நூல் வெளி (7th New Tamil பாடம் 4.1 கலங்கரை விளக்கம்) |
---|
• கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
• இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். • இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். |
நூல் வெளி (7th New Tamil பாடம் 4.2 கவின்மிகு கப்பல்) |
---|
• மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
• கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே. • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார். • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. • புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. • இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். • இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. |
நூல் வெளி (7th New Tamil பாடம் 4.4 ஆழ்கடலின் அடியில்) |
---|
• அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்.
• இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். • அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர். • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார். • அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று. |
நூல் வெளி (7th New Tamil பாடம் 5.1 இன்பத்தமிழ்க் கல்வி) |
---|
• கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
• இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். • இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது. • பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. |
நூல் வெளி (7th New Tamil பாடம் 5.2 அழியாச்செல்வம்) |
---|
• நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
• இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். • இது நானூறு வெண்பாக்களால் ஆனது. • நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர். • திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. • இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம். |
நூல் வெளி (7th New Tamil பாடம் 5.3 வாழ்விக்கும் கல்வி) |
---|
• திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
• நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. • வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். • உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது. • இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது. |
நூல் வெளி (7th New Tamil பாடம் 5.4 பள்ளி மறுதிறப்பு) |
---|
• பள்ளி மறுதிறப்பு கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன்.
• இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்; • “கனவு” என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார். • பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். |
நூல் வெளி (7th New Tamil பாடம் 6.1 ஒரு வேண்டுகோள்) |
---|
• தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
• இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். • இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும். • மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். • பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது. |
நூல் வெளி (7th New Tamil பாடம் 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்) |
---|
• காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
• மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் • காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம். சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். • இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. |
minnal vega kanitham