Type Here to Get Search Results !

மாநகராட்சி பற்றிய வருவாய் ஆதாரங்கள் பற்றி கூறுக & உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவிகாலம் பற்றி சிறு குறிப்பு

TNPSC Group 2/2A Mains
6 Marks
1. மாநகராட்சி பற்றிய வருவாய் ஆதாரங்கள் பற்றி கூறுக
2. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவிகாலம் பற்றி சிறு குறிப்பு

1. மாநகராட்சி பற்றிய வருவாய் ஆதாரங்கள் பற்றி கூறுக
மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் (அ) வரி விதிப்பு மூலம் பெறப்படும் வருவாய் (ஆ) வரிவிதிப்பில்லாத வகையிலிருந்து வரும் வருமானம் என இரு தன்மைகளை உடையனவாக உள்ளன.
1. கட்டிடங்கள் மற்றும் நிலங்களின் மீதான வரி.
2. வாகனங்கள் மற்றும் கால்நடைகள் மீதான வரி.
3. கொட்டகை (நாடகம், சினிமா) வரி.
4. நகரத்திற்குள் மக்களுக்குக் காட்சியளிக்கும் பொருட்டு செயல்படும் விளம்பரங்கள் மீதான வரி.
5. தொழில், வர்த்தகம் மற்றும் வாழ்க்கைப் பணி மீதான வரி.
6. கேளிக்கை வரி.
7. மின்சார நுகர்வு மற்றும் விற்பனை மீதான வரி.
8. நில மதிப்புகள் உயர்வதின் மீது விதிக்கப்படும் மேம்பாட்டு வரி.
9. சந்தை வரி அல்லது பாதை வரி.


2. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவிகாலம் பற்றி சிறு குறிப்பு
1. அரசியலமைப்புச் சட்டத்தின் 217 மற்றும் 224 ஆகிய பிரிவுகள் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் பற்றி கூறுகின்றன. [இதில் எந்த சாதி அல்லது நபர்களுக்கு இடஒதுக்கீடும் வழங்கவில்லை]
2. பிரிவு 217, உயர்நீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும், இந்தியத் தலைமை நீதிபதி, மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்தபின் பிற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் எனக் கூறுகிறது.
3. உயர் நீதித்துறையின் நீதிபதிகள் கொலிஜியம் அமைப்பின் மூலம் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.
4. பிரிவு 224 கூடுதல் நீதிபதிகள் நியமனம்
5. பிரிவு 224A ஓய்வு பெற்ற நீதிபதிகளின் மறுநியமனம்
6. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.