இந்திய அரசியலமைப்பு சட்டம்
1.
இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1950
-ஜனவரி -26.
2.
1929 ஆண்டு எந்த காங்கிரஸ் மாநாட்டில் முழுசுயராஜ்யம் அடைவது முழக்கம் வலுப்பெற்றது
- லாகூர்.
3.
முழுசுதந்திர நாளாக கொண்டாடப்பட்ட ஆண்டு - 1930
-ஜனவரி 26.
4.
நமது நாட்டின் உயர்ந்த சட்டம் - இந்திய அரசியலமைப்பு சட்டம்.
5.
இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1946. நவம்பர் - 09
6.
இந்திய அரசியலமைப்பு எழுதிமுடிக்கப்பட்ட நாள் -1949. நவம்பர் - 26.
7.
அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படும் நாள்- நவம்பர் -26.
8.
இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றம் உருவாக்கப்பட்டபோது இருந்த உறுப்பினர்கள் - 389.
9.
இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையின் நிரந்தர தலைவர் - ராஜேந்திர
பிரசாத்.
10.
இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையின் தற்காலிக தலைவர் - சச்சிதானந்த சின்ஹா.
11.
அரசியலமைப்பு நிர்ணைய சபையில் இருந்த பெண் உறுப்பினர்கள் -15 பேர்.
12.
அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவர் - அம்பேத்கார்.
13.
வரைவுக்குழுவின் மொத்த உறுப்பினர்கள் - 8 பேர்.
14.
வரைவுக்குழுவின் ஆலோசகர் - பி.என். ராவ்.
15.
அரசியலமைப்பின் வரைவுக்குவின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு – 1946 டிசம்பர் - 9.
16.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை - அம்பேத்கார்.
17.
இங்கிலாந்து, அமேரிக்கா , ரஷ்யா , ஃப்ரான்ஸ் , சுவிட்சர்லாந்து உட்பட எத்தனை நாடுகள்
அரசியலமைப்பு சட்டங்களை வாசித்து அரசியலமைப்பு உருவாக்கினர் – 60.
18.
அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்வதற்கு முன்னர் எத்தனை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன
- 2000.
19.
அரசியலமைப்பு சட்டம் எழுதி முடிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் – 2 -ஆண்டு , 11- மாதம் , 18- நாட்கள்.
20.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க ஆன செலவு - 64 லட்சம்.
21.
அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை என்பது - முகவுரை.
22.
ஒரு நாட்டின் உச்ச நிலை அதிகாரம் - இறையான்மை.
23.
இந்திய குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது - 18.
24.
அடிப்படை கடமைகள் - 11.
25.
அரசியலமைப்பு சட்டம் 16-09-2016 வரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது - 101.
26.
இந்திய அரசியலமைப்பு உண்மைபிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் எந்த வாயு
நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது - ஹீலியம் வாயு.
27.
அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்கள்:
1.
பி.ஆர். அம்பேத்கர்.
2. என். கோபால்சாமி.
3. கே. எம் முன்சி.
4. சையது முகம்மது சாதுல்லா.
5. என். மாதவராவ்.
6.
டி.டி கிருஷ்ணமாச்சாரி.
7. அல்லாடி கிருஷ்ணசாமி.
28.
அடிப்படை உரிமைகள்:
1. சமத்துவ உரிமை.
2. சுதந்திர உரிமை.
3. சுரண்டலுக்கெதிரான உரிமை.
4. சமய சுதந்திர உரிமை.
5. கல்வி கலாச்சார உரிமை.
6. சட்டத்தீர்வு பெறும் உரிமை.
29.
முகவுரை :
1. இறையான்மை.
2. சமத்துவம் .
3. சமயசார்பின்மை.
4. மக்களாட்சி.
5. குடியரசு.
30.
அரசியல்லமைப்பு சட்டம் உருவானபோது இருந்த உறுப்புகள் ,பகுதி, அட்டவனை:
1. உறுப்புகள் 395.
2. பகுதி - 22 .
3. அட்டவனை - 8 .
31.
அரசியல்லமைப்பு சட்டம் தற்போது உள்ள உறுப்புகள் ,பகுதி, அட்டவனை:
1. உறுப்புகள் - 448.
2. பகுதி -25.
3. அட்டவனை -12.
32.
அரசியலமைப்பு சட்டம் உருவாக்குவதில் இருந்த சிலர்:
1. ஜவஹர்லால் நேரு .
2. சர்தார் வல்லபாய் பட்டேல்.
3. மெளலானா ஆஸாத்.
4. எஸ் ராதாகிருஷ்ணன்.
5. விஜயலஷ்மி பண்டிட்.
6. சரோஜிணி நாயுடு.
Book Back
1.
கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
அ)
பிறப்பின் மூலம்
ஆ)
சொத்துரிமை பெறுவதன் மூலம்
இ)
வம்சாவழியின் மூலம்
ஈ)
இயல்பு குடியுரிமை மூலம்
விடை: ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்
2.
அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக்
குறிப்பிடுகின்றன?
அ)
பகுதி II
ஆ)
பகுதி II பிரிவு 5-11
இ)
பகுதி II பிரிவு 5-6
ஈ)
பகுதி I பிரிவு 5-11
விடை: ஆ) பகுதி II பிரிவு 5-11
3.
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
அ)
பிரதமர்
ஆ)
குடியரசுத் தலைவர்
இ)
முதலமைச்சர்
ஈ)
இந்திய தலைமை நீதிபதி
விடை: ஆ) குடியரசுத் தலைவர்
4.
ஒரு நாட்டின் _____________, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப்
பெறத் தகுதியுடையவர் ஆவார். விடை: குடிமக்கள்
5.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது. விடை: ஒற்றைக்
6.
இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன்
______________ என அழைக்கப்படுகிறார். விடை:
வெளிநாட்டு வாழ் இந்தியன்
7.
மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் __________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர். விடை: குடிமை பொறுப்பை
8.
___________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு
யோசனை ஆகும். விடை: உலகளாவிய குடியுரிமை
9. ஒரு இந்தியக்
குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
i)
ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
ii)
பதிவு செய்வதன் மூலம்
iii)
தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv)
போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
அ)
i மற்றும் ii சரி
ஆ)
i மற்றும் iii சரி
இ)
i, ii, iv சரி
ஈ)
i, ii, iii சரி,
விடை: ஆ) i மற்றும் iii சரி
10.
கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள்
இந்திய குடிமக்களாயினர்.
காரணம்
: 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில்
அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.
அ)
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ)
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்லல
இ)
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ)
காரணம், கூற்று இரண்டும் தவறு
விடை: அ) காரணம் கூற்றிற்கான சரியான
விளக்கம்
11.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. விடை: தவறு
12.
வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு
வாக்குரிமை உண்டு. விடை: தவறு
13.
அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம்
அளிக்கிறது. விடை: சரி
14.
நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது. விடை: தவறு
minnal vega kanitham