Type Here to Get Search Results !

Day 14 Notes || இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்


 

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் (61 வினாக்கள்)

1. தொடக்க இடைக்கால இந்திய வரலாற்றின் கால அளவு யாது? கி.பி. 700  முதல் கி.பி. 1200 வரை

2. பின் இடைக்கால இந்திய வரலாற்றில் கால அளவு யாது? கி.பி. 1200 முதல் கி.பி. 1700 வரை

3. அவுரங்கசீப்பின் அவைகளை வரலாற்று அறிஞராக இருந்தவர் யார்? காஃபிகான்

4. கல்வெட்டுகள் செப்பு பட்டயங்கள் நாணயங்கள் ஆகியவை எவ்வகை சான்றுகள்? முதல் நிலைசான்றுகள்

5. இலக்கியங்கள் காலவரிசையில் ஆன நிகழ்வு பதிவுகள் பயணக்குறிப்புகள் வாழ்க்கை வரலாற்று நூல்கள் சுயசரிதைகள் ஆகியன எவ்வகை சான்றுகள்? இரண்டாம் நிலை சான்றுகள்

6. பிற்கால சோழர்களின் காலம் எது? கி.பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை

7. திருவாலங்காடு செப்பேடுகள் யாருடையது? முதலாம் ராஜேந்திர சோழன்

8. அன்பில் செப்பேடுகள் யாருடைய காலத்தை சார்ந்தது? சுந்தர சோழன்

9. கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்க பட்டன என்பது குறித்த செய்திகளை தெரிவிக்கின்ற கல்வெட்டு எது? காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு

10. பிராமணருக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? பிரம்மதேயம்

11. கல்வி நிலையங்களை பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சாலபோகம்

12. கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தேவதானம்

13. சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? பள்ளிச் சந்தம்

14. கஜுராஹோ கோயில் எங்கு உள்ளது? மத்திய பிரதேசம்

15. தில்வாரா கோயில் எங்கு உள்ளது? அபு குன்று

16. கோனார்க் கோயில் எங்கு உள்ளது? ஒடிசா

17. விருபாக்ஷா கோயில்கள் எங்கு உள்ளன?

18. வித்தாளா விருபாக்ஷா கோவில்கள் எங்கு உள்ளன? ஹம்பி

19. சார்மினார் எங்கு உள்ளது? ஹைதராபாத்

20. தௌலதாபாத் என்ழைக்கப்படுவது எது? அவுரங்காபாத்

21. பெரோஸ் ஷா கொத்தளம் எங்கு உள்ளது? டெல்லி

22. நாணயங்களில் பெண் தெய்வமான லட்சுமியின் வடிவத்தையும் தனது பெயரையும் பொறிக்கச் செய்த முகாலய மன்னர் யார்? முகமது கோரி

23. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள பயன்படும் செப்பு நாணயம் எது? ஜிட்டல்

24. இல்துமிஷ் அறிமுகம் செய்த நாணயத்தின் பெயர் என்ன? டங்கா என்னும் வெள்ளி நாணயம்

25. ஒரு வெள்ளி டங்கா= 48 ஜிட்டல்

26. ஒரு ஜிட்டல் = 3.6 வெள்ளி குன்றிமணி

27. யாருடைய காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகிறது? சோழர்கள் காலம்

28. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்? நாதமுனி

29. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? சேக்கிழார்

30. தேவாரம் யாரால் தொகுக்கப்பட்டது? நம்பியாண்டார் நம்பி

31. திருவாசகத்தை இயற்றியவர் யார்? மாணிக்கவாசகர்

32. 12ம் நூற்றாண்டை சேர்ந்த கீதகோவிந்தம் என்னும் நூலை இயற்றியவர் யார்? ஜெயதேவர்

33. கபீர்தாஸ் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்? பதினைந்தாம் நூற்றாண்டு

34. மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார்? கங்காதேவி

35. ஆமுக்த மால்யதா என்ற நூலின் ஆசிரியர் யார்? கிருஷ்ணதேவராயர்

36. பிரித்திவிராஜ் ராசு என்ற நூலை இயற்றியவர் யார்? சந்பரிதை

37. பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜதரங்கிணி என்ற நூலின் ஆசிரியர் யார்? கல்ஹாணர்.

38. தப்பாகத் -இ-நஸ்ரி என்ற நூலை எழுதியவர் யார்? மின்கஜ் உஸ் சிராஜ்

39. தாஜ் உள் மா அசீர் என்னும் நூலை எழுதியவர் யார்? அசன் நிஜாமி

40. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற முதல் நூல் எது? தாஜ் உல்மா அசிர்

41. முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்று ஆசிரியர் யார்? ஜியா உத் பரணி

42. தாரிக்-இ- ப்ரோசாகி என்னும் நூலைப் படைத்தவர் யார்? ஜியா உத் பரணி

43. தாரிக்-இ- பெரிஸ்டா என்னும் நூலை எழுதியவர் யார்? பெரிஷ்டா

44. தப்பாகத் என்ற அரேபிய சொல்லின் பொருள் யாது? தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள்

45. தச்சுக் என்ற பாரசீகச் சொல்லின் பொருள் யாது? சுயசரிதை

46. தாரிக் அல்லது தாகுய்க் என்ற அரபிச் சொல்லின் பொருள் யாது? வரலாறு

47. பாபர் நாமா என்ற நூலின் ஆசிரியர் யார்? பாபர்

48. அயனி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் யார்? அபுல் பாசல்

49. அக்பர் நாமா என்ற நூலின் ஆசிரியர் யார்? அபுல் பாசல்

50. தசுக்-இ-ஜஹாங்கிரி என்ற நூலின் ஆசிரியர் யார்? ஜஹாங்கீர்

51. தபகத்-இ-அக்பரி என்ற நூலின் ஆசிரியர் யார்? நிஜாமுதீன் அஹமத்

52. தாரி-இ-பதானி என்ற நூலின் ஆசிரியர் யார்? பதானி

53. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்? வெனிஸ் நகர பயணி மார்க்கோ போலோ

54. மார்க்கோபோலோ தமிழ்நாட்டில் இவ்விடத்திற்கு வருகை புரிந்தார்? தூத்துக்குடியில் உள்ள காயல் துறைமுகம்

55. தாகுயூக்-இ-ஹிந் என்ற நூலை எழுதியவர் யார்? அல்பருனி

56. ரேக்ளா பயணங்கள் என்ற நூலை எழுதியவர் யார்? அரேபியாவை சேர்ந்த இபன் பதூதா

57. தனது தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய முகாலய மன்னர் யார்? முகமது பின் துக்ளக்

58. கி.பி.1420 இல் விஜய நகரத்திற்கு வந்த வெளிநாட்டு பயணி யார்? இத்தாலியப் பயணி நிக்கோலா கோண்டி

59. கி.பி.1522 விஜய நகரத்துக்கு வருகை புரிந்த போர்த்துகீசிய பயணி யார்? டோமிங்கோ பயஸ்

60. கீர்த்தி 1443 விஜய நகரத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்? அப்துல் ரசாக்

61. மத்திய ஆசியாவின் மாபெரும் அரசனான செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம் எது? ஹீரட் 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.