Type Here to Get Search Results !

மாநிலங்களுக்கிடையேயான குழு

0
TNPSC Group 2/2A Mains
12 Marks
3. மாநிலங்களுக்கிடையேயான குழு:

மாநிலங்களிடையேயான கவுன்சில் (Inter-State Council)
1. இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி 263 படி குடியரசு தலைவரால் உருவாக்கப்பட்டது.
2. சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின் பேரில் 1990 மே 28 உருவாக்கப்பட்டது .
3. கொள்கைகள், பொதுவான ஆர்வமுள்ள விஷயங்கள் மற்றும் மாநிலங்களிடையே உள்ள மோதல்கள் குறித்து விவாதிக்க அல்லது விசாரிக்க கவுன்சில் உருவாக்கப்பட்டது .
4. மண்டலக் குழு - 1956ல் உருவாக்கப்பட்டது.
5. 1971ஆம் ஆண்டில் வடகிழக்கு மண்டலக் குழு அமைக்கப்பட்டது.
6. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு அரசியலமைப்பு விதி 263-ன் கீழ் அமைக்கப் பெறும் ஓர் அரசியல் நிறுவன அமைப்பே (Constitutional Body) மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஆகும்.
7. கொள்கைகள், திட்ட செயல்பாடுகள், மாநிலங்களின் பொது நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய – மாநில அரசினிடையேயான சிறந்த ஒருங்கிணைப்பிற்கு இக்கவுன்சில் பரிந்துரை வழங்கவல்லது.
8. இருப்பினும், மத்திய-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு இது நிரந்தர அரசியல் நிறுவன அமைப்பு (Permanent Constitutional body) அல்ல.
9. நாட்டின் பொது நலன்கள் இத்தகு குழு அமைப்பதன் மூலம் சேவையின் வழி நிறைவுபடுத்தப்படும் என குடியரசுத் தலைவருக்கு தோன்றும் போது இக்கவுன்சில் அமைக்கப்படும்.
10. இக்கவுன்சிலின் உள்ளடக்கம்
i. இக்கவுன்சிலின் தலைவர் – பிரதமர்
ii. உறுப்பினர்களாக அனைத்து இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள்
iii. சட்டசபை உடைய யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள்,
iv. சட்டசபை இல்லா யூனியன் பிரதேசங்களின் மத்திய நிர்வாகிகள்
v. மேலும் உறுப்பினர்களாக பிரதமரால் நியமிக்கப்பட்ட கேபினேட் அமைச்சருக்கான தகுதியுடைய ஆறு மத்திய அமைச்சர்கள்.
11. மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலினுடைய நிலைக்குழு (standing Committee) மத்திய உள்துறை அமைச்சரை தலைவராகவும்., கேபினேட் அமைச்சர் தகுதியுடைய 5 அமைச்சர்கள் மற்றும் 9 மாநிலங்களின் முதல்வர்களை உறுப்பினர்களாகவும் கொண்டது.
12. நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் நடந்த மாற்றங்களின் மீது கண் கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான புதிய பிரச்சனைகளை ஆராய்வதற்காக இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்