Type Here to Get Search Results !

சதவீதம், காலம் & வேலை 2022 TNPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள்

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

 (i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).

 (ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.

 (iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.

 (iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் –பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

காலம் மற்றும் வேலை

Q1: 12 மாடுகள் ஒரு வயலை 10 நாட்களில் மேய்கின்றது எனில் 20 மாடுகள் அதே வயலை எத்தனை நாட்களில் மேயும்? [08-01-2022]

a. 15

b. 18

c. 6

d. 8

 

Q2: A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பார். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? [08-01-2022]

a. 2 மணிகள்

b. 5 மணிகள்

c. 7 மணிகள்

d. 4 மணிகள்

 

Q3: A ஆனவர் B என்பவரை காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க? [08-01-2022]

a. 4 நாள்கள்

b. 6 நாள்கள்

c. 9 நாள்கள்

d. 7 நாள்கள்

 

Q4: 5 நபர்கள் 5 வேலைகள் 5 நாட்களில் செய்து முடிப்பார் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ________ நாட்களில் செய்து முடிப்பார் [11-01-2022]

a. 5

b. 6

c. 50

d. 10

 

Q5: 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை? [11-01-2022]

a. 160

b. 162

c. 164

d. 169

 

Q6: A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை 2,00,000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில் A பெறும் தொகை ______ ஆகும் [22-01-2022]

(A) 1,20,000

(B) 90,000

(C) 60,000

(D) 40,000

 

Q7: A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களில் செய்ய முடியும். B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் செய்யமுடியுமென்றால் அவர்கள் எத்தனை நாட்களில் அதை ஒன்றாகச் செய்து முடிப்பார்கள் [22-01-2022]

(A) 47 நாட்கள்

(B) 10 நாட்கள்

(C) 23 நாட்கள்

(D) 360 நாட்கள்

 

Q8: A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க. (12-03-2022)

(A) 5 நாட்கள்

(B) 6 நாட்கள்

(C) 8 நாட்கள்

(D) 9 நாட்கள்

 

Q9: A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பார் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர் (19-03-2022)

(A) 2 நாட்கள்

(B) 2 1/2 நாட்கள்

(C) 3 நாட்கள்

(D) 3 1/2நாட்கள்

 

Q10: 15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில் அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால். அதே வேலையானது முடிய எத்தனை நாள்கள் ஆகும்? (19-03-2022)

(A) 30 நாட்கள்

(B) 40 நாட்கள்

(C) 25 நாட்கள்

(D) 20 நாட்கள்

 

Q11: A ஒரு வேலையை 15 நாட்களில் செய்வார். B அதே வேலையை 20 நாட்களில் செய்வார். அவ்வேலையை A, B இருவரும் சேர்ந்து 4 நாட்கள் முடித்தபின் மீதமுள்ள வேலையின் பின்னம் (19-03-2022)

(A) 1/4

(B) 1/10

(C) 7/15

(D) 8/15

 

Q12: A ஆனவர் B ஐக் காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்டநேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க. (24-04-2022)

(A) 12 நாட்கள்

(B) 36 நாட்கள்

(C) 9 நாட்கள்

(D) 15 நாட்கள்

 

Q13: A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அவ்வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில் B தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (24-04-2022)

(A) 12 நாட்கள்

(B) 24 நாட்கள்

(C) 30 நாட்கள்

(D) 32 நாட்கள்

 

Q14: 12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாட்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய ______________ நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. (24-04-2022)

(A) 18

(B) 15

(C) 8

(D) 6

 

Q15: ஒரு முகாமில் 65 நாட்களுக்கு 490 வீரர்களுக்குப் போதுமான மளிகைப் பொருட்கள் இருந்தன. 15 நாட்களுக்குப் பிறகு, மேலும் பல வீரர்கள் முகாமிற்கு வந்ததால், மீதமிருந்த மளிகைப் பொருட்களானது 35 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது எனில் எத்தனை வீரர்கள் முகாமில் சேர்ந்தனர்? (24-04-2022)

(A) 120

(B) 490

(C) 700

(D) 210

 

Q16: 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்? (30-04-2022)

(A) 36 நாட்கள்

(B) 42 நாட்கள்

(C) 56 நாட்கள்

(D) 28 நாட்கள்

 

Q17: 5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பார் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார். [2022 G2]

a. 5

b. 7

c. 9

d.11

 

Q18: ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தை படிக்கும் ஒருவர் 20 பக்கங்களை படிக்க 2 மணி நேரமாகிறது. அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களை படிக்க எவ்வளவு நேரமாகும்? [2022 G2]

a. 3 மணிநேரம்

b. 4 மணிநேரம்

c. 5 மணிநேரம்

d.4.5 மணிநேரம்

 

Q19: 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்? [28-05-2022]

(A) 16

(B) 18

(C) 14

(D) 12

 

Q20: A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? [28-05-2022]

(A) 3 நாட்கள்

(B) 24 நாட்கள்

(C) 12 நாட்கள்

(D) 32 நாட்கள்

 

Q21: 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர் [28-05-2022]

(A) 36 நாட்கள்

(B) 46 நாட்கள்

(C) 38 நாட்கள்

(D) 40 நாட்கள்

 

Q22: A ஆனவர் B ஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும், நேரத்தை காண்க [28-05-2022]

(A) 9 நாட்கள்

(B) 12 நாட்கள்

(C) 3 நாட்கள்

(D) 6 நாட்கள்

 

Q23: A என்பவர் ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B என்பவர் அதே வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பார் எனில் Aயும் Bயும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பா? [19-06-2022]

(A) 18

(B) 17 1/7

(C) 20

(D) 16 1/6

 

 

Q24: A ஆனவர் B ஐக் காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க. [19-06-2022]

(A) 8 நாட்கள்

(B) 9 நாட்கள்

(C) 16 நாட்கள்

(D) 7 நாட்கள்

 

Q25: ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்கு 28 நாட்களுக்கு தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துக்களை விற்றுவிட்டார் எனில் அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்? [02-07-2022]

(A) 84

(B) 36

(C) 72

(D) 68

 

Q26: A மற்றும் B இணைந்து 12 நாட்களில் ஒரு வேலையை செய்கின்றனர். B மட்டும் தனியாக 30 நாட்களில் அந்த வேலையை முடிக்க முடியும் எனில் A மட்டும் தனியாக அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள் காண்க. [06-08-2022]

(A) 15 நாட்கள்

(B) 18 நாட்கள்

(C) 20 நாட்கள்

(D) 25 நாட்கள்

 

 

Q27: 6 பெண்கள் அல்லது 8 ஆண்கள் ஓர் அறையை 86 நாட்களில் கட்டி முடிப்பர். அது போன்ற அறையை 7 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கட்டி முடிக்க எத்தனை நாள்கள் ஆகும்? [06-08-2022]

(A) 35 நாட்கள்

(B) 48 நாட்கள்

(C) 30 நாட்கள்

(D) 40 நாட்கள்

 

Q28: A ஆனவர் B ஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க. [2022 EO3]

(A) 36 நாட்கள்

(B) 27 நாட்கள்

(C) 18 நாட்கள்

(D) 9 நாட்கள்

 

Q29: A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க. [2022 EO4]

(A) 6 நாட்கள்

(B) 7 நாட்கள்

(C) 8 நாட்கள்

(D) 9 நாட்கள்

 

 

Q30: அமுதா ஒரு சேலையை 18 நாள்களில் நெய்வார், அஞ்சலி, அமுதாவை விட நெய்வதில் இருமடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பர்? [2022 EO4]

(A) 9 நாட்கள்

(B) 6 நாட்கள்

(C) 5 நாட்கள்

(D) 4 நாட்கள்

 

 

Q31: 81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஒர் ஓவியத்தை 56 நாட்களில் வண்ணமிடுவர். 160 மீ நீளமுள்ள அது போன்ற சுவரில் 27 நாட்களில் வரைய தேவைப்படும் மாணவர்கள் எண்ணிக்கையை காண். [2022 EO4]

(A) 40

(B) 50

(C) 55

(D) 60

கருத்துரையிடுக

0 கருத்துகள்