Type Here to Get Search Results !

7th New Book நூல் வெளி (Unit 7, 8, 9)

0
நூல் வெளி (7th New Tamil பாடம் 7.1. விருந்தோம்பல்))
• பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
• இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
• பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
• பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இது நானூறு பாடல்களைக் கொண்டது.
• ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.
• இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 7.2 வயலும் வாழ்வும்)
• நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.
• இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.
• பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை “மலை அருவி” என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
• அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்)
• டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர்;
• தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்;
• இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர்.
• இவர் தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.
• இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார்.
• பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரை இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 8.1 புதுமை விளக்கு)
• பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
• நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்.
• அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
• பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
• இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.
• நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.

நூல் வெளி (7th New Tamil பாடம் 8.2. அறம் என்னும் கதிர்)
• முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
• இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
• இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.
• அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது.
• இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 8.3. ஒப்புரவு நெறி)
• மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
• குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.
• திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.
• நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார்.
• ஒப்புரவு நெறி என்னும் தலைப்பில் அடிகளார் கூறியுள்ள கருத்துகள் நம் பாடப் பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

நூல் வெளி (7th New Tamil பாடம் 8.4 உண்மை ஒளி)
• ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள்.
• புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்.
• இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர்.
• அவர்கள் தமது சிந்தனைகளைச் சிறு நிகழ்ச்சிகள், எளிய கதைகள் ஆகியவற்றின் மூலம் விளக்கினர்.
• ஜென் கதைகளுள் ஒன்று இங்குப் படக்கதையாகத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 9.1. மலைப்பொழிவு)
• கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
• இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.
• காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
• ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
• இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
• இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும்.
• இந்நூலில் உள்ள “மலைப்பொழிவு” என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

நூல் வெளி (7th New Tamil பாடம் 9.2. தன்னை அறிதல்)
• சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர்.
• மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
• இக்கவிதை “மகளுக்குச் சொன்ன கதை” என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 9.4 பயணம்)
• பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார்.
• கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
• வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• பிரயாணம் என்னும் நூலில் உள்ள பயணம் என்னும் சிறுகதை இங்குத் தரப்பட்டுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்