19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
அ) 1827
ஆ) 1829
இ) 1826
ஈ) 1927
[விடை: (ஆ) 1829]
2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரம்ம சமாஜம்
இ) பிரார்த்தனை சமாஜம்
ஈ) ஆதி பிரம்ம சமாஜம்
[விடை: (அ) ஆரிய சமாஜம்]
3. யாருடைய பணியும் இயக்கமும், 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஆ) இராஜா ராம்மோகன் ராய்
இ) அன்னிபெசன்ட்
ஈ) ஜோதிபா பூலே
[விடை: (அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்]
4.‘ராஸ்ட் கோப்தார்' யாருடைய முழக்கம்?
அ) பார்சி இயக்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) இராமகிருஷ்ணர்
ஈ) திராவிட மகாஜன சபை
[விடை: (அ) பார்சி இயக்கம்]
5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ) பாபா தயாள் தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) குருநானக்
ஈ) ஜோதிபா பூலே
[விடை: (ஆ) பாபா ராம்சிங்]
6. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
அ) M.G. ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) ஜோதிபா பூலே
ஈ) அய்யன்காளி
[விடை: (அ) M.G. ரானடே]
7. 'சத்யார்த்தபிரகாஷ்' எனும் நூலின் ஆசிரியர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) அயோத்தி தாசர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) சுவாமி சாரதாநந்தா
[விடை: (அ) தயானந்த சரஸ்வதி]
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ராமலிங்க அடிகள் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் ரானடே.
3. குலாம்கிரி நூலை எழுதியவர் ஜோதிபா பூலே.
4. இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தர் ஆல் நிறுவப்பட்டது.
5. சிங்சபா அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
6. ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிகையைத் துவக்கியவர் அயோத்தி தாசர் ஆவார்.
III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1. i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.
ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
iv) இராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.
அ) i) சரி
ஆ) i), iv) ஆகியன சரி
இ) i), ii), iii) ஆகியன சரி
ஈ) i), iii) ஆகியன சரி
[விடை: (ஆ) i), iv) ஆகியன சரி]
2. i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) i), ii) ஆகியன சரி
ஈ) iii), iv) ஆகியன சரி
[விடை : (இ) i), ii) சரி]
3. i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.
iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.
அ) i) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) i), iii) மற்றும் iv) சரி
[விடை : (ஆ) i) மற்றும் ii) சரி]
4. கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
[விடை: (அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.]
IV. பொருத்துக.
1. ஒரு பைசா தமிழன் - விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்
2. திருவருட்பா - நிரங்கரி இயக்கம்
3. பாபா தயாள்தாஸ் - ஆதி பிரம்மசமாஜம்
4. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் - பத்திரிகை
5. தேவேந்திரநாத் - ஜீவகாருண்யப் பாடல்கள்
விடை:
1. ஒரு பைசா தமிழன் - பத்திரிகை
2. திருவருட்பா - ஜீவகாருண்யப் பாடல்கள்
3. பாபா தயாள்தாஸ் - நிரங்கரி இயக்கம்
4. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் - விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்
5. தேவேந்திரநாத் - ஆதி பிரம்மசமாஜம்
minnal vega kanitham