எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
Topics |
Questions |
7th
தனி வட்டி |
27 |
7th சதவீதம் |
66 |
6th விகிதம் மற்றும் விகித சமம் |
28 |
7th நேர் விகிதம் |
19 |
7th எதிர் விகிதம் |
25 |
8th
Time & Work |
20 |
TOTAL |
185 |
TNPSC
7th தனி வட்டி
1.
₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம்
3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. ₹ 6,000
2.
அர்ஜுன் ஒரு வங்கியிலிருந்து ஆண்டுக்கு 5% வட்டி வீதம் ₹
5000 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகளின் முடிவில் அவர் செலுத்த வேண்டிய வட்டியையும்
மொத்தத் தொகையையும் காண்க? ₹5,750
3.
சாந்தி ஒரு வங்கியிலிருந்து, ஆண்டுக்கு 12% வட்டி வீதம் ₹
6,000 ஐ 7 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றார் எனில், 7 ஆண்டுகள் கழித்து அவர் எவ்வளவு
பணத்தைச் செலுத்தினால் கடன் தீரும்?
₹
11,040
4.
குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹
750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க? 3750
5.
எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி
வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும்? 3 ஆண்டுகள்.
6.
சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ₹
52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து
சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச்
செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க? 13%
7.
அசல் ₹ 46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப்
பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52,440 ஆக
உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க? 8%
8.
ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹10,050
ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க? 3350
9.
தனிவட்டியில் ஒரு அசல் 10 ஆண்டுகளில் இரு மடங்கானால் அந்த அசல் மும்மடங்காக மாறுவதற்கு
அல்லது உயருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்?
20 ஆண்டுகள்
10.
₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி
வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க?
₹ 6300
11.
அரவிந்த் என்பவர் ₹ 8,000 ஐ, ஆகாஷ் என்பவரிடமிருந்து
ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த்
செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க? தனி வட்டி = ₹ 1120, மொத்த
தொகை = ₹ 9120
12.
ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனிவட்டியாக
₹ 21,280 ஐச் செலுத்தினார் எனில்,
அசலைக் காண்க? ₹ 56,000
13.
பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹
8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச்
செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு? 10%
14.
ஆண்டுக்கு 13% வட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500 இலிருந்து
எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935 ஆக உயரும்? 3 ஆண்டுகள்
15.
ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து
எத்தனை ஆண்டுகளில் ₹ 19936 ஆக உயரும்? 2 ஆண்டுகள்
16.
கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 இக்கு 2 ஆண்டுகள் 3 மாதக்
காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹
55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க? 7%
17.
ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ₹
17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க? ₹ 12500
18.
ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு
மொத்தத் தொகை ₹ 5,000 கிடைத்தால், அதனுடைய தனிவட்டி
i)
₹ 500
ii)
₹ 200
iii)
20%
iv)
15%
விடை : i) ₹ 500
19.
பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு
10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்
i)
₹ 200
ii)
₹ 10
iii)
₹ 100
iv)
₹ 1,000
விடை : iii) ₹ 100
20.
பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு
ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக
இருக்கும்?
i)
10%
ii)
20%
iii)
5%
iv)
15%
விடை : i) 10%
21.
ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில் ₹
10,000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர்
பெறும் தனிவட்டி எவ்வளவு? ₹ 800
22.
ரியா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ₹ 15,000 ஐ
10% தனிவட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார் அவர் ₹
9,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில், வட்டியாகச் செலுத்தினார் எனில், கடனைப் பயன்படுத்திய
காலத்தைக் கணக்கிடுக? 6 ஆண்டுகள்
23.
₹ 3,000 அசலுக்கு ஆண்டுக்கு
8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹4,000 அசலுக்கு
ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன? 8 ஆண்டுகள்
24.
ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹6,200
எனவும், 3 ஆண்டுகளில் ₹6,800 எனவும் உயர்கிறது. எனில்
அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க?
10%
25.
கடனாக வழங்கப்பட்ட அசல் ₹46,900 க்கு 2 ஆண்டுகளுக்குப்
பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹53,466 எனில்,
வட்டி வீதத்தைக் காண்க? 7%
26.
அருண் என்பவர் பாலாஜி என்பவருக்கு ₹ 5,000 ஐ 2
ஆண்டுகளுக்கும் சார்லஸ் என்பவருக்கு
₹ 3,000 ஜ 4 ஆண்டுகுளுக்கு ஒரே
தனிவட்டி வீதத்தில் வழங்கினார். ஆக மொத்தமாக ₹ 2,200 ஐ வட்டியாக
அருள் பெற்றார் எனில், வட்டி வீதத்தைக் காண்க? 10%
27.
ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க (அசல்
: P = ₹100 என வைக்க வேண்டும்)? 25%
7th சதவீதம்
1.
1/5 ஐச் சதவீதமாக எழுதுக? 20%
2.
7/4 ஐச் சதவீதமாக மாற்றுக? 175%.
3.
மொத்தமுள்ள 20 மணிகளில், 5 மணிகள் சிவப்பு எனில், சிவப்பு மணியின் சதவீதம் என்ன? 25%
4.
ஒரு கணக்கெடுப்பில் ஐந்து பேரில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சோப்பை விரும்புவதாகக்
கூறினார். அதனைச் சதவீதமாக மாற்று? 20%
5.
ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 75 மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வில் பங்குபெற்றனர்.
அவர்களில் 72 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனில், தேர்ச்சி
பெற்ற மாணவர்களின் சதவீதத்தைக் காணவும்? 96%
6.
ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியிலுள்ள
சிறுமிகளின் சதவீதத்தைக் கண்டறியவும்? 42.86%
7.
0.01 இக்கும் 1% இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? 0
8.
அன்பு ஒரு தேர்வில் 500 இக்கு 436 மதிப்பெண்கள் பெற்றார் எனில், அவர் பெற்ற மதிப்பெண்களைச்
சதவீதத்தில் கூறுக? 87.2%
9.
இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார் அதில் 10 முட்டைகள் கெட்டுவிட்டால், நல்ல முட்டைகளின்
சதவீதத்தைக் காண்க? 83.33 %
10.
ஒரு தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 48% ஆகும். அவர் பெற்ற வாக்குகளைப்
பின்னமாக வெளிப்படுத்துக? 12 / 25
11.
இரஞ்சித்தின் மாத வருமானம் ₹ 7,500 அதில்
25% ஐச் சேமித்தார் எனில், அவர் எவ்வளவு தொகையைச் சேமித்தார் என்பதைக் காண்க? ₹ 1875
12.
தென்றல் தனது வருமானத்தில் 4 இல் ஒரு பங்கைச் சேமித்தால் அதன் சதவீதத்தைக் காண்க.
a.
3/4 %
b.
1/4 %
c.
25%
d.
1%
விடை : c. 25%
13.
கவின் 25 இக்கு 15 மதிப்பெண்களைப் பெற்றால் அதன் சதவீதம்
a.
60%
b.
15%
c.
25%
d.
15/25
விடை : a. 60%
14.
0.07% என்பது
a.
7 / 10
b.
7 / 100
c.
7 / 1000
d.
7 / 10,000
விடை : iv) 7 / 10,000
15.
மலர் 25 மீட்டர் துணிச் சுற்றலிருந்து 1.75 மீட்டர் துணியை வாங்கினார் எனில், மலர்
வாங்கிய துணியின் அளவைச் சதவீதத்தில் கூறுக? 7%
16.
ஒரு தேர்வில் ஒரு மாணவர் 75% மதிப்பெண்களைப் பெற்றார் எனில், அதைத் தசமமாக மாற்றி அமைக்க?
0.75
17.
ஒரு கிராமத்தில் 70.5% மக்கள் கல்வியறிவைப் பெற்றிருந்தனர் எனில், அதைத் தசம எண்ணாக
மாற்றுக? 0.705
18.
ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் 86% ஓட்டங்களைச் சேகரித்தால், அதைத் தசமமாக எழுதுக? 0.86
19.
ஒரு பள்ளியின் கொடிக் கம்பத்தின் உயரம் 6.75 மீ எனில், அதைச் சதவீதமாக மாற்றுக? 675%
20. இரண்டு இரசாயனப் பொருட்களின் எடைகள் 20.34 கிராம்
மற்றும் 18.78 கிராம் எனில், அவைகளின் எடையின் வித்தியாசத்தைக் சதவீதத்தில் கூறுக?
156 %
21.
142.5% ஐச் தசமமாக மாற்றினால்
i)
1.425
ii)
0.1425
iii)
142.5
iv)
14.25
விடை : i) 1.425
22.
0.005 ஐச் சதவீதமாக மாற்றினால்
i)
0.005%
ii)
5%
iii)
0.5%
iv)
0.05%
விடை : iii) 0.5%
23.
4.7 இன் சதவீத வடிவம்
i)
0.47%
ii)
4.7%
iii)
47%
iv)
470%
விடை : iv) 470%
24.
ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை
எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்? 7
25.
குறள்மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ₹25
ஐச் சேமித்தார் எனில், ரெயின் கோட்டின் அசல் விலை என்ன? ₹125
26.
ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கிராம் தாமிரத்தைப் பெற எந்த அளவு
உலோகக் கலவை தேவைப்படுகிறது? 1000 கி
27.
1 பங்கு உளுந்து மாவுடன் 4 பங்கு அரிசி கலந்த மாவில், குழல் என்பவரின் தாயார் தோசை
தயாரிக்கிறார் எனில், மாவிலிருக்கும் மூலப்பொருள்களைச் சதவீதமாகக் குறிக்கவும்?
அரிசியின் சதவீதமானது = 80%
உளுத்தம் பருப்பின் சதவீதமானது =
20%
28.
ஒரு குடும்பம் பொங்கல் கொண்டாட்டத்திற்காக, வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வேலையை 1
: 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர் எனில், வேலையின் ஒவ்வொரு பகுதியையும்
சதவீதமாக வெளிப்படுத்துங்கள்? 50%
29.
ஆடித் தள்ளுபடி விற்பனையின்போது ஒரு சட்டையின் விலை ₹90
இலிருந்து ₹50 ஆகக் குறைந்தது எனில், குறைவின்
சதவீதம் என்ன? 44 4/9%
30.
ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 5 இலட்சத்திலிருந்து
8 இலட்சமாக அதிகரித்தது எனில், அதிகரிப்பின் சதவீதம் என்ன? 60%
31.
ஒரு தண்ணீர்த் தொட்டியில் தண்ணீரின் அளவு 2 நிமிடத்தில் 35 லிட்டரிலிருந்து 50 லிட்டராக
அதிகரிக்கிறது எனில், அதிகரித்த தண்ணீரின் சதவீதம் என்ன? 30
33.
ஒரு கடைக்காரர் நாற்காலியை ₹325 இக்கு வாங்கி
₹350 இக்கு விற்பனை செய்கிறார்
எனில், இலாபச் சதவீதத்தைக் கண்டறியவும்? 7 9/13%.
34.
ஒரு சட்டை ₹110 இக்கு வாங்கப்பட்டு ₹90
இக்கு விற்கப்படுகிறது எனில், நட்டச் சதவீதத்தைக் கண்டறியவும்? 18 2/11%
35.
ஒரு பொருளை ₹200 இக்கு வாங்கி, 4% நட்டத்திற்கு
விற்கப்படுகிறது எனில், அப்பொருளின் அடக்கவிலை என்ன? ₹208
36.
ஒரு புத்தகக் கடையிலுள்ள 70 பத்திரிகைகளில் 14 பத்திரிகைகள் நகைச்சுவை பத்திரிகைகள்
எனில், நகைச்சுவை பத்திரிகைகளின் சதவீதம் காண்க? 20%
37.
ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர்
நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? 10 லிட்டர்கள்
38.
கருண் என்பவர் ஒருசோடிக் காலனிகளை 25% விலையில் வாங்கினார். அவர் செலுத்திய தொகை
₹ 1000 எனில், குறிக்கப்பட்ட விலையைக்
காண்க? ₹ 1334
39.
ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முகவர் அவர் சேகரிக்கும் அடிப்படை பிரிமியத்தில் 5% தரகாகப்
பெறுகிறார். அவர் ₹ 4800 ஐப் பிரிமியமாக வசூலித்தார்
எனில், அவர் பெறுகின்ற தரகுத் தொகை?
₹ 240
40.
ஓர் உயிரியல் வகுப்பு மாணவர்கள் குழு உள்ளுரிலுள்ள ஒரு புல்வெளியில் ஆய்வு செய்தனர்.
அவற்றுள் 40 இல் 30 பூக்கள் வற்றாதவை எனில், வற்றாத பூக்களின் சதவீதம் காண்க? 75 %
41.
இஸ்மாயில் என்பவர் சில வகையான மணிகளை வாங்குவதற்காகச் சரக்கு அனுப்பாணையை அனுப்பினார்.
மொத்தம் 50 மணிகளில் 15 மணிகள் மட்டுமே பழுப்பு நிறம் எனில், பழுப்பு நிற மணிகளின்
சதவீதத்தைக் காண்க? 30%
42.
ராமு என்பவர் ஆங்கிலப் பாடத்தில் 25 இக்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில்
40 இக்கு 43 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80 இக்கு 68 மதிப்பெண்களும் பெற்றார்
எனில், அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்? கணித பாடத்தில்
சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்.
44.
பீட்டர் என்பவர் ஒரு தேர்வில் 280 மதிப்பெண்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தார். அவர்
இன்னும் 20 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மொத்த மதிப்பெண்களில் 50% பெற்று வெற்றி பெற்றிருப்பார்
எனில், மொத்த மதிப்பெண்களைக் காண்க? 600
45.
கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும்
இரண்டாம் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 260 மதிப்பெண்களும் பெற்றார் எனில்,
அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தைக் காண்க? 8%
46.
ரோஜா மாதச் சம்பளமாக ₹ 18,000 ஐப் பெறுகிறார். அவர்
தனது சம்பளத்தில் முறையே கல்வி, சேமிப்பு, மற்றும் பிற செலவினங்களுக்கு 2 : 1 : 3 என்ற
விகிதத்தில் செலவு செய்கிறார் எனில், அவரது செலவைச் சதவீதமாகக் கூறுக? 50%
47.
மதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கும்போது வைப்புத் தொகையை அதன் மதிப்பில்
10 இல் ஒரு பங்கைச் செலுத்தினார் எனில், வைப்புத் தொகையின் சதவீதம் காண்க.? 10%
48.
ஒரு தேர்வில் யாழினி 25 இக்கு 15 மதிப்பெண்கள் பெற்றாள் எனில், அதன் சதவீதம் காண்க? 60%
49.
ஒரு பள்ளியில் மொத்தமுள்ள 120 ஆசிரியர்களில் 70 ஆசிரியர்கள் ஆண்கள் எனில், ஆண் ஆசிரியர்களின்
சதவீதத்தைக் காண்க? 58.33 %
50.
ஒரு மட்டைப் பந்து (கிரிக்கெட்) அணி ஒரு வருடத்தில் 70 போட்டிகளில் வெற்றியும் 28 போட்டிகளில்
தோல்வியும் 2 போட்டிகளில் முடிவு ஏதுமில்லை எனவும் இருந்தால் அணியின் வெற்றிச் சதவீதத்தைக்
கணக்கிடுக? 70%
51.
ஒரு கிராமப்புறப் பள்ளியில் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் 370 மாணவர்களுக்கு
நீந்தத் தெரியும் எனில், நீந்தத் தெரிந்தவர்களின் சதவீதத்தையும், நீந்தத் தெரியாதவர்களின்
சதவீதத்தையும் காண்க? 74% நீந்த தெரிந்தவர்கள், 26% நீந்த தெரியாதவர்கள்
52.
சரளா என்பவரின் ஊதியத்திற்கும் சேமிப்பிற்கும் இடையேயுள்ள விகிதம் 4 : 1 எனில், அவரது
சேமிப்பைச் சதவீதத்தில் கூறுக? 20%
53.
ஒரு விற்பனையாளர் அவர் செய்யும் விற்பனைத் தொகையில் 5% தரகாகப் பெறுகிறார். அவர் செய்த
விற்பனை ₹ 1,500 எனில், அவர் பெறும் தரகு
எவ்வளவு? ₹ 75
54.
2015 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு ₹
1,500 ஆக இருந்தது. தற்போது அதன் விலை 18% ஆக உயர்ந்தால், நுழைவுச்சீட்டின் விலை எவ்வளவு?
₹ 1770
55.
50 இல் 2 என்பது எவ்வளவு சதவீதமாகும்? 4%
56.
8 உடன் எத்தனை சதவீதம் சேர்ந்தால் 64 கிடைக்கும்? 800%
57.
ஒரு நபர் தனது பயணத்தை 80 கிமீ மகிழுந்திலும் 320 கி.மீ தொடர்வண்டியிலும் மேற்கொள்கிறார்
எனில், மொத்தப் பயணத்தில் அவர் மகிழுந்தில் பயணம் செய்த தூரத்தின் சதவீதத்தையும் தொடர்வண்டியில்
பயணம் செய்த தூரத்தின் சதவீதத்தையும் காண்க? 80%
58.
இலலிதா என்பவர் தான் எழுதிய ஒரு கணிதத் தேர்வில் 35 சரியான பதில்களும் 10 தவறான பதில்களும்
எழுதினார் எனில், அவர் அளித்த சரியான பதில்களின் சதவீதம் என்ன? 77.78%
59.
குமரன் ஆண்டுக்கு 7 மாதங்கள் வேலை செய்கிறார் எனில், அந்த ஆண்டில் அவர் எவ்வளவு சதவீதம்
வேலை செய்தார் என்பதைக் கணக்கிடுக? 58.33%
60.
ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 8000. இவர்களில் 80% பேர் கல்வியறிவு பெற்றவர்கள். அதில்
40% பெண்கள் எனில், கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மக்கள்தொகைக்கும்
உள்ள சதவீதத்தைக் காண்க? 25 : 8
61.
ஒரு மாணவர் 20 கேள்விகள் கொண்ட கணிதத் தேர்வை எதிர்கொண்டு அதில் 80% மதிப்பெண்கள் பெற்றார்
எனில், அவர் எத்தனை கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்தார்? 16
62.
8.5 கி.கி எடை கொண்ட ஓர் உலோகப் பட்டையில் 85% வெள்ளி எனில், அதில் வெள்ளியின் எடையைக்
காண்க? 7.225 கி.கி
63.
ஒரு தொடர்வண்டியில் பயணச்சீட்டின் முழுக்கட்டணம் ₹ 230 சலுகை
அட்டை வைத்திருப்பவர்களுக்கு ₹ 120 இக்கு
டிக்கெட் வழங்கப்பட்டால், சலுகை அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிச் சதவீதத்தைக்
காண்க? 47.82%
64.
ஒரு தண்ணர் தொட்டியின் கொள்ளளவு 200 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 40% தண்ணீர் நிரம்பியுள்ளது
எனில், 75% தண்ணீர் அதில் நிறைய வேண்டுமெனில் இன்னும் எத்தனை லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படும்?
70 லிட்டர்கள்
65.
இவற்றுள் எது பெரியது 16 (2 / 3) அல்லது
(2 / 5) அல்லது 0.17? 16 (2 / 3)
66.
ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹1,62,000 ஒவ்வொரு
ஆண்டுக்கும் இவ்வியந்திரத்தின் மதிப்பு
10% குறைகிறது எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து அவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன?
1,31,200
6th விகிதம் மற்றும்
விகித சமம்
1.
5 கிமீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம்? விடை: 9: 10
2.
₹.1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள
விகிதம் ……….
அ)
1:5
ஆ)
1:2
இ)
2:1
ஈ)
5:1
விடை: ஈ) 5:1
2.
1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் ………
அ)
1 : 50
ஆ)
50 : 1
இ)
2 :1
ஈ)
1 : 2
விடை: இ) 2: 1
3.
ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும்
உள்ள விகிதம் ………
அ)
1: 7
ஆ)
7: 1
இ)
7: 10
ஈ)
10: 7
விடை: ஈ) 10: 7
4.
முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம்
அ)
4: 3
ஆ)
3: 4
இ)
3: 5
ஈ)
3: 2
விடை: ஆ) 3: 4
5.
அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான
விகிதத்தின் எளிய வடிவம்
அ)
10: 50
ஆ)
50: 10
இ)
5: 1
ஈ)
1: 5
விடை: இ) 5: 1
6.
ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின்
விகிதம் 3:2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி
ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.
i. மளிகைக்கு ஆன செலவு = ரூ. 2400
ii. காய்கறிக்கு ஆன செலவு = ரூ.
1600
7.
3 : 4 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால்
கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க?
27 செமீ மற்றும் 36 செமீ
8.
2 : 3 மற்றும் 4:_ ஆகியவை சமான விகிதங்கள் எனில், விடுபட்ட உறுப்பு.
அ)
6
ஆ)
2
இ)
4
ஈ)
3
விடை: அ) 6
9.
4 : 7 இன் சமான விகிதமானது.
அ)
1 : 3
ஆ)
8 : 15
இ)
14 : 8
ஈ)
12 : 21
விடை: ஈ) 12 : 21
10.
16/24 இக்கு எது சமான விகிதம் அல்ல?
அ)
6/9
ஆ)
12/18
இ)
10/15
ஈ)
20/28
விடை: ஈ) 20/28
11.
₹1600 ஐ A மற்றும் B என்ற இரு
நபர்களுக்கு 3:5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை
_______ என்ன?
அ)
₹ 480
ஆ)
₹ 800
இ)
₹ 1000
ஈ)
₹ 200
விடை: இ) ₹ 1000
12.
பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
அ)
3 : 5, 6 :11
ஆ)
2 : 3, 9 : 6
இ)
2 : 5, 10 : 25
ஈ)
3 : 1, 1 : 3
விடை: இ) 2 : 5,10 : 25
13.
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக
இருப்பின், “x” = ?
அ)
50
ஆ)
4
இ)
10
ஈ)
8
விடை: (ஈ) 8
14.
7 : 5 ஆனது X : 25 இக்கு விகிதசமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க.
(அ)
27
(ஆ)
49
(இ
35
(ஈ)
14
விடை: (இ) 35
15. 3 எழுதுகோல்களின் விலை 18 எனில், 5 எழுதுகோல்களின்
விலை . விடை: ரூ 30
16.
15 நாள்களில் கார்குழலி 1800 ஐ வருமானமாகப் பெறுகிறார் எனில், ₹3000
ஐ – நாள்களில் வருமானமாகப் பெறுவார்? விடை:
25
17.
40 நூல்களின் எடை 8கிகி எனில், 15 நூல்களின் 2 எடை? விடை: 3 கிகி.
18. சீரான வேகத்தில், ஒரு மகிழுந்து 3 மணி நேரத்தில்
90 கிமீ எனப் பயணிக்கிறது. அதே வேகத்தில், 5 மணி நேரத்தில் அது _____ கி.மீ தொலைவைப்
பயணிக்கும். விடை: 150
19.
ஒரு நபர் 2 மணி நேரத்தில் 20 பக்கங்களைப் படிக்கிறார் எனில் அதே வேகத்தில் 8 மணி நேரத்தில்
அவரால் எத்தனை பக்கங்கள் படிக்க? 80
20.
15 நாற்காலிகளின் விலை 7500. இதுபோன்று 12,000 க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும்
எனக் காண்க? 24
21.
ஒரு மகிழுந்து 5 கிகி எரிபொருள் (LPG) வாயுவைப் பயன்படுத்தி 125 கிமீ தொலைவு கடக்கிறது.
3 கிகி எரிபொருள் பயன்படுத்தினால் எவ்வளவு தொலைவு கடக்கும்? 75 கிமீ
22.
சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 கிமீ தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத்தில்
அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு? 2 கிமீ
24.
ஒரு வினாடி வினா போட்டியில் கார்முகிலன் மற்றும் கவிதா வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின்
விகிதம் 10 : 11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், கவிதா
பெற்ற புள்ளிகள் எத்தனை? 44 புள்ளிகள்
25.
கார்மேகன் 9 ஓவர்களில் 54 ஓட்டங்களையும், ஆசி∴ப் 11 ஒவர்களில் 77 ஓட்டங்களையும் எடுத்தார்கள்
எனில், யாருடைய ஒட்ட விகிதம் சிறப்பானது? ஆசி∴ப்
26.
ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ₹ 90 அதே போன்று
3 பொம்மைகளின் விலை ……..
அ)
₹. 260
ஆ)
₹.270
இ)
₹. 30
ஈ)
₹. 93
விடை: ஆ) ₹.270
27.
8 ஆரஞ்சுகளின் விலை ரூ. 56 எனில், 5 புள்ளிகள் ஆரஞ்சுகளின் விலை …………
அ)
42
ஆ)
48
இ
35
ஈ)
24
விடை: இ) 35
28.
ஒரு நபர் 15 நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர்.
அ)
10 கி.மீ
ஆ)
8 கி.மீ
இ)
6 கி.மீ
ஈ)
12கி.மீ
விடை: இ) 6 கி.மீ
7th நேர் விகிதம்
1.
8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை
__________? விடை : ₹84
2.
பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3½ கி.கி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை
__________ விடை : 21 கி.கி
3.
ஒரு மகிழுந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து
200 கி.மீ தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு __________ விடை : 10 லிட்டர்
4.
7 மீ அளவுள்ள துணியின் விலை ₹ 294, எனில்
5 மீ அளவுள்ள துணியின் விலை? விடை : ₹210
5.
குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி
நேரத்தில் நிரப்புகிறது. எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின்
எண்ணிக்கை __________? விடை : 360
6.
ஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை ₹ 20 எனில்,
48 வாழைப் பழங்களின் விலை என்ன?
₹ 80
7.
ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டுகளிக்க 21 மாணவர்களுக்கு ₹840
நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்டது ₹1,680 ஐ நுழைவுக்
கட்டணமாகச் செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்? 42 மாணவர்கள்.
8.
ஒரு உணவு விடுதியின் 3 ஆம் தளத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
120 ஆட்கள் 8 முறை மின்தூக்கி (இயங்கு ஏணி) யில் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர்.
மின் தூக்கி, 12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் எத்தனை ஆட்கள் அங்குச்
சென்றிருப்பர்? 180 ஆட்கள் சென்றிருப்பார்.
9.
8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும்
மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு? 40 மீ
10.
ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணி நேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில்.
அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்? 1107 கடிதங்கள் பிரிக்கப்படுகிறது.
11.
அரை மீட்டர் துணியின் விலை ₹ 15 எனில்,
8 1/3 மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு? ₹
250
12.
72 புத்தகங்களின் எடை 9 கி.கி எனில், அதே அளவுள்ள 40 புத்தகங்களின் எடை என்ன? 5 கிகி
13.
தாமரை வாடகைப் பணமாக ₹7500 ஐ, 3 மாதங்களுக்குச் செலுத்துகிறார்
எனில், அதே போல, அவர் ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் எவ்வளவு? ₹ 30,000
14.
30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில்
அவ்வயலை அறுவடை செய்வார்கள்? 10 நாட்கள்
15.
ஓர் இருசக்கர வாகனம் 100 கி.மீ தொலைவைக் கடக்க 2 லி பெட்ரோல் தேவைப்படுகிறது எனில்
250 கி.மீ தொலைவைக் கடக்கத் தேவையான பெட்ரோல் எவ்வளவு? 5 லிட்டர்
16.
மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ₹ 75 இக்கு வாங்குகிறார்
எனில், அவர் ₹105 இக்கு ________ கி.கி உருளைக்கிழங்கை
வாங்குவார்.
a.
6
b.
7
c.
8
d.
5
விடை : b. 7
17.
ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது
எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை
__________
a.
150
b.
70
c.
100
d.
147
விடை : d. 147
18.
280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில்
1400 நபர்கள் ________ முறை பயணம் செய்யலாம்.
a.
8
b.
10
c.
9
d.
12
விடை : b. 10
19.
50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3 கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது. எனில், 150 நபர்களுக்கு
இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ________
a.
9
b.
10
c.
15
d.
6
விடை : a. 9
7th எதிர் விகிதம்
1.
60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள்
அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? 10
2.
ஒரு பெட்டி தக்காளியின் விலை ₹
200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை
₹ 260 என அதிகரித்தால் அவரிடம்
உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்? 10
3.
ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே
தொட்டியை _________ நிமிடங்களில் நிரப்பும். விடை
: 32
4.
40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை
4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை ________ விடை :
80
5.
ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை நிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன.
ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு?
1 மணி 48 நிமிடம்
6.
ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர்
32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப்
போதுமானதாக இருக்கும்? 36 நாட்கள்
7.
ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக் கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும்
ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில் 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்?
20 நாட்கள்
8.
நாற்பது மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 30 நாள்களுக்குத் தேவையான
உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால்
அவ்வுணவுப் பொருள் அவர்களுக்கு எத்தனை, நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? 15 நாட்கள்
9.
500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (Parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம்
மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (Parcels) அவள் அனுப்புகிறாள்
எனில், ஒரு சிப்பத்தின் (Parcel) எடை எவ்வளவு இருக்கும்? 100 கிராம்
10.
ஒரு தோட்டத்தைக் களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன
எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள்
தேவை? 18 தோட்டக்காரர்கள்
11.
நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12
கி.மீ / மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில்
பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு? 16 கி.மீ / மணி
12.
ஒரு பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 36 இயந்திரங்களைக் கொண்டு 54 நாள்களில் மகிழுந்து
பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. அதே அளவிலான மகிழுந்து பொம்மைகளை 81 நாள்களில் உற்பத்தி
செய்ய இயந்திரங்கள் தேவை? 24 இயந்திரங்கள்
13.
10. 12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை
மேய ________ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.
a.
15
b.
18
c.
6
d.
8
விடை : c. 6
14.
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள்
கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை ________ நாள்களில் செய்து முடிப்பர்
a.
7
b.
8
c.
9
c.
10
விடை : b. 8
15.
தமிழ்ச்செல்வன் ₹ 5000 ஐ மூன்று மாதத்திற்கு ஒரு
முறை வங்கிக்கணக்கில் சேமித்து வருகிறார். அவர் ₹1,50,000 ஐ
சேமிக்க எத்தனை வருடங்களாகும்? 90 மாதங்கள்
16.
ஓர் அச்சு இயந்திரம் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை 1 நிமிடத்தில் 30 பக்கங்கள்
என அச்சிடுகிறது. அவ்வச்சு இயந்திரம் அதே புத்தகத்தை 1 நிமிடத்தில் 25 பக்கங்கள் என
அச்சிட்டால், அச்சிட்டு முடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்? 12 நிமிடங்கள்
17.
6 பழரசப் பாட்டில்களின் விலை ₹210, எனில்
4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன? ₹
140
18.
x ஆனது yன் இருமடங்கோடு எதிர்விகிதத் தொடர்புடையது. கொடுத்துள்ளபடி y = 6, எனில் xன்
மதிப்பு 4 y = 8 எனில் xன் மதிப்பைக் காண்க? 3
19.
ஒரு சரக்கு வண்டி 594 கி.மீ தூரத்தை கடக்க 108 லி டீசல் தேவைப்படுகிறது எனில் அவ்வண்டி
1650 கி.மீ தூரத்தைக் கடக்கத் தேவைப்படும் டீசலின் அளவு எவ்வளவு? 300 லிட்டர்
20.
ஒரு டசன் (dozen) சோப்புகளின் விலை ₹ 396, எனில்,
35 சோப்புகளின் விலை என்ன? ₹ 1155
21.
ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில் பாட வேளைகள்
9 ஆக மாறும்போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு எவ்வளவு? 35
22. 105 நோட்டுப் புத்தகங்களின் விலை ₹
2415. ₹ 1863 இக்கு எத்தனை நோட்டுப்
புத்தகங்கள் வாங்கலாம்? 81 புத்தகங்கள்.
23.
10 விவசாயிகள் 21 நாட்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 14 விவசாயிகள்
எத்தனை நாள்களில் உழுது முடிப்பர்? 15 நாட்கள்
24.
ஒரு வெள்ள நிவாரண முகாமில் 80 நபர்களுக்குத் தேவையான உணவு 60 நாள்களுக்குப் போதுமானதாக
உள்ளது. 10 நாள்களுக்குப் பின்னர், 20 நபர்கள் அந்த முகாமில் வந்து சேர்ந்தார்கள் எனில்,
அவ்வுணவு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? 5 நாட்கள்
25.
6 நபர்கள் ஒரு வேலையை 12 நாள்களில் செய்து முடிக்கின்றனர். 2 நாள்கள் கழித்து மேலும்
6 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில், அவ்வேலையைச் செய்ய எத்தனை நாள்கள் எடுத்துகொள்வார்கள்?
5 நாட்கள்
8th Time
& work
1.
A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும்
ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை ………. நாள்களில் முடிப்பர்? விடை: 2
2. 5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர்
எனில், 50 நபர்கள் 50 வேலைகளை……….. நாள்களில் செய்து முடிப்பர். A என்பவர் ஒரு வேலையை
24 நாள்களில் முடிப்பார்? விடை: 5
3.A
என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு
வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ……………… நாள்களில்
முடிப்பார். விடை: 8
4.
A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல்
திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார்? 25 நாட்கள்
5.
A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் ₹1,20,000
தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹200000
தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில், A பெறும் தொகை
ரூ .120000
6.
210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாள்களில் முடிப்பர்.
அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து, 20 நாள்களில் முடிக்க எத்தனை ஆண்கள்
தேவை? 162
7.
ஒரு சிமிட்டி தொழிற்சாலையானது, 36 இயந்திரங்களின் உதவியுடன் 12 நாள்களில் 7000 சிமிட்டி
பைகளைத் தயாரிக்கிறது. 24 இயந்திரங்களைப் பயன்படுத்தி, 18 நாள்களில் எத்தனை சிமிட்டி
பைகளைத் தயாரிக்கலாம்? 7000
8.
ஒரு சோப்புத் தொழிற்சாலையானது, நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்து 6 நாள்களில்
9600 சோப்புகளைத் தயாரிக்கிறது. நாளொன்றுக்கு கூடுதலாக 3 மணி நேரம் வேலை செய்து
14400 சோப்புகள் தயாரிக்க அதற்கு எத்தனை நாள்கள் ஆகும்? 8 நாட்கள்
9.
6 சரக்கு வண்டிகள் நாள்களில் 135 டன்கள் சரக்குகளை இடம் பெயர்க்கின்றன எனில், 1800
டன்கள் சரக்குகளை 4 நாள்களில் இடம் பொர்ர்க எதனை சரக்கு வண்டிகள் கூடுதலாகத் தேவை?
4
10.
A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி
நேரத்திலும், A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை
B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பர்? 4
மணி
11. A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாள்களிலும்,
B மற்றும் C ஆகியோர் அதை 15 நாள்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாள்களிலும் முடிப்பர்.
ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்? A 30 நாட்கள், B 20 நாட்கள் மற்றும் C 60 நாட்கள்
ஆகும்.
12.
தச்சர் A ஆனவர் ஒரு நாற்காலியின் பாகங்களைப் பொருத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார்.
அதே வேலையைச் செய்ய தச்சர் B ஆனவர் தச்சர் A ஐ விட 3 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக்
கொள்கிறார். இருவரும் இணைந்து வேலைச் செய்து 22 நாற்காலிகளின் பாகங்களைப் பொருத்த எவ்வளவு
நேரமாகும்? 180 நிமிடங்கள்
13.
A ஆனவர் ஒரு வேலையை 45 நாள்களில் முடிப்பார். அவர் 15 நாள்கள் மட்டுமே வேலையைச் செய்கிறார்.
மீதமுள்ள வேலையை B ஆனவர் 24 நாள்களில் முடிக்கிறார். எனில், அந்த வேலையின் 80% ஐ இருவரும்
இணைந்து முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க? 16
நாட்கள்
14.
A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர்
ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை
நாள்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க? 6
15.
32 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பர்
எனில், அந்த வேலையின் இரு மடங்கை எத்தனை ஆண்கள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து
24 நாள்களில் முடிப்பர்? 48 ஆண்கள்
16.
அமுதா, ஒருசேலையை 18 நாள்களில் நெய்வார். அஞ்சலி, அனிதாவை விட நெய்வதில் இரு மடங்கு
திறமைசாலி . இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாள்களில் நெய்து முடிப்பர்?
6 நாட்கள்
17.
P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையை 12 மற்றும் 15 நாள்களில் முடிப்பர். P ஆனவர்
அந்த வேலையைத் தனியேத் தொடங்கிய பிறகு, 3 நாள்கள் கழித்து Q ஆனவர் அவருடன் சேர்ந்து
வேலையானது முடியும் வரை அவருடன் இருந்தார் எனில், வேலையானது எத்தனை நாள்கள் நீடித்தது?
8 நாட்கள்
18.
ஒரு சிறு தொழில் நிறுவனம், 40 ஆண்களைப் பணியமர்த்தி 150 நாள்களில் 540 விசைப்பொறி இறைப்பிகளைத்
(Motor Pumps) தயாரித்து வழங்க ஓர் ஒப்பந்தத்தை எடுத்துக்கொள்கிறது. 75 நாள்களுக்குப்
பிறகு, அந்நிறுவனத்தால் 180 விசைப்பொறி இறைப்பிகளை மட்டுமே தயாரிக்க முடிந்தது. வேலையானது
ஒப்பந்தத் தின்படி நேரத்திற்கு முடிய வேண்டுமெனில், கூடுதலாக எத்தனை ஆண்களை அந்நிறுவனம்
பணியமர்த்த வேண்டும்? 20
19.
P என்பவர் தனியே ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாள்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின்
2/3 பகுதியை 4 நாள்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை
எத்தனை நாள்களில் முடிப்பர்? 3 நாட்கள்
20.
X என்பவர் தனியே ஒரு வேலையை 6 நாள்களிலும், Y என்பவர் தனியே அதே வேலையை 8 நாள்களிலும்
முடிப்பர். X மற்றும் Y ஆகியோர் இந்த வேலையை ₹48000 இக்கு
ஒப்புக் கொண்டனர். Z என்பவரின் உதவியுடன், அவர்கள் அந்த வேலையை 3 நாள்களில் முடித்தனர்
எனில், தொகையில் Z இன் பங்கு எவ்வளவு? ₹6000
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
Hello sir, thank you so much for posting this material. One kind request , we need recent Tnpsc exams maths solution ( surveyor, engineering exam). If possible please give solutions sir.
பதிலளிநீக்குminnal vega kanitham