2022 Group 4 1. கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ?
கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
D) கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண். 138) 6.4
கம்பராமாயணம்
நூல் வெளி
|
·
கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி "இராமாவதாரம்"
எனப் பெயரிட்டார்.
·
இது கம்பராமாயணம்
என வழங்கப்பெறுகிறது.
·
இது ஆறு காண்டங்களை
உடையது.
·
கம்பராமாயணப்
பாடல்கள் சந்தநயம் மிக்கவை. அவற்றுள் அழகுணர்ச்சிமிக்க சில கவிதைகள் பாடப்பகுதியாக
அமைந்துள்ளன.
·
'கல்வியில்
பெரியவர் கம்பர்", "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" போன்ற
முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்; சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்; திருவெண்ணெய்நல்லூர்
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்; விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்"
என்று புகழ்பெற்றவர்; சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய
நூல்களை இயற்றியவர்.
|
2.
முடியரசன் இயற்றாத நூல் எது?
A) பூங்கொடி
B) நீலமேகம்
C) வீரகாவியம்
D) காவியப்பாவை
E) விடை தெரியவில்லை (ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 127) பாடம்
6.1 நானிலம் படைத்தவன்
நூல் வெளி
|
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. பூங்கொடி,
வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி
என்றும் கவியரசு என்றும் பாரட்டப்பெற்றவர். இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும்
நூலில் இடம் பெற்றுள்ளது.
|
3. மூன்றடி சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால்
ஆன நூல் எது?
A) குறுந்தொகை
B) ஐங்குறுநூறு
C) அகநானூறு
D) நற்றிணை
E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண்.24) பாடம்
2.5 ஐங்குறுநூறு
நூல் வெளி
|
·
ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
·
இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
·
திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
·
ஐந்திணை பாடிய புலவர்கள் : குறிஞ்சி – கபிலர், முல்லை – பேயனார், மருதம்
– ஓரம்போகியார், நெய்தல் – அம்மூவனார், பாலை – ஓதலாந்தையார்
·
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
·
இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
·
இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
·
பேயனார் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.
|
4.
கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த
நூலுக்காக வழங்கப்பட்டது ?
A) கண்ணீர்ப் பூக்கள்
B) ஊர்வலம்
C) ஆகாயத்துக்கு அடுத்த வீடு
D) சோழ நிலா
E) விடை தெரியவில்லை (எட்டாம் வகுப்பு
– புதிய புத்தகம் – பக்கம் எண்-196) பாடம் 9.2 இளைய தோழனுக்கு
நூல் வெளி
|
·
வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா.
·
கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
·
புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்
·
கண்ணீர்ப் பூக்கள், சோழ நிலா, மகுட நிலா உள்ளிட்ட பல நூல்களையும், திரையிசைப்
பாடல்களையும் எழுதியுள்ளார்.
·
இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய
அகாதெமி விருது வழங்கப்பட்டது.
·
மு.மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.
|
5. வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
A) தூது
B) பள்ளு
C) கலம்பகம்
D) குறவஞ்சி
E) விடை தெரியவில்லை (ஒன்பதாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 12) பாடம்
1.3 தமிழ்விடு தூது
நூல் வெளி
|
·
தமிழ்ச் சிற்றிலக்கிய
வகைகளுள் “தூது” என்பதும்
ஒன்று.
·
இது “வாயில் இலக்கியம்”, “சந்து
இலக்கியம்” என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
·
இது தலைவன்
தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்திக்
தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக “மாலையை வாங்கி வருமாறு” அன்னம்
முதல வண்டு ஈறாய் பத்தையும் தூது விடுவதாகக் “கலிவெண்பா”வால் இயற்றப்படுவதாகும்.
·
தமிழ்விடு
தூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி,
தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
·
இந்நூல்
268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
·
தமிழின் சிறப்புகளைக்
குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளன
·
1930-ல் உ.வே.சா.
தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
·
இதன் ஆசிரியர்
பெயர் என்று அறிய முடியவில்லை.
|
6. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான
பருவங்கள் எத்தனை
A) பத்து
B) ஆறு
C) ஏழு
D) ஐந்து
E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 135) 6.3
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
நூல் வெளி
|
·
குமரகுருபரர்
இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல்
பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
·
96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
·
இதில் இறைவனையோ,
தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.
·
பாட்டுடைத்
தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ் பத்துப் பருவங்கள் அமைத்து,
பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ்,
பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.
·
குமரகுருபரரின்
காலம் 17ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்;
கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை,
நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
·
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் - காப்பு, செங்கீரை,
தால், சப்பாணி, முத்தம்,வருகை, அம்புலி.
·
ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
(கடைசி மூன்று பருவம்) - சிற்றில், சிறுபறை, சிறுதேர்
·
பெண்பாற்
பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - கழங்கு, அம்மானை, ஊசல்
|
7. வரதன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
A) நல்லாதனார்
B) ஒட்டக்கூத்தர்
C) காளமேகப் புலவர்
D) புதுமைப்பித்தன்
E) விடை தெரியவில்லை (ஏழாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 126) பாடம் 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்
நூல் வெளி
|
·
காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
·
மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர்
என்று அழைக்கப்பட்டார்.
·
திருவானைக்கா
உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம். சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
·
இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
|
8. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A) ரா.பி.சேதுப்பிள்ளை
B) சோமசுந்தர பாரதியார்
C) குன்றக்குடி அடிகளார்
D) வீரமாமுனிவர்
E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 215 மற்றும் எட்டாம்
வகுப்பு – பழைய புத்தகம் – பக்கம் எண்.9) 9.3
தேம்பாவணி
நூல் வெளி
|
·
தேம்பா +
அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய
பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.
·
கிறித்துவின்
வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக்
கொண்டு பாடப்பட்ட நூல் இது இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும்
உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.
·
17ஆம் நூற்றாண்டில்
படைக்கப்பட்டது தேம்பாவணி. இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர் இவரது இயற்பெயர்
கான்சுடான்சு சோசப் பெசுகி. தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்),
சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள்
ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.
|
9. பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார் ?
A) கம்பர்
B) குலசேகரர்
C) ஆண்டாள்
D) பெரியாழ்வார்
E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 82) 4.2
பெருமாள் திருமொழி
நூல் வெளி
|
·
நாலாயிரத்
திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691 ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
·
பெருமாள்
திருமொழி நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
·
இதில்
105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார்.
·
இவரின் காலம்
எட்டாம் நூற்றாண்டு.
|
10. இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது
பாடிய பாடலின் தொகுப்பு ——– நூலாகும்
A) இரட்டை மணிமலை
B) மும்மணிக்கோவை
C) தெய்வமணிமாலை
D) மனுமுறைகண்டவாசகம்
E) விடை தெரியவில்லை (பனிரெண்டாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 112) பாடம்
5.2 தெய்வமணிமாலை
நூல் வெளி
|
·
பாடப்பகுதியிலுள்ள பாடல், இராமலிங்க
அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில்
இடம்பெற்ற தெய்வமணிமாலை என்னும் பாமாலையில் உள்ளது.
·
இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின்
அருளை வேண்டும் தெய்வமணிமாலையின் 8ஆம் பாடல்.
·
சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான அடிகள் சிதம்பரத்தை
அடுத்த மருதூரில் பிறந்தார்.
·
சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.
·
இம்மண்ணில் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர்
அடிகளார்.
·
வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும்
தன்மையுடையவை.
·
திருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
·
‘மனுமுறை
கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.
|
11. சரியான பதிலைத் தேர்வு செய்க
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுனு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
A) I, III, IV மட்டும் சரி
B) I , II மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை (ஒன்பதாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 162) பாடம்
6.3 நாச்சியார் திருமொழி
நூல் வெளி
|
·
திருமாலை
வழிபட்டு சிறப்புநிலை எய்திய பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்.
·
ஆண்டாள் மட்டுமே
பெண் ஆழ்வார் ஆவார்.
·
இறைவனுக்குப்
பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி”
என அழைக்கப் பெற்றார்.
·
இவரைப் பெரியாழ்வாரின்
வளர்ப்பு மகள் என்பர்.
·
ஆழ்வார்கள்
பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும்.
·
இத்தொகுப்பில்
ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன.
·
நாச்சியார்
திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.
|
12. புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
?
A) ஓவிய எழினி
B) சிற்பக்கலை
C) மெய்க்கீர்த்தி
D) பைஞ்சுதை
E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 167) 7.3
மெய்க்கீர்த்தி
நூல் வெளி
|
·
கோப்பரகேசரி,
திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின்
ஒரு பகுதி பாடமாக உள்ளது.
·
இம்மெய்க்கீர்த்திப்
பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக
உள்ளது. இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு.
·
அதில் ஒன்று
91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
·
இப்பாடப்
பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது.
·
முதலாம் இராசராசன்
காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின்
முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.
·
இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில்
பொறிக்கப்பட்டவை.
|
13. கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்
என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
A) கூற்று 1 மட்டும் சரி
B)கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று இரண்டும் சரி
D)கூற்று இரண்டும் தவறு
E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 170 மற்றும் ஒன்பதாம்
வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண்-71) 14. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க – “இளங்கோவடிகள்”
a) சேரமரபைச் சார்ந்தவர்
b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
c) “அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
d) “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று குறிப்பிட்டவர்
A) அனைத்தும் சரி
B) (a), (b) சரி
C) (a), (c), (d) சரி
D) அனைத்தும் தவறு
E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 170) 7.4
சிலப்பதிகாரம்
நூல் வெளி
|
·
சிலப்பதிகாரம்,
புகார்க்காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
·
ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்று சிலப்பதிகாரம்.
·
இது முத்தமிழ்க்காப்பியம்,
குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது; மூவேந்தர் பற்றிய செய்திகளைக்
கூறுகிறது.
·
இது புகார்க்காண்டம்,
மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது;
கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது.
·
மணிமேகலைக்
காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள்
எனவும் அழைக்கப்பெறுகின்றன.
·
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள், சேர மரபைச்
சேர்ந்தவர் மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் கோவலன் கண்ணகி கதையைக் கூறி,
'அடிகள் நீரே அருளுக என்றதால் இளங்கோவடிகளும் 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்'
என இக்காப்பியம் படைத்தார் என்பர்.
|
15. சரியான இணைகளைத் தேர்ந்தெடு
1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் – வெ.இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி
A)1ம் மற்றும் 2ம் சரி
B) 2ம் மற்றும் 3ம் சரி
C) 1ம் மற்றும் 3ம் சரி
D) 2ம் மற்றும் 4ம் சரி
E) விடை தெரியவில்லை (ஏழாம்
வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண். 3, 6, 27 மற்றும் ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம்
– பக்கம் எண் – 149) |
minnal vega kanitham