நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சமீபத்திய சாதனைகள்
1.
நெல் உற்பத்தியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத
வகையில் ஒரு கோடியே 22 லட்சத்து 22 ஆயிரத்து 463 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து
தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.
2.
தமிழ்நாட்டில் மழை, பாசன வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல் உற்பத்தி செய்யப்படும்
பரப்பிலும், அளவிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. அதன்படி, 2000 – 2001 கால கட்டத்தில் 20 லட்சத்து 80 ஆயிரத்து
10 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டு, ஒரு கோடியே 11 லட்சத்து 60 ஆயிரத்து 711 மெட்ரிக்
டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.
3.
கடந்த மூன்று ஆண்டுகளில் நெல் உற்பத்தி பரப்பிலும் நெல் உற்பத்தி அளவிலும் கணிசமான
முன்னேற்றம் காணப்பட்டது. 2019-20 காலகட்டத்தில்
19 லட்சத்து 07 ஆயிரத்து 407 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டு, ஒரு கோடியே 10 லட்சத்து
7ஆயிரத்து 445 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.
4.
2020-21 ஆம் ஆண்டில் 20 லட்சத்து 36ஆயிரத்து
239 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டதில் உற்பத்தியின் அளவு ஒரு கோடியே 04 லட்சத்து
26 ஆயிரத்து 502 மெட்ரிக் டன்னாக இருந்தது.
5.
கடந்த இருபது ஆண்டுகளில் அதிகபட்சமாக 2021
-22 கால கட்டத்தில் 22 லட்சத்து 5 ஆயிரத்து 470 ஹெக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு
ஒரு கோடியே 22 லட்சத்து 22ஆயிரத்து 463 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
minnal vega kanitham