Type Here to Get Search Results !

12th Tamil Unit- 2 நூல்வெளி

0
12th தமிழ் இயல் 2 நூல்வெளி
பிறகொரு நாள் கோடை - அய்யப்ப மாதவன்
i. இக்கவிதை 'அய்யப்ப மாதவன் கவிதைகள்' என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
ii. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்;
iii. இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர்;
iv. 'இன்று' என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

நெடுநல்வாடை – நக்கீரர்
i. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று;
ii. 188 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
iii. இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது.
iv. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.

முதல்கல் – உத்தமசோழன்
i. உத்தம சோழன் (செல்வராஜ்) எழுதிய "முதல்கல்" கதை பாடமாக உள்ளது.
ii. தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பில் இது இடம் பெற்றுள்ளது.
iii. உத்தம சோழன் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைச் சேர்ந்தவர்;
iv. மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்;
v. "கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

தெரியுமா? பெருமழைக்காலம்
புயலுக்குப் பெயர்
சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி வங்கக்கடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் ஒவ்வொன்றும் எட்டுப் பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கின்றன. அந்தப் பட்டியலில் உள்ள 64 பெயர்களின் வரிசைப்படிதான் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படுகிறது.
மழையைக் கணிக்கும் அறிகுறிகள்:
குஜராத்தில் உள்ள ஆனந்த் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறிப்பிடும், மழையைக் கணிக்கும் அறிகுறிகள். கார் மேகங்கள், சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல், செம்மை நிற மேகங்கள், திடீர்ப் புயல், காற்றின் திசை, இடி, மின்னல், பலமான காற்று, வானவில், முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள், பறக்கும் பருந்து, சூரியனைச் சுற்றி ஒளிவட்டம், வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை, தூசுப் பனிமூட்டம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்