Type Here to Get Search Results !

Day 1 Notes & Book Back || 6th New Book சிந்துவெளி நாகரிகம்

4

 

6th New Book சிந்துவெளி நாகரிகம்   (75 QUESTIONS)

1. வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது? கிரேக்க மொழி

2. இஸ்டோரியா என்ற சொல்லின் பொருள் என்ன? விசாரிப்பதன் மூலம் கற்றல்

3. தம்மா என்பது எந்த மொழிச்சொல்? பிராகிருதம்

4. சமஸ்கிருதத்தில் தர்மா என்பதன் பொருள் என்ன? அறநெறி

5. வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார்? அசோகர்

6. உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர் யார்? அசோகர்

7. தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகரின் எந்தத்  தூணிலிருந்து பெறப்பட்டத? சாரநாத் கல்தூண்

8. எந்த ஆய்வாளர்கள் அசோகரின் சிறப்புகளை வெளியுலகுக்கு கொண்டு வந்தனர்? வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம்

9. எந்த ஆங்கில எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டார்? சார்லஸ் ஆலன்

11. நெருப்பின் பயனை அறிந்து இருந்த மனித இனம் எது? ஹோமோ ஏராக்டஸ்      

12. எங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித காலடித்தடங்கள் 3.5 மில்லியன் ஆண்டுகள்  பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது? கிழக்கு ஆப்பிரிக்கா தான்சானியா

13. மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி படிப்பதற்கு பெயர்? மானுடவியல் anthropology

14. anthropology என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது? கிரேக்க மொழி

15. குரோமேக்னான்ஸ் மனிதர்கள் எங்கு வாழ்ந்ததாக சான்றுகள் கிடைத்துள்ளன?  லாஸ்காஸ் பிரான்ஸ்

16. ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனித இனம் வாழ்ந்த இடம்? கிழக்கு ஆப்பிரிக்கா

17. ஹோமோ ஹெபிலிஸ் மனித இனம் வாழ்ந்த இடம்? தென்னாப்பிரிக்கா

18. ஹோமோ எரக்டஸ் மனித இனம் வாழ்ந்த இடம்? ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா

19. நியாண்டர்தால் மனித இனம் வாழ்ந்த இடம்? ஐரோப்பா மற்றும் ஆசியா (யுரேசியா)

20. குரோ மேக்னான்ஸ மனித இனம் வாழ்ந்த இடம்? பிரான்ஸ்

21. பீக்கிங் மனிதன் வாழ்ந்த இடம்? சீனா

22. ஹோமோ செப்பியன்ஸ் வாழ்ந்த இடம்? ஆப்பிரிக்கா

23. ஹைடல்பர்க் மனிதன் வாழ்ந்த இடம்? லண்டன்

24. மனிதர்கள் நெருப்பை உருவாக்க எந்தக் கல்லை பயன்படுத்தினார்கள்? சிக்கிமுக்கி கல்

25. தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களின் இடங்களை குறிப்பிடுக1.கீழ்வலை -2.உசிலம்பட்டி -3.குமுதிபதி -4.மாவடைப்பு5.பொறிவரை -1.விழுப்புரம்2. மதுரை 3.கோவை 4.கோவை 5.கரிக்கையூர் நீலகிர

26. மெசோபடோமியா நாகரிகத்தின் காலகட்டம் என்ன? கி.மு. 3500 முதல் கி.மு 2000 வரை

27. எகிப்து நாகரிகத்தின் கால கட்டம் என்ன?  கி.மு 3100 முதல் கி.மு 1100 வரை

28. சீன நாகரிகத்தின் கால கட்டம் என்ன? கி.மு 1700 முதல் கி.மு 1122 வரை

29. ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன் முதலில் தனது நூலில் விவரித்தவர் யார்? சார்லஸ் மேசன்

30. அந்த பாழடைந்த கோட்டை உயரமான சுவர்கள் உடனும் கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டவர் யார்? சார்லஸ் மேசன்

31. எப்போது லாகூரிலிருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைத்தனர்? 1856

32. நாகரீகம் என்ற வார்த்தை எந்த மொழி வார்த்த? லத்தின்

33. சிவிஸ் என்ற லத்தின் வார்த்தையின் பொருள் என்ன? நகரம்

34. எந்த ஆண்டு இந்திய தொல்லியல் றை உருவாக்கப்பட்டது? 1861

35. இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? புதுதில்லி

36. மெகர்கர் எங்கு அமைந்துள்ளது? போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு பலுசிஸ்தான் மாநிலம் பாகிஸ்தான்

37. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் ஒன்று  ராக்கிகார்க்கியில் கண்டுபிடிக்கப்பட்டது இது எங்கு அமைந்துள்ளது? ஹரியானா மாநிலம்

38. சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட எந்த அரசன் சிந்துவெளிப் பகுதியில்  உள்ள மெலுக்கா எனுமிடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதி உள்ளார்? நாரம் சின்

39. கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டத? லோத்தல் குஜராத்

40. லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் எங்கு அமைந்துள்ளது? சபர்மதி ஆற்றின் துணை ஆற்றில்

41. அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எங்கு உள்ள கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? மொகஞ்சதாரோ

42. தந்தத்தினால் ஆன அளவுகோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளத? குஜராத்

43. முதன்முதலில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது? செம்பு

44. நடன மாது என அழைக்கப்படும் பெண் சிலை எதனால் செய்யப்பட்டிருந்தது? வெண்கலம்

45. இன்றும் கொற்கை வஞ்சி தொண்டி மத்ரை உறை கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன? பாகிஸ்தான்

46. கொற்கை பூம்புகார் போன்ற இடங்கள் எங்கு உள்ளன? ஆப்கானிஸ்தான்

47. காவ்ரி மற்றும் பொருண்ஸ் ஆகிய ஆறுகள் எங்கு உள்ளன? ஆப்கானிஸ்தான்

48. காவிரிவாலா மற்றும் பொருணை ஆகிய பெயர்கள் எங்கு உள்ளன? பாகிஸ்தான்

49. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த கற்களைப் பயன்படுத்தினார்கள்? கார்னிலியன்

50. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலகத்தின் பயன் பற்றி தெரியாத? இரும்பு

51. எந்த ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது? கி.மு 1900

52. கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் ஐசோடோப் எது? கார்பன் 14

53. குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கிசே பிரமிடு எப்போது கட்டப்பட்டது? கி.மு 2500

54. ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊரின்  பெயர் என்ன? ஜிகரெட்

55. எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக்  கோவில்கள் உள்ள இடத்தின் பெயர்? அபு சிம்பல்

56.சிந்துவெளி நாகரிகத்தின் எல்லை?

மேற்கு-மக்ரான் கடற்கரை                                            

கிழக்கு-காக்ரா-ஹாக்ரா நதிப்பள்ளதாக்கு                                       

வடகிழக்கு- ஆப்கானிஸ்தான்.                                                

தெற்கு- மஹாராஷ்டிரா

57.மெசபடோமியா வின் சந்திர கடவுளின் பெயர் என்ன?சின்

58. உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொது குளம் எங்கு உள்ளது? மொகஞ்சதாரோ

59.மெசபடோமியாவில் சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட கோவில் எங்கு உள்ளது யாரால் கட்டப்பட்டது? ஜிகரட் ஊர் நம்மு

60.இரட்டைக் கோயில்கள் யாரால் எங்கு கட்டப்பட்டது? இரண்டாம் ராமெசிஸ் அபு சிம்பல்

61.மொஹஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் யாது? இறந்தவர்களின் மேடு

62.முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரீகம் எது? ஹரப்பா

63.முதன்முதலில் பருத்திச் செடியை வளர்த்தவர்கள் யார்? சிந்து சமவெளி மக்கள்   

64.கதிரியக்க கார்பன் வயது கணிப்பில் பயன்படும் ஐசோடோப்பு எது? C14

65.ஹரப்பா நாகரீகம் கிராம நாகரிகமா அல்லது நகர நாகரிகமா? நகர நாகரீகம்

66. ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சம் இருப்பதை கண்டறிந்த ஆண்டு -1924.

67. இந்திய தொல்லியல் துறை எந்து நில அலவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்.

68. சிந்து வெளி நாகரிகத்தின் முன்னோடி - மெஹெர்கர்.

69. மொஹஞ்சதாரோவில் இருந்த மிகப்பெரிய பொதுக்கட்டடம் - கூட்ட அரங்கு - 20 தூண் - 4 வரிசை.

70. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தந்தத்தினால் ஆன அளவுகோளின் சிறிய அளவீடு - 1704 மி.மீ.

71. ஹரப்பா நாகரிகம் :     

1.  நகர நாகரிகம்.

2. சிறப்பான - நகத்திட்டமிடல்.

3. சிறப்பான - கட்டிடக்கலை வேலைப்பாடு.

4. தூய்மை , பொது சுகாதரத்திற்கு முன்னுரிமை.

5. தரப்படுத்தப்பட்ட - எடைகள் , அளவீடுகள்.

72. ஹரப்பா சரியத்தொடங்கிய காரணம்:

1. சுற்றுசூழல் மாற்றம்.

2. படையெருப்பு.

3. இயற்கை சீற்றம்.

4. காலநிலை மாற்றம்.

5. காடுகள் அழிதல்.

6. தொற்று நோய்த் தாக்குதல்.

73. நாகரிகத்தின் பரப்பளவு:

1. மேற்கு  - பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரைவரை.

2. கிழக்கு  - காகர் - ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை.

3. வடகிழக்கில் - ஆப்கானிஸ்தான்.

4. தெற்கு - மகாராஷ்ரா பரவியுள்ளது.

74. ஹரப்பா நாகரிகம்:

1. புவி எல்லை  - தெற்கு ஆசியா.

2. காலப்பகுதி - வெண்கலக் காலம்.

3.  காலம் - பொ.ஆ.மு 3300 1900.

4. பரப்பு  - 13 லட்சம் சதுர கி.மீ.

5. நகரம் - 6 பெரிய நகரம்.

6. கிராமம் - 200 ற்கு மேற்பட்டவை.

75. ஹரப்பா நகரின் திட்ட மிட்ட இரண்டு பகுதி -மேல்நகர அமைப்பு, கீழ் நகர அமைப்பு.



1. கூற்று – ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். காரணம் – திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு

a. கூற்றும் காரணமும் சரி.

b. கூற்று தவறு, காரணம் சரி.

c. கூற்று சரி, காரணம் தவறு.

d. கூற்றும் காரணமும் தவறு.

 

2. கூற்று – ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது:

காரணம் – ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.

a. கூற்றும் காரணமும் சரி.

b. கூற்று தவறானது, காரணம் சரி.

c. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.

d. கூற்று மற்றும் காரணம் தவறானவை.

 

3. கூற்று – ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது

காரணம் – கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.

a. கூற்றும் காரணமும் சரி

b. கூற்று தவறானது, காரணம் சரியானது.

c. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.

d. கூற்று மற்றும் காரணம் தவறானவை.

 

4. கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்ச-தாரோவைப் பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?

a. தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை

b. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.

c. கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.

d. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.

விடை: 2 மற்றும் 4.

 

5. கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.

1. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான – தன்மை.

2. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.

3. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.

மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை?

விடை: அனைத்தும் சரி

 

6 . கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.

அ. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றின் சீரான தன்மை

ஆ. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.

இ. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.

மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

a. அ & ஆ

b. அ & இ

c. ஆ & இ

d. அனைத்தும் சரி

விடை : அனைத்தும் சரி

 

7. பொருந்தாததை வட்டமிடுக.

காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள். விடை : குதிரைகள்

 

8. தவறான இணையைத் தேர்ந்தெடு

a. ASI – ஜான் மார்ஷல்

b. கோட்டை – தானியக் களஞ்சியம்

c. லோத்தல் – கப்பல் கட்டும் தளம்

d. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

விடை : ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

 

கோடிட்ட இடங்களை நிரப்புக.

9.  ___________ மிகப் பழமையான நாகரிகம். விடை : (சுமேரிய) மெசபொட்டாமிய நாகரிகம்

10. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ___________________ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது. விடை : அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்

11.  ___________________ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது..

விடை : தானியக்களஞ்சியங்கள்

12. மக்கள் குழுக்களாகச் சேர்ந்து ___________________ உருவாக்குகிறார்கள்.

விடை : சமூகத்தை (Communities)

 

சரியா ? தவறா ?

13. மொஹர்கர் புதிய கற்காலம் மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும் விடை : சரி

14. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது. விடை : சரி

15. தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

விடை : சரி

16. முதல் எழுத்துவடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது விடை : தவறு

 

18. பொருத்துக.

1. மொஹஞ்சதாரா- அ. மேடான பகுதி

2. வெண்கலம் - ஆ. சிவப்பு மணிக்கல்

3. கோட்டை- இ. உலோகக் கலவை

4. கார்னிலியன்- ஈ. இறந்தோர் மேடு

விடை : 1 – ஈ, 2 – இ, 3- அ, 3 – ஆ


கருத்துரையிடுக

4 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham