எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
|
Book Questions |
Book Back |
10th New Book |
24 |
12 |
9th New Book |
22 |
20 |
8th New Book |
3 |
10 |
7th New Book |
16 |
10 |
Total |
65 |
53 |
10th புள்ளியியலும்
நிகழ்தகவும்
1.
கீழ்காணும் தரவுகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக் கெழுவைக் காண்க
63,89,98,125,79,108,117,68
விடை : வீச்சு = 62, வீச்சுக்கெழு =
0.33
2.
கீழ்காணும் தரவுகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக் கெழுவைக் காண்க
43.5,13.6,18.9,38.4,61.4,29.8
விடை : வீச்சு = 47.8 வீச்சுக்கெழு
= 0.64
3.
ஒரு தரவின் வீச்சு மற்றும் மிகச்சிறிய மதிப்பு ஆகியன முறையே 36.8 மற்றும் 13.4 எனில்
மிகப்பெரிய மதிப்பைக் காண்க? விடை : மிகப்பெரிய
மதிப்பு = 50.2
4.
கொடுக்கப்பட்ட தரவின் வீச்சைக் காண்க 8, 12, 30, 21, 6 விடை : 250.
5.
முதல் 21 இயல் எண்களின் திட்ட விலக்கத்தைக் காண்க. விடை :
6.05
6.
ஒரு தரவின் திட்டவிலக்கம் 4.5 ஆகும். அதில் இருக்கும் தரவுப்புள்ளி ஒவ்வொன்றிலும்
5 ஐ கழிக்க கிடைக்கும் புதிய தரவின் திட்டவிலக்கம் காண்க. விடை : புதிய திட்டவிலக்கம் σ = 4.5
7.
ஒரு தரவின் திட்டவிலக்கம் 3.6 ஆகும். அதன் ஒவ்வொரு புள்ளியையும் 3 ஆல் வகுக்கும் கோது
கிடைக்கும் புதிய தரவின் திட்டவிலக்கம் மற்றும் விலக்க வர்க்கச் சராசரியைக் காண்க.
விடை : திட்ட விலக்கம் = 1.2, புதிய
விலக்கவர்க்க சராசரி = 1.44
8.
ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் சராசரி அகியன முறையே 6.5 மற்றும் 12.5 எனில் மாறுபாட்டுக்
கெழுவைக் காண்க. விடை : மாறுபாட்டுக்கெழு
= 52 %
9.
ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் மாறுபாட்டுக்கெழு ஆகியன முறையே 1.2 மற்றும் 25.6
எனில் அதன் சராசரியைக் காண்க. விடை : x¯ =
4.69
10.
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 15 மற்றும் 48 எனில் அதன் திட்டவிலக்கத்தைக்
காண்க. விடை : திட்டவிலக்கம் = 7.2
11.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. இரண்டு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான
நிகழ்தகவு என்ன? விடை : 3/8
12.
இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டுப்படுகின்றன. இரண்டு பகடைகளிலும்
ஒரே முகமதிப்பு கிடைக்க நிகழ்தகவு என்ன? விடை
: 1/6
13.
இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டுப்படுகின்றன. முகமதிப்புகளின் பெருக்கற்பலன்
பகா எண்ணாகக் கிடைக்க நிகழ்தகவு என்ன? விடை
: 1/6
14.
இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டுப்படுகின்றன. முகமதிப்புகளின் கூடுதல்
பகா எண்ணாகக் கிடைக்க நிகழ்தகவு என்ன? விடை
: 15 (15/36 = 5/12)
15.
இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டுப்படுகின்றன. முகமதிப்புகளின் கூடுதல்
1 ஆக இருக்க நிகழ்தகவு என்ன? விடை : 0
16.
மூன்று சீரான நாணயங்கள் முறையாக ஒரே நேரத்தில் சுண்டப்படுகின்றன.
(i)
அனைத்தும் தலையாக கிடைக்க நிகழ்தகவு என்ன?
விடை : 1/8
(ii)
குறைந்தபட்சம் ஒரு பூ கிடைக்க நிகழ்தகவு என்ன?
விடை : 7/8
(iii)
அதிகபட்சம் ஒரு தலை கிடைக்க நிகழ்தகவு என்ன?
விடை : 1/2
(iv)
அதிகபட்சம் இரண்டு பூக்கள் கிடைக்க நிகழ்தகவு என்ன? விடை :
7/8
17.
ஒரு பையில் 5 சிவப்பு நிறப்பந்துகளும் 6 வெள்ளை நிறப்பந்துகளும், 7 பச்சை நிறப்பந்துகளும்,
8 கருப்பு நிறப்பந்துகளும் உள்ளன. சமவாய்ப்பு முறையில் பையிலிருந்து ஒரு பந்து எடுக்கப்படுகிறது.
அந்த பந்து
(i)
வெள்ளை இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. விடை
: 3/13
(ii)
கருப்பு அல்லது சிவப்பு இருப்பதற்கான நிகழ்தகவு
காண்க. விடை : 1/2
(iii)
வெள்ளையாக இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. விடை : 10/13
(iv)
வெள்ளையாகவும், கருப்பாகவும் இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. விடை : 6/13
18.
ஒரு பெட்டியில் 20 குறைபாடில்லாத விளக்குகளும் ஒரு சில குறைபாடுடைய விளக்குகளும் உள்ளன.
பெட்டியிலிருந்து சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு விளக்கானது குறைபாடுடையதாக
இருப்பதற்கான வாய்ப்பு 3/8 எனில், குறைபாடுடைய விளக்குகளின் எண்ணிக்கையைக் காண்க. விடை :
12
19.
இரண்டு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. முதல் பகடையில் முகமதிப்பு இரட்டைப்படை
எண் அல்லது முகமதிப்புகளின் கூடுதல் 8 ஆகக் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க விடை : 5/9
20.
சீரான மூன்று நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படுகின்றன. அதிகபட்சம் 2 பூக்கள் அல்லது குறைந்த
பட்சம் 2 தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. விடை : 7/8
21.
செல்சியஸில் குறிக்கப்பட்ட வெப்பநிலை தரவின் திட்டவிலக்கமானது 5. இந்த வெப்பநிலை
தரவை
ஃபாரன்ஹீட் ஆக மாற்றும் பொழுது கிடைக்கும் தரவின் விலக்க வர்க்கச் சராசரியைக் காண்க.
விடை : 81
22.
இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒரு பெண்ணாவது இருப்பதற்கான நிகழ்தகவைக்
காண்க. விடை : 3/4
24.
ஒருபையில் 5 வெள்ளை மற்றும் சில கருப்பு பந்துகள் உள்ளன. பையிலிருந்து கருப்பு பந்து
கிடைப்பதற்கான நிகழ்தகவானது வெள்ளைப் பந்து கிடைப்பதற்கான நிகழ்தகவைப் போல் இருமடங்கு
எனில் கருப்புப் பந்துகளின் எண்ணிக்கையைக் காண்க. விடை : 10
Book Back
1.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவைகள் இல்லை?
அ)
வீச்சு
ஆ)
திட்டவிலக்கம்
இ)
கூட்டுச் சராசரி
ஈ)
விலக்க வர்க்கச் சராசரி
விடை : இ) கூட்டுச் சராசரி
2.8,8,8,8,8,……
8 ஆகிய தரவின் வீச்சு
அ)
0
ஆ)
1
இ)
8
ஈ)
3
விடை : அ) 0
3.
சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது
அ)
எப்பொழுதும் மிகை எண்
ஆ)
எப்பொழுதும் குறை எண்
இ)
பூச்சியம்
ஈ)
பூச்சியமற்ற முழுக்கள்
விடை : இ) பூச்சியம்
4.
100 தரவு புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில் விலக்கங்களின் வர்க்கக்
கூடுதலானது
அ)
40000
ஆ)
160900
இ)
160000
ஈ)
30000
விடை : ஆ) 160900
5.
முதல் 20 இயல் எண்களின் விலக்கவர்க்கச் சராசரியானது
அ)
32.25
ஆ)
44.25
இ)
33.25
ஈ)
30
விடை : இ) 33.25
6.
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும்
புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது
அ)
3
ஆ)
15
இ)
5
ஈ)
225
விடை : ஈ) 225
7.
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் P எனில் 3x+5, 3y+5, 3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது
அ)
3p+5
ஆ)
3p
இ)
p+5
ஈ)
9p+15
விடை : ஆ) 3p
8.
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 4மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது
அ)
3.5
ஆ)
3
இ)
4.5
ஈ)
2.5
விடை : அ) 3.5
9.
p சிவப்பு 4 நீல , I பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு
கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது
அ)
q/p+q+r
ஆ)
p/p+q+r
இ)
p+q/p+q+r
ஈ)
p+r/p+q+r
விடை : ஆ) p/p+q+r
10.
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப்பக்க
எண்ணின் ஒன்றாம் இடமதிப்பானது 7 ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது
அ)
3/10
ஆ)
7/10
இ)
3/9
ஈ)
7/9
விடை : ஆ) 7/10
11.
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு
2/3 எனில் ன் மதிப்பானது
அ)
2
ஆ)
1
இ)
3
ஈ)
1.5
விடை : ஆ) 1
12.
ஆங்கில எழுத்துக்கள் (a, b,…. z} யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு
செய்யப்படுகிறது. அந்த எழுத்துக்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
அ)
12/13
ஆ)
1/13
இ)
23/26
ஈ)
3/26
விடை : இ) 23/26
13.
ஒரு பணப்பையில் ₹ 2000 நோட்டுகள் 10ம் 1500 நோட்டுகள்
15 ம் ₹200 நோட்டுகள் 25 ம் உள்ளன. ஒரு
நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது. எனில், அந்த நோட்டு ₹500
நோட்டாகவோ அல்லது ₹ 200 நோட்டாகவோ இருப்பதற்கான
நிகழ்தகவு என்ன?
அ)
1/5
ஆ)
3/10
இ)
2/3
ஈ)
4/5
விடை : ஈ) 4/5
9th புள்ளியியல்
1.
ஓர் இடத்தின் ஒரு வாரக் குளிர்கால வெப்பநிலை 26°C, 24° C, 28° C, 31° C, 30° C,
26′ C, 24° C,எனக் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக்
காண்க. விடை: சராசரி வெப்பநிலை = 27°C
2.
ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60 கி.கி. அவர்களில் மூவரின் எடைகள்
56 கி.கி, 68 கி.கி மற்றும் 72 கி.கி எனில், நான்காமவரின் எடையைக் காண்க.
விடை: நான்காமவரின் எடை = 44 கி.கி
3.
ஒரு வகுப்பில் கணித அலகுத் தேர்வில், 10 மாணவர்கள் 75 மதிப்பெண், 12 மாணவர்கள் 60 மதிப்பெண்,
8 மாணவர்கள் 40 மதிப்பெண் மற்றும் 3 மாணவர்கள் 30 மதிப்பெண் பெற்றனர் எனில், மொத்தத்தில்
சராசரி மதிப்பெண் என்ன? விடை: 56.96
4.
கீழக்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க. 47, 53, 62, 71, 83, 21, 43, 47, 41
விடை: இடைநிலை அளவு = 47
5.
கீழ்க்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க. 36, 44, 86, 31, 37, 44, 86, 35,
60, 51
விடை: இடைநிலை அளவு = 44
6.
ஏறு வரிசையில் அமைக்கப்பட்ட 11, 12, 14, 18, x+2, x+4, 30, 32, 35, 41 என்ற தரவுகளின்
இடைநிலை அளவு 24 எனில் X இன் மதிப்பைக் காண்க. விடை: x = 21
7.
ஓர் ஆராய்ச்சியாளர் 13 எலிகளின் உணவு தேடும் பழக்கத்தை மைதா மாவைக் கொண்டு ஆராய்ச்சி
செய்து அவை உணவு தேட எடுத்துக் கொள்ளும் நேரத்தை 31, 33, 63, 33, 28, 29, 33, 27,
27, 34, 35, 28, 32 எனப் பட்டியலிட்டுள்ளார். எலிகள் உணவு தேட எடுத்துக்கொள்ளும் நேரத்தின்
இடைநிலை அளவு காண்க. விடை: இடைநிலை அளவு =
32
8.
ஐந்து மிகைமுழுக்களின் சராசரியானது அதன் இடைநிலை அளவைப்போல் இருமடங்கு அதில் நான்கு
முழுக்கள் 3, 4, 6, 9 மற்றும் அதன் இடைநிலை அளவு 6 எனில் ஐந்தாவது முழுவைக் காண்க.
விடை:
ஐந்தாவது முழு = 38
9.
10 தொழிலாளர்களின் மாத வருமானங்கள் முறையே : 5000, 7000, 5000, 7000, 8000, 7000,
7000, 8000, 7000, 5000. எனில் சராசரி, இடைநிலை அளவு, முகடு காண்க.
விடை: சராசரி = 6600, இடைநிலை அளவு
= 7000, முகடு = 7000
10.
கொடுக்கப்பட்டுள்ள தரவுகளுக்கு முகடு காண்க. 3.1, 3.2, 3.3, 2.1, 1.3, 3.3, 3.1.
விடை: முகடு = 3.1, 3.3
11.
11, 15, 17, x+1, 19, x-2, 3 என்ற தரவுகளின் சராசரி 14 எனில், x இன் மதிப்பைக் காண்க.
மேலும் X இன் மதிப்பைக் கொண்டு தரவுகளின் முகடு காண்க. விடை: முகடு = 15
Book Back
1.
மையப்புள்ளி m, தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை ‘b’ எனில், அதன் கீழ்
எல்லை .
(1)
2m – b
(2)
2m + b
(3)
m – b
(4)
m – 2b
விடை: (2) 2m – b
2.
ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின்
சராசரி 78 ஆக அமைகிறது எனில், நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு?
(1)
101
(2)
100
(3)
99
(4)
98
விடை: (3) 99
3.
ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.
(1)
நிகழ்வெண்
(2)
வீச்சு
(3)
முகடு
(4)
இடைநிலை அளவு
விடை: (3) முகடு
4.
பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி
எது?
(1)
2,2,2,4
(2)
1,3,3,3,5
(3)
1,1,2,5,6
(4)
1,1,2,1,5
விடை: (2) 1,3,3,3,5
5.
சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை
(1)
0
(2)
n – 1
(3)
n
(4)
n + 1
விடை: (1) 0
6.
a, b, c, d மற்றும் e இன் சராசரி 28. a, C மற்றும் e இன் சராசரி 24, எனில் 5 மற்றும்
d இன் சராசரி
(1)
24
(2)
35
(3)26
(4)
34
விடை: (4) 34
7.
x, x+2, x+4, x+6; x+8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி
(1)
9
(2)
11
(3)
13
(4)
15
விடை: (1) 9
8.
5, 9, x, 17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு
(1)
9
(2)
13
(3)
17
(4)
21
விடை: (2) 13
9.
முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி
(1)
26
(2)
46
(3)
48
(4)
52
விடை: (2) 46
10.
ஓர் எண் தொகுப்பின் சராசரி X. எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் Z, என்ற எண்ணால் பெருக்கப்படும்
போது அதன் சராசரி
(1)
X+z
(2)
X– z
(3)
z X
(4)
X
விடை: (3) z X
9th நிகழ்தகவு
1.
நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள். நீவிர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதரைத்
தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு
என்ன? விடை: 1/7
2.
ஒரு சீரான பகடையை உருட்டும் போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? விடை:
1/2
3.
ஒரு பானையில் 24 பந்துகள் உள்ளன. அவற்றில் 3 சிவப்பு, 5 நீலம் மற்றும் மீதி இருப்பவை
பச்சை நிறமுடையதாகும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போது அது
(i)
ஒரு நீல நிறப் பந்து இருக்க நிகழ்தகவு என்ன? விடை
: 5/24
(ii)
ஒரு சிவப்பு நிறப்பந்து இருக்க நிகழ்தகவு என்ன? விடை : 1/8
(iii)
ஒரு பச்சை நிறப் பந்தாக இருக்க நிகழ்தகவு என்ன? விடை : 2/3
4.
இரண்டு சீரான நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டும் போது, இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு
யாது? விடை : 1/4
5.
இரு பகடைகள் உருட்டப்படும் போது கிடைக்கும் எண்க ளின் கூடுதல்
(i)
1 இக்குச் சமமாக விடை: 0
(ii)
இக்குச் சமமாக விடை: 1/12
(iii)
13-ஐ விடச் சிறியதாக விடை: 1
6.
ஒர் உற்பத்தியாளர் 7000 ஒளி உமிழ் இருமுனைய (LED Lights) விளக்குகளை சோதனை செய்ததில்
அவற்றில் 25 விளக்குகள் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டன. சமவாய்ப்பு முறையில் ஒரு
விளக்கைத் தேர்ந்தெடுக்கும் போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு என்ன? விடை: 1/280
7.
ஒரு கால்பந்தாட்டத்தில் ஓர் இலக்குக் காப்பாளரால் (Goal – Keeper) 40 இல் 32 முயற்சிகளைத்
தடுக்க இயலும் எனில், எதிரணியானது ஒரு முயற்சியை இலக்காக மாற்றுவதற்கான நிகழ்தகவு காண்க.
விடை: 1/5
8.
ஒரு நிறுவனம் ஆறு மாதத்தில் 10000 மடிக்கணினிகளை உற்பத்தி செய்தது. அவற்றில் 25 மடிக்கணினிகள்
குறைபாடு உடையனவாகக் கண்டறியப்பட்டன. சம வாய்ப்பு முறையில் ஒரு மடிக்கணினியைத் தேர்ந்தெடுக்கும்
போது அது குறைபாடில்லாத தாக இருக்க நிகழ்தகவு யாது?
விடை: = 0.9775
9.
16 – 20 வயதுக்குட்பட்ட 400 இளைஞர் களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 191 பேர் வாக்காளர்
அடையாள அட்டை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டது. சமவாய்ப்பு முறையில் அவர்களில் ஒருவரைத்
தேர்ந்தெடுக்கும் போது அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபராக இல்லாமல்
இருக்க நிகழ்தகவு என்ன? விடை: = 209/400
10.
ஒரு வினாவிற்கான சரியான விடையை ஊகிப்பதற்கான நிகழ்தகவு x/3 என்க. சரியான விடையை ஊகிக்காமல்
இருப்பதற்கான நிகழ்தகவு x/5 எனில் x இன் மதிப்பு காண்க. விடை: 15/8
11.
ஒரு வரிப்பந்து (Tennis) விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான
நிகழ்தகவு 0.72 எனில் அவர் அந்த விளையாட்டில் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு என்ன?
விடை: 0.28
Book Back
1.
0 மற்றும் 1-க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு
அழைக்கப்படுகிறது.
(1)
சமவாய்ப்பு மாறி
(2)
முயற்சி
(3)
எளிய நிகழ்ச்சி
(4)
நிகழ்தகவு
விடை: (4) நிகழ்தகவு
2.
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி
(1)
-1 மற்றும் +1
(2)
0 மற்றும் 1
(3)
0 மற்றும் n
(4)
0 மற்றும் ∞
விடை: (2) 0 மற்றும் 1
3.
ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
(1)
பட்டறி நிகழ்தகவு
(2)
தொன்மை நிகழ்தகவு
(3)
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
(4)
(1) வும் அல்ல (2) வும் அல்ல
விடை: (1) பட்டறிவு நிகழ்தகவு
4.
ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது?
(1)
பூச்சியத்திற்குச் சமம்
(2)
பூச்சியத்தை விடப் பெரியது
(3)
1 இக்குச் சமம்
(4)
பூச்சியத்தை விடச் சிறியது.
விடை: (4) பூச்சியத்தை விடச் சிறியது
5.
ஒரு சம வாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொழுதும்
இதற்குச் சமம்.
(1)
ஒன்று
(2)
பூச்சியம்
(3)
முடிவிலி
(4)
மேற்கண்ட அனைத்தும்
விடை: (1) ஒன்று
6.
A என்பது S இன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A’ என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில்
P(A') இன் மதிப்பு
(1)
1
(2)
0
(3)
1 – A
(4)
1 – P(A)
விடை: (4) 1 – P(A)
7.
பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது.
(1)
0
(2)
0.5
(3)
1
(4)
-1
விடை: (4) -1
8.
ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(1)
முயற்சி
(2)
எளிய நிகழ்ச்சி
(3)
கூட்டு நிகழ்ச்சி
(4)
விளைவு
விடை: (4) விளைவு
9.
ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு ………… என அழைக்கப்படுகிறது.
(1)
நிகழ்ச்சி
(2)
விளைவு
(3)
கூறுபுள்ளி
(4)
மேற்கண்ட எதுவுமில்லை
விடை: (1) நிகழ்ச்சி
10.
ஒரு பகடையானது ………. இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.
(1)
சிறியதாக
(2)
சீரானதாக
(3)
ஆறு முகம் கொண்டதாக
(4)
வட்டமாக
விடை:
(2) சீரானதாக
8th புள்ளியியல்
1.
(25 – 35) பிரிவு இடைவெளியின் மேல் எல்லை விடை
: 35
2.
200, 15, 20, 103, 3, 197 இன் வீச்சு விடை
: 197
3.
பிரிவு அளவு 10 மற்றும் வீச்சு 80 எனில், பிரிவுகளின் எண்ணிக்கை விடை : 8
Book Back
4.
தரவு என்பது ………………………….. இன் தொகுப்பு
அ)
எண்கள்
ஆ)
எழுத்துகள்
இ)
அளவுகள்
ஈ)
இவை அனைத்தும்
விடை : ஈ) இவை அனைத்தும்
5.
கொடுக்கப்பட்டத் தரவுகளில் ஒரு மதிப்பு எத்தனை முறை வருகிறது எனக் கூறுவது அம்மதிப்பின்
அ) நேர்க் கோட்டுக் குறிகள்
ஆ)
தரவு
இ)
நிகழ்வெண்
ஈ)
எதுவுமில்லை
விடை : இ) நிகழ்வெண்
6.
கொடுக்கப்பட்ட விவரங்களில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய அளவுகளின் வித்தியாசம்
………
அ)
வீச்சு
ஆ)
நிகழ்வெண்
இ)
மாறி
ஈ)
ஏதுமில்லை
விடை : அ) வீச்சு
7.
கொடுக்கப்பட்டத் தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்வது ……………
அ)
தொகுக்கப்படாத
ஆ)
தொகுக்கப்பட்டது
இ)
நிகழ்வெண்
ஈ)
ஏதுமில்லை
விடை : ஆ) தொகுக்கப்பட்டது
8.
உள்ளடக்கியத் தொடர் ஒரு …………………………. தொடர்
அ)
தொடர்ச்சியான
ஆ)
தொடர்ச்சியற்ற
இ)
இரண்டும்
ஈ)
ஏதுமில்லை
விடை : ஆ) தொடர்ச்சியற்ற
9.
பிரிவு இடைவெளிகளில், ஒரு பிரிவு இடைவெளியின் மேல் எல்லையானது
அடுத்தப்
பிரிவு இடைவெளியின் கீழ் எல்லையாக இருந்தால் அது …………………. தொடர்.
அ)
உள்ளடக்கிய
ஆ)
விலக்கிய
இ)
தொகுக்கப்படாத
ஈ)
ஏதுமில்லை
விடை : ஆ) விலக்கிய
10.
தொகுக்கப்படாத விவரங்களின் வரைபட விளக்கமுறை ………………
அ)
நிகழ்வுச் செவ்வகம்
ஆ)
கிகழ்வுப் பலகோணம்
இ)
வட்ட விளக்கப்படம்
ஈ)
இவை அனைத்தும்
விடை : இ) வட்ட விளக்கப்படம்
11.
நிகழ்வுச் செவ்வகம் என்பது ஒரு …………………. நிகழ்வெண்
பரவல்.
அ)
தொடர்ச்சியான
ஆ)
தொடர்ச்சியற்ற
இ)
தனித்த
ஈ)
ஏதுமில்லை
விடை : அ) தொடர்ச்சியான
12.
……. என்பது வரைபட முறையில் தொடர்ச்சியான நிகழ்வெண்
பரவலுக்கான நேர்கோட்டு வரைபடம் ஆகும்.
அ)
நிகழ்வுப் பலகோணம்
ஆ)
நிகழ்வுச் செவ்வகம்
இ)
வட்ட விளக்கப்படம்
ஈ)
பட்டை விளக்கப்படம்
விடை : அ) நிகழ்வுப் பலகோணம்
13.
தொகுக்கப்பட்ட விவரங்களுக்கான வரைபட விளக்கப்படம் ………………………….
அ)
பட்டை விளக்கப்படம்
ஆ)
பட விளக்க முறை
இ)
வட்ட விளக்கப் படம்
ஈ)
நிகழ்வுச் செவ்வகம்
விடை
: ஈ) நிகழ்வுச் செவ்வகம்
7th புள்ளியியல்
1.
முதல் 10 இயல் எண்க ளின் சராசரி விடை :
5.5
2.
15 புத்தகங்களின் சராசரி விற்பனை விலை ₹235 எனில்,
மொத்த விற்பனை விலை ஆகும்.
விடை : 3,525
3.
2, 9, 5, 4, 4, 8, 10 ஆகிய மதிப்பெண்க ளின் சராசரியானது விடை : 6
4.
முழுக்களான -10 இக்கும் 10 இக்கும் இடையேயுள்ள எண்களின் சராசரி _ ஆகும். விடை : 0
5.
8 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களின் வயது 13, 12, 13, 14, 12, 13, 13, 14, 12, 13,
13, 14, 13, 12, 14 எனில், அம்மாணவர்களின் சராசரி வயதைக் கண்டறியவும். விடை : 13
6.
அறிவியல் தேர்வில் 14 மாணவர்களின் மதிப்பெண்கள் (50 மதிப்பெண்களுக்கு) கீழேக் கொடுக்கப்பட்டுள்ள
ன. அவை 34, 23, 10, 45, 44, 47, 35, 37, 41, 30, 28, 32, 45, 39 எனில்,
i)
சராசரி மதிப்பெண்ணைக் காண்க. விடை : 35
ii)
அதிகபட்ச மதிப்பெண்ணைக் காண்க. விடை : 47
iii)
குறைந்தப்பட்ச மதிப்பெண்ணைக் காண்க. விடை
: 10
7.
ஒரு குழுவில் உள்ள 11 மாணவர்களின் சராசரி உயரம் 150 செ.மீ அம்மாணவர்களின் உயரங்க ள்
154 செ.மீ, 145 செ.மீ, Y செ.மீ, Y + 4 செ.மீ, 160 செ.மீ, 151 செ.மீ, 149 செ.மீ,
149 செ.மீ, 150 செ.மீ, 144 செ.மீ மற்றும் 140 செ.மீ எனில் Y இன் மதிப்பைக் கண்டுபிடித்து,
இரண்டு மாணவர்களின் உயரத்தைக் காண்க. விடை :152 செ.மீ, 156 செ.மீ
8.
ஒரு கிரிக்கெட் அணி கடைசி 10 போட்டிகளில் பெற்ற ஓட்டங்களின் சராசரி 276 ஆகும். அந்த
ஓட்டங்கள் 235, 400, 351, x, 100, 315, 410, 165, 260, மற்றும் 284 எனில், அந்த அணி
4 வது போட்டியில் பெற்ற ஓட்டங்களைக் கண்டுபிடி? விடை : 240
9.
10 மதிப்புகளின் கூட்டுச் சராசரி 22 எனக் கண்டறியப்பட்டது. மேலும் ஒரு புதிய மதிப்பு
44 ஐ அந்த மதிப்புகளுடன் சேர்த்தால், புதிய சராசரி என்னவாக இருக்கும்? விடை : 24
10.
ஒரு கபடி அணி 20 பந்தயங்களில் எடுத்த புள்ளிகள், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
36, 35, 27, 28, 29, 31, 32, 31, 35, 38, 38, 31, 28, 31, 34, 33, 34, 31, 30, 29 அந்த
அணி எடுத்த புள்ளிகளின் முகடு காண்க. விடை
: 31
11.
11 கிரிக்கெட் வீரர்களின் வயது (ஆண்டுகளில்) கீழேக் கொடுக்கப் பட்டுள்ள து. 25,
36, 39,38 40, 36, 25, 25, 38, 26, 36 அவர்களுடைய வயதுகளின் முகடினைக் கண்டுபிடிக்கவும். விடை :
25, 36
12.
பின்வரும் தரவுகளின் முகடு காண்க. 12, 14, 12, 16, 15, 13, 14, 18, 19, 12, 14,
15, 16, 15, 16, 16,15, 17, 13, 16, 16, 15, 15, 13, 15, 17,1 5,1 4, 15, 13, 15,
14. விடை : 15
13.
தரவுகள் 12, 14, 23, 25, 34, 11, 42, 45, 32, 22, 44 ஆகியவற்றின் இடைநிலையளவு விடை : 25
14.
முதல் 10 இரட்டைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு விடை : 11
15.
கொடுக்கப்பட்டத் தரவின் இடைநிலையைக் கண்டறியவும் 35, 25, 34, 36, 45, 18, 28. விடை : 34
16.
ஒரு இருசக்கரவாகனம் விற்பனை செய்யும் கடையின் வாராந்திர விற்பனையானது, கடந்த 14 வாரங்களுக்குக்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 10, 6, 8, 3, 5, 6, 4, 7, 12, 13, 16, 10, 4, 7 இத்தரவின்
இடைநிலையளவைக் காண்க. விடை : 7
Book Back
1.
__________ என்பது முழுத் தரவின் பிரதிநிதித்துவ மதிப்பு.
i)
சராசரி
ii)
வீச்சு
iii)
குறைந்தபட்ச மதிப்பு
iv)
அதிகபட்ச மதிப்பு
விடை: i) சராசரி
2.
முதல் __________ இரட்டை எண்களின் சராசரி
i)
4
ii)
16
iii)
5
iv)
10
விடை : ii) 16
3.
இரண்டு எண்களின் சராசரி 20. அவற்றுள் ஒரு எண் 24 எனில், மற்றொரு எண் ___________.
i)
16
ii)
26
iii)
20
iv)
40
விடை : i) 16
4.
தரவுகள் 12, x, 28 ஆகிய தரவுகளின் சராசரி18 எனில், x இன் மதிப்பைக் காண்க.
i)
18
ii)
16
iii)
14
iv)
22)
விடை : iii) 14
5.
ஆறு மாணவர்கள் வரைவதற்காகப் பயன்படுத்தும் வண்ணங்கள் முறையே நீலம், ஆரஞ்சு, மஞ்சள்,
வெள்ளை , பச்சை மற்றும் நீலம் எனில், இவற்றின் முகடு __________ ஆகும்,
i)
நீலம்
ii)
பச்சை
iii)
வெள்ளை
iv)
மஞ்சள்
விடை : i) நீலம்
6.
3, 6, 9, 12, 15 பின்வ ரும் தரவுகளின் முகடு __________ ஆகும்,
i)
1
ii)
2
iii)
3
iv)
முகடு இல்லை
விடை : iv) முகடு இல்லை
7.
2, 1, 1, 3, 4, 5, 2 பின்வ ரும் தரவுகளின் முகடுகள் __________ மற்றும் __________
ஆகும்.
i)
1 மற்றும் 5
ii)
2 மற்றும் 3
iii)
2 மற்றும் 1
iv)
1 மற்றும் 4
விடை : iii) 2 மற்றும் 1
8.
a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால் ‘a’ இன் மதிப்பு காண்க.
i)
8
ii)
6
iii)
2
iv)
10
விடை : iii) 2
9.
தரவுகள் 24, 29, 34, 38, 35 மற்றும் 30 இன் இடைநிலையளவு
i)
29
ii)
30
iii)
34
iv)
32
விடை : iv) 32
10.
முதல் 6 ஒற்றைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு
i)
6
ii)
7
iii)
8
iv)
14
விடை : i) 6
ExplainTion kudunga sir
பதிலளிநீக்குminnal vega kanitham