Type Here to Get Search Results !

9th New Tamil நூல் நூலாசிரியர் Voice class 5

1

9th New Tamil
நூல் நூலாசிரியர்



ஒன்பதாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகத்தில் உள்ள நூல் நூலாசிரியர் முழுவதும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலை எழுதியவர்? கால்டுவெல்
2. 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
3. தமிழ் விடு தூது - ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை.
4. பெரியபுராணம் - சேக்கிழார் (அருண்மொழித்தேவர்)
5. நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்டது? திருத்தொண்டர் திருவந்தாதி.
6. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் - சீத்தலைச் சாத்தனார் (தண்டழிச் சாத்தன், தண்டமிழ்ப்புலவன்.)
7. இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர்? சாவித்திரபாய் பூலே
8. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
9. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்.
10. இராவண காவியம் - புலவர் குழந்தை
11. தி. ஜானகிராமன் - உதயசூரியன்
12. முத்தொள்ளாயிரம் - எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை.
13. தாவோ தே ஜிங் கவிதையை மொழிபெயர்த்தவர் சி.மணி
14. லாவோர்ட்சு இயற்றிய நூல்? தாவோ தே ஜிங்
15. யசோதர காவியம்- ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை
16. இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு (தமிழக அரசின் பரிசு)? மா.சு.அண்ணாமலை
17. ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு. மேத்தா
18. தமிழ் பழமொழிகள் – கி.வா. ஜகந்நாதன்
19. இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – செ.தமிழ்ச்செல்வன்
20. ஆண்டாள் பாடிய நூல்கள் யாவை? திருப்பாவை, நாச்சியார் திருமொழி
21. வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் இப்பகுதி பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
22. ந.பிச்சமூர்த்தி -
i. முதல் சிறுகதை – ஸயன்ஸூக்பலி என்பதாகும் 1932-ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றவர்
ii. பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.
23. குறுந்தொகை - பாலை பாடிய பெருங்கடுங்கோ (1915-ம் ஆண்டு செளரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்)
24. செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
25. வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது
26. தமிழ் ஒளி (விஜயரங்கம்)
1. நிலைபெற்ற சிலை,
2. வீராயி,
3. கவிஞனின் காதல்,
4. மே தின வருக,
5. கண்ணப்பன் கிளிகள்,
6. குருவிப்பட்டி,
7. தமிழர் சமுதாயம்,
8. மாதவி காவியம்
27. பாரதிதாசனின் (கனக.சுப்புரத்தினம்)
1. பாண்டியன் பரிசு,
2. அழகின் சிரிப்பு,
3. இருண்ட வீடு,
4. குடும்ப விளக்கு (மறுமலர்ச்சி இலக்கியம்)
5. தமிழியக்கம்
6. பிசிராந்தையார் (சாகித்திய அகாதெமி விருது)
28. சு.சமுத்திரம்
1. வாடாமல்லி,
2. பாலைப்புறா,
3. மண்சுமை,
4. தலைப்பாகை,
5. காகித உறவு
6. வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதெமி விருது)
7. குற்றம் பார்க்கில் (தமிழக அரசின் விருது)
29. கல்யாண்ஜி (கல்யாணசுந்தரம்)
1. புலரி,
2. முன்பின்,
3. ஆதி,
4. அந்நியமற்ற நதி,
5. மணல் உள்ள ஆறு
6. ஒரு சிறு இசை (2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி)
கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்”
எழுதிய கட்டுரை தொகுப்பு “அகமும் புறமும்”
30. ஈரோடு தமிழன்பன் (ஜெகதீசன்)
1. தமிழோவியம்
2. ஹைக்கூ,
3. சென்ரியு,
4. லிமரைக்கூ
5. வணக்கம் வள்ளுவ (2004-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது)
6. தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)
31. கல்யாண்ஜி எழுதிய சிறு கதை தொகுப்பு
1. கலைக்க முடியாத ஒப்பனை
2. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
3. உயரப் பறத்தல்
4. ஒளியிலே தெரிவது
32. திருத்தக்க தேவர்
1. நரிவிருத்தம்
2. சீவக சிந்தாமணி
33. ஈ.த. இராஜேஸ்வரி
1. சூரியன்,
2. பரமாணுப் புராணம்

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham