வேலு நாச்சியார் (11வது வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்) |
---|
• இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியைச் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செலுத்தினர்.
• வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார். • அவர் சிவகங்கை அரசரான முத்துவடுகர் பெரிய உடையாரை மணந்தார். • அவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற மகள் இருந்தார். • வேலு நாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதும், அவர் தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டு காலம் இருந்தார். • இக்காலகட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையைக் கட்டமைத்தார். • ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். • 1780இல் இவ்விருவரின் துணையோடு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார். • வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார். • அவர் ஆங்கிலேயரின் வெடிமருந்துக்கிடங்குகளைக் கண்டுபிடிப்பதற்குத் தன் உளவாளிகளைப் பயன்படுத்தினார். • நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார். • நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார். • இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார். • ஆற்காடு நவாப் வேலு நாச்சியாருடைய படை முன்னேறி வருவதைத் தடுக்கப் பல தடைகளை ஏற்படுத்தினார். • எனினும் நாச்சியார் அனைத்துத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிவகங்கைக்குள் நுழைந்தார். • ஆற்காடு நவாப் தோற்கடிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்டார். • சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய நாச்சியார் மருது சகோதரர்களின் துணையுடன் இராணியாக முடிசூடினார். • சின்ன மருது நாச்சியாரின் ஆலோசகராகவும் பெரிய மருது படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர். • 1783இல் ஆங்கிலேயர் சிவகங்கைக்கு மீண்டும் படையெடுத்து வந்தனர். • இம்முறை மருது பாண்டியர் சில இராஜதந்திர நடவடிக்கைகளால் சிவகங்கையின் பாதுகாப்பை உறுதி செய்தனர். • பிற்காலத்தில் ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி வேங்கண் பெரிய உடைய தேவர் சிவகங்கை அரசர் ஆனார். • 1790இல் இவருக்கு மணம் முடித்துவைக்கப்பட்ட வெள்ளச்சி நாச்சியார் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார். • வேலு நாச்சியார் நோயுற்று 1796இல் இறந்தார். |
வேலு நாச்சியார் (11வது வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்)
ஆகஸ்ட் 21, 2023
1
Tags
Thank you....very very useful
பதிலளிநீக்குminnal vega kanitham