.
ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில் பாட வேளைகள்
9 ஆக மாறும்போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு எவ்வளவு? = 35 நிமி
24.
105 நோட்டுப் புத்தகங்களின் விலை ₹ 2415. ₹
1863 இக்கு எத்தனை நோட்டுப் புத்தகங்கள் வாங்கலாம்? = 81 புத்தகங்கள்.
25.
10 விவசாயிகள் 21 நாட்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 14 விவசாயிகள்
எத்தனை நாள்களில் உழுது முடிப்பர்? = 15 நாட்கள்
26.
ஒரு வெள்ள நிவாரண முகாமில் 80 நபர்களுக்குத் தேவையான உணவு 60 நாள்களுக்குப் போதுமானதாக
உள்ளது. 10 நாள்களுக்குப் பின்னர், 20 நபர்கள் அந்த முகாமில் வந்து சேர்ந்தார்கள் எனில்,
அவ்வுணவு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? = 5 நாட்கள்
27.
6 நபர்கள் ஒரு வேலையை 12 நாள்களில் செய்து முடிக்கின்றனர். 2 நாள்கள் கழித்து மேலும்
6 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில், அவ்வேலையைச் செய்ய எத்தனை நாள்கள் எடுத்துகொள்வார்கள்?
= 5 நாட்கள்
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham