குடியரசு தலைவரின் நீதி அதிகாரம்?
குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள்
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
பற்றி சரத்து 53 கூறுகிறது.
1. நிர்வாக அதிகாரங்கள்
2. சட்ட அதிகாரங்கள்
3. நிதி அதிகாரங்கள்
4. நீதி அதிகாரங்கள்
5. இராணுவ அதிகாரங்கள்
6. இராஜதந்திர அதிகாரங்கள்
7. அவசரநிலை பிரகடனம் செய்யும் அதிகாரங்கள்
-
குடியரசுத்தலைவர் பதவி என்பது பெயரளவு நிர்வாக அதிகாரம் கொண்ட பதவியாகும்.
-
இந்திய ஒன்றியத்தின் தலைலை நிர்வாகி குடியரசுத்தலைவர் ஆவார்.
-
அவர் இந்தியாவின் முதல் குடிமகனாவார்.
குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள்
1. நிர்வாக அதிகாரங்கள்
i.
சரத்து 77, ஒன்றியத்தின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின்
பெயரிலேயே எடுக்கப்பட வேண்டும்.
ii.
பிரதமரையும், அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களையும் நியமித்து, பிரதமரின் ஆலோசனையின்
பேரில் அவர்களுக்கு இலாக்காக்களை நிர்ணயிக்கிறார்.
iii.
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் அனைத்து சட்டங்களும் இவரது ஒப்புதல் பெற்ற பின்னரே
சட்டமாக வெளிவரும்.
iv.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளையும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளையும்
நியமனம் செய்கிறார்.
v.
தேர்தல் ஆணையத்தின் தலைவரையும், அட்டர்னி ஜெனரல் மற்றும் தணிக்கை குழு தலைவரையும் தேர்ந்தெடுக்கிறார்.
vi.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ராணுவப்படை தளபதிகளையும்
நியமனம் செய்கிறார்.
vii.
முப்படைகளுக்கும் தலைவராக இவர் விளங்குகிறார்.
2. சட்ட அதிகாரங்கள்
i.
மத்திய நாடாளுமன்றத்தின் தலைவராக விளங்குகிறார். நாடாளுமன்றத்தில் இரு சபைகளைக் கூட்டவும்,
தொடர்ந்து நடத்தவும், கலைக்கவும் இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. இதை பற்றி கூறும் சரத்து 85 ஆகும்.
ii.முதல்
நாடாளுமன்ற கூட்டத்தை துவக்கி அதில் உரை நிகழ்த்துகிறார். குடியரசுத்தலைவரால் நிகழ்த்தப்படும்
சிறப்புரை பற்றி கூறும் சரத்து 87 ஆகும்.
iii.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவும் இவர் இசைவு பெற்ற பின்னரே சட்டம்
ஆகிறது. இதைப் பற்றி கூறும் சரத்து 111 ஆகும்.
iv.
பண மசோதா இவரது அனுமதி பெற்ற பிறகே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
v.
குடியரசுத்தலைவர் இரு அவைகளிடையே ஏதேனும் சட்டமியற்றும் போது கருத்து வேறுபாடு தோன்றினால்
இரு அவைகளைக் கூட்டும் அதிகாரம்(Joint Sitting) பெற்றவர் குடியரசுத்தலைவர் ஆவார்.
vi.
கலை அறிவியல் இலக்கியம் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்பு பெற்றவர்களை 12
உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
3. நிதி அதிகாரங்கள்
i.
நாட்டின் நிதிக்கு குடியரசுத் தலைவரே முழு பொறுப்பாவார்.
ii.
இவரது பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்த
இயலாது.
iii.
ஆண்டு வரவு செலவு கணக்கு இவரது அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரால்
தாக்கல் செய்யப்படுகிறது.
iv.
எதிர்பாராத நிதியிலிருந்து நாடாளுமன்றத்தில்
இறுதி அங்கீகாரம் பெறும் முன்னர் அரசின் எதிர்பாரா செலவுகளை சமாளிக்க அரசுக்கு முன்பணம்
வழங்க அதிகாரம் பெற்றுள்ளார்.
4. நீதி அதிகாரங்கள் [நீதித்துறை அதிகாரங்கள்]
i.குடியரசுத் தலைவர் எந்த ஒரு நீதி மன்றத்திற்கும்
கட்டுப் பட்டவர் அல்ல. எனினும் பாராளுமன்றத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்படலாம்.
ii. 72ஆவது சரத்தானது மன்னிப்பு வழங்குவதற்கும், தண்டிப்பதற்கும், அல்லது ஒரு
குற்றத்திற்காக தண்டனை பெற்ற எந்த ஒரு நபரின் தண்டனையையும் மாற்றுவதற்கான அதிகாரத்தையும்
குடியரசுத்தலைவருக்கு அளிக்கிறது. [மரண தண்டனையை கூட இவர் தள்ளுபடி செய்யலாம்.]
5. இராணுவ அதிகாரங்கள்
சரத்து 53 (2)
ஆனது
“ஒன்றியத்தின் பாதுகாப்புப் படையின் தலைவர்
குடியரசுத்தலைவர் என்றும் அப்படைகளின் மீதான அதிகாரம் சட்ட வரம்புக்கு உட்பட்டது”
என்றும் குறிப்பிடுகிறது.
6. இராஜதந்திர அதிகாரங்கள்
குடியரசுத்தலைவர்
இந்திய இராஜதந்திரிகளை மற்ற நாடுகளுக்கும், வெளிநாட்டு தூதர்களை இந்தியாவுக்கும் நிர்ணயிக்கும்
பணியை மேற்கொள்கிறார்.
வெளிநாடுகளுடனான
அனைத்து ஒப்பந்தங்களும் குடியரசுத்தலைவரின் பெயரிலேயே கையெழுத்தாகின்றன.
7. அவசரநிலை பிரகடனம் செய்யும்
அதிகாரங்கள்
சரத்து
352 இன் கீழ் தேசிய அவசரநிலையையும்,
356வது
சரத்தின் கீழ் மாநிலங்கள் மீதான அவசரநிலைலயயும்,
360வது
சரத்தின் கீழ் நிதி அவசரநிலைலயயும் அறிவிக்க அரசியைலைப்பானது குடியரசுத்தலைவருக்கு
அதிகாரம் வழங்கியுள்ளது.
i. தேசிய நெருக்கடி நிலை
(சரத்து 352)
இந்தியாவின்
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், அயல்நாட்டு படையெடுப்பு மற்றும் ராணுவ கிளர்ச்சி ஏற்படும்போது
அதனை சமாளிப்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 352 வது பிரிவு வழி செய்கிறது.
ii. மாநில நெருக்கடி நிலை
(சரத்து 356)
ஒரு
மாநிலத்தில், மாநில அரசு செயலற்றுப் போகும் போது அந்த மாநிலத்தில் நெருக்கடி நிலைமை
கொண்டுவர இந்திய அரசமைப்புச் சட்ட 356-வது பிரிவு வழி செய்கிறது.
iii. நிதி நெருக்கடி நிலை
(சரத்து 360)
இந்தியாவில்
பொருளாதார நெருக்கடி தோன்றினால் அதை சமாளிப்பதற்கு இந்திய அரசியல் சட்டம் 360 வது பிரிவு
செய்கிறது இதன்படி நாடு முழுவதும் அல்லது ஏதாவது ஒரு பகுதியில் நிலைமை அறிவிக்கப்படுகிறது.
minnal vega kanitham