Type Here to Get Search Results !

ஹைடெக் GK பிளான் -1 அறிவியல் 409 வினா விடை PDF

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

அலகு - I: பொது அறிவியல்

(i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல் - பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்

(ii) பேரண்டத்தின் இயல்பு - பொது அறிவியல் விதிகள் - இயக்கவியல் - பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.

(iii) தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.

(iv) உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.

(v) சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

PROOF

விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்

2019 G2

2018 G2

2017 G2

2016 G2

2015 G2

2014 G2

2013 G2

1

1

1

1

3

1

1

 

Q1: பொழுதுபோக்குப் பூங்காவில் குடை இராட்டினத்தில் சுற்றும்போது, குடை இராட்டினம் ஒரு செங்குத்து அச்சைப்பற்றி கழலும் போது, நாம் ஒரு வெளிநோக்கிய திசையில் ஏற்படும் இழுவிசையை உணர்கிறோம். அதற்கான காரணம் எது ? (2019 G2)

[A] மைய விலக்கு விசை

[B] மைய நோக்கு விசை

[C] நேர்கோட்டு விசை

[D] சுழற்சி விசை

 

Q2: கோளப் புள்ளி மையத்தில் புவியீர்ப்பு புலத்தின் மதிப்பு யாது? (2018 G2)

a. சுழி

b. Mr/G

c. GM/r

d. −GM/r²

 

Q3: எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ______ கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ______ கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும், (2017 G2)

a. முடுக்கம், திசைவேகம்

b. திசைவேகம், முடுக்கம்

c. இடப்பெயர்ச்சி, திசைவேகம்

d. திசைவேகம், இடப்பெயர்ச்சி

 

Q4: பின்வருவனவற்றுள் ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க (2016 G2)

I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்

II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்

III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள அடர்த்திகளது பெருக்கம்

IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்

a. I மற்றும் II மட்டும்

b. II மற்றும் III மட்டும்

c. III மற்றும் IV மட்டும்

d. I மற்றும் III மட்டும்

 

Q5: கீழ்வருவனவற்றுள் எவை சரி? (2015 G2)

(i) வேலை = விசை x இடப்பெயர்ச்சி

(ii) திறன் = வேலை/காலம்

(iii) விசை = நிறை x திசைவேகம்

(iv) முடுக்கம் = திசைவேகம்/காலம்

a. (i) (ii) மற்றும் (iii)

b. (ii) (iii) மற்றும் (iv)

c. (i) (iii) மற்றும் (iv)

d. (i) (ii)மற்றும் (iv)

 

Q6: விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்? (2015 G2)

(a) அதிர்வை குறைக்க

(b) மாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய

(c) அதிகமான பயணிகளை ஏற்ற

(d) இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க

a. 1 2 3 4

b. 2 3 4 1

c. 3 4 1 2

d. 4 l 2 3

 

Q7: தொழில் நுட்பம் அறிவியல் தத்துவம் (2015 G2)

(a)விமானம் - நியூட்டனின் விதி

(b)காற்றுபலூன் - பெர்னாலிஸ் தத்துவம்

(c)ராக்கெட் - வெப்ப இயக்க விதி

(d)நீராவி எந்திரம் - பையாண்ட் விசை

a. 1 3 2 4

b. 3 1 4 2

c. 4 2 3 1

d. 2 4 1 3

 

Q8: கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு (2014 G2)

I. எரிபொருள் ஒன்றின் பாதை பரவளைவு ஆகும்.

II. புவியின் மையத்தில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகும்.

III. ஈர்ப்பியல் மாறிலிக்கு அலகு மற்றும் பரிமாணங்கள் கிடையாது.

a. I மற்றும் II சரியானவை ஆனால் III தவறு

b. I மற்றும் II சரியானவை ஆனால் II தவறு

c. I, II, III ஆகிய அனைத்தும் சரியானவை

d. II மற்றும் III சரியானவை ஆனால் I தவறு

 

Q9: கீழ்கண்டவற்றை பொருத்துக: (2013 G2)

(a) நேர் உந்தத்தின் திருப்புதிறன் - 1. மிதத்தல் விசை

(b) ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைத்துக் கொள்ளும் தன்மை - 2. மின்னழுத்தம்

(c) ஓரலகு மின்னூட்டம் செய்யும் வேலை - 3. பரப்பு இழுவிசை

(d) முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல்நோக்குவிசை - 4. கோண உந்தம்

a. 4 1 2 3

b. 4 2 3 1

c. 4 3 2 1

d. 4 1 3 2

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/05/group-2-science.html

 

 

விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் 

2013 G4

2014 G4

2016 G4

2018 G4

2019 G4

2

2

1

2

1

விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் 

1. நியூட்டனின் மூன்றாம் விதி ........... உள்ள பொருள்களுக்கு பொருந்தும். [2011 G4]

a. ஓய்வு நிலையில் மட்டும்

b. இயக்க நிலையில் மட்டும்

c. ஒய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்

d. சமமான நிறை

2. கூற்று (A) புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது.

காரணம் (R) எண்ணெயின் பரப்பு இழுவிசை கடல் நீரின் பரப்பு இழுவிசையை விடக்குறைவு. அலையின் சீற்றத்தைக் குறைக்கும்.  [2013 G4]

a. A சரி R தவறு

b.A மற்றும் R சரி

c. R சரி A தவறு

d. A மற்றும் R இரண்டும் தவறு

 

3. இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே [2013 G4]

a. 4: 1

b. 1: 4

c. 1:1

d. 1:2

 

4. பொருத்துக  [2014 G4]

(a) விசை - 1. வாட்

(b) உந்தம் - 2.ஜூல்

(c) திறன் - 3. கி.மீ.வி ⁻¹

(d) ஆற்றல் - 4. நியூட்டன்

a.  4 1 2 3

b.  3 2 1 4

c.  3 1 2 4

d.  4 3 1 2

 

5. சரியான விடையை தேர்ந்தெடு : [2014 G4]

ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து

a.  பாதரசம், மண்ணெண்ணெய், நீர்

b.  மண்ணெண்ணெய், நீர், பாதரசம்

c.  நீர், பாதரசம், மண்ணெண்ணெய்

d.  மண்ணெண்ணெய், பாதரசம், நீர்

 

6. 15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது. துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம் என்ன? [2016 G4]

a. சுழி 

b. 201.5 கிகி மீவி⁻¹

c. 215 கிகி மீவி⁻¹

d. 200 கிகி மீவி⁻¹

 

7. சரியான காரணங்களை தெரிவு செய்க : [2018 G4]

பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு. பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.

(1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.

(2)இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.

(3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.

a. (1), (2) மற்றும் (3)

b. (1) மற்றும் (2) மட்டும்

c. (2) மற்றும் (3) மட்டும்

d. (1) மற்றும் (3) மட்டும்

 

8. கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம் [2018 G4]

a. குறையும்

b. அதிகமாகும்

c. சுழியாகும்

d. மாறாமலிருக்கும்

 

9. ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில்[கைப்பிடியில்] 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப்பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?  [2019 G4]

a. 10 N

b. 5 N

c. 15 N

d. 20 N

 

10. வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன? (2022 G4) 

(A) நியூட்டனின் முதல் விதி

(B) நியூட்டனின் இரண்டாம் விதி

(C) பாஸ்கல் விதி

(D) மேற்கண்ட அனைத்தும்

 

11. கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?

(A) F=mxa

(B) F= ∆Pxt.

(C) F=m(v-u) /t

(D) F= ∆P /t

 

 

1. முன்பக்க இயந்திரம் கொண்ட பின் சக்கர இயக்கி கார்களில் பாதுகாப்பிற்காக தண்டு சுமை குறைப்பது எந்த பகுதியில் ஓட்டுவதற்காக [2021 G1]

A. பனிக்கட்டி சாலைகள்

B. சேற்றுச்சாலைகள்

C. மலைச்சாலைகள்

D. சமதள சாலைகள

 

2. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததனால் / குறைவாக இருப்பதனால், பொருள்களின் மீதான அனைத்து விசைகளும் சமமாக இருக்கிறது. இதனால் விண்வெளியில் நீர்த்துளியானது கொளவடிவம் பெறுகிறது. அவ்வாறு கோள வடிவம் எடுப்பதனால், நீர்த்துளி [2021 G1]

A. மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது

B. மிக அதிகமான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது

C. மிகக் குறைவான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.

D. மிக அதிகமான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.

 

விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் 

2013 G4

2014 G4

2016 G4

2018 G4

2019 G4

2022 G4

2

2

1

2

1

2

 

விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்

2019 G2

2018 G2

2017 G2

2016 G2

2015 G2

2014 G2

2013 G2

1

1

1

1

3

1

1

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்