Type Here to Get Search Results !

6th தமிழ் (இயல் 1 to 9) 6 to 10 கேள்வி உறுதி PROOF & PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

 6th Std Tamil Term 1

UNIT 1: தமிழ்த்தேன்

♦ இன்பத்தமிழ் (பாரதிதாசன்)

♦ தமிழ்க்கும்மி (பெருஞ்சித்திரனார்)

♦ வளர்தமிழ் (தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு)

♦ கனவு பலித்தது (தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்)

♦ தமிழ் எழுத்துகளின் வகை தொகை (இலக்கணம்)

 

UNIT 2: இயற்கை

சிலப்பதிகாரம்

♦ காணி நிலம் (பாரதியாரின் கவிதை)

♦ சிறகின் ஓசை (பறவைகள் & பறவைகள் சரணாலயம்)

♦ கிழவனும் கடலும்

♦ முதலெழுத்தும் சார்பெழுத்தும் (இலக்கணம்)

திருக்குறள்

UNIT 3: அறிவியல் தொழில்நுட்பம் (ஏவுகணை, அப்துல் கலாம்)

♦ அறிவியல் ஆத்திசூடி

♦ அறிவியலால் ஆள்வோம்

♦ கணியனின் நண்பன்

♦ ஒளி பிறந்தது

♦ மொழிமுதல், இறுதி எழுத்துகள் (இலக்கணம்)


6th Std Tamil Term 2

UNIT 1: கல்வி – கண்ணெனத் தகும்

♦ மூதுரை (ஒளவையார்)

♦ துன்பம் வெல்லும் கல்வி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

♦ கல்விக்கண் திறந்தவர் (காமராசர்)

♦ நூலகம் நோக்கி (நூலகம் பற்றிய செய்திகள்)

♦ இன எழுத்துகள் (இலக்கணம்)

UNIT 2: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்

♦ ஆசாரக்கோவை (பெருவாயின் முள்ளியார்) (பதினெண்கீழ்கணக்கு)

♦ கண்மணியே கண்ணுறங்கு (பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தின் பத்து பருவங்களில் ' தால்' என்பதும் ஒன்றாகும்.) (நாட்டுப்புறப்பாட்டு)

தமிழர் பெருவிழா

♦ மனம் கவரும் மாமல்லபுரம் (மாமல்லபுரம்)

♦ மயங்கொலிகள்

திருக்குறள்

UNIT 3: தொழில் வணிகம் – கூடித் தொழில் செய்

♦ நானிலம் படைத்தவன் (முடியரசன்)

♦ கடலோடு விளையாடு

♦ வளரும் வணிகம் (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்)

♦ உழைப்பே மூலதனம்

♦ சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் (இலக்கணம்)


6th Std Tamil Term 3

UNIT 1: புதுமைகள் செய்யும் தேசமிது

♦ பாரதம் அன்றைய நாற்றங்கால்

♦ தமிழ்நாட்டில் காந்தி (1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.)

வேலுநாச்சியார்

♦ நால்வகைச் சொற்கள்  (இலக்கணம்)

UNIT 2: எல்லாரும் இன்புற

♦ பராபரக்கண்ணி (தாயுமானவர்)

♦ நீங்கள் நல்லவர்

♦ பசிப்பிணி போக்கிய பாவை (மணிமேகலை)

♦ பாதம்

♦ பெயர்ச்சொல் (இலக்கணம்)

திருக்குறள்

UNIT 3: இன்னுயிர் காப்போம்

♦ ஆசிய ஜோதி (கவிமணி தேசிக விநாயகனார்)

♦ மனிதநேயம் (வள்ளலார், அன்னை தெராசா)

♦ முடிவில் ஒரு தொடக்கம்

அணி இலக்கணம்




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

Proof

2022 Group 4

10 Questions

1. முடியரசன் இயற்றாத நூல் எது ? [2022 G4]

A) பூங்கொடி

B) நீலமேகம்

C) வீரகாவியம்

D) காவியப்பாவை

E) விடை தெரியவில்லை

(ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 127)

நூல் வெளி

·        முடியரசனின் இயற்பெயர் துரைராசு.

·        பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

·        திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாரட்டப்பெற்றவர்.

·        இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

 

2. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்? [2022 G4]

A) எம்.ஜி.இராமச்சந்திரன்

B) மூதறிஞர் இராஜாஜி

C) பெருந்தலைவர் காமராசர்

D) கலைஞர் கருணாநிதி

E) விடை தெரியவில்லை

(ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் –  பக்கம் எண் – 85)

 

காமராசரின் மதிய உணவுத்திட்டம்

§  1955-ம் ஆண்டு மார்ச் 27-ல் சென்னையில் ” சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு” நடந்தது. அம்மாநாட்டில் காமராசர் கூறியது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும்.

§  பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட குழந்தைகளும் படிக்கப் போவது இல்லை. ஏழைப்பயன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுபாடு பெரும்பாடாக உள்ளது.

§  ஒரு வேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று ஆடு, மாடு மேய்க்கப்போய் தங்கள் எதிர் காலத்தைப் பழகாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச் செய்வது முக்கியம்.

§  அதற்கு, ஏழைக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும். இதற்கு தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூடச் செலவாகும்.

§  நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவைப்பட்டால் அதற்காக தனி வரிகூட போடலாம் என்று காமராசர் கூறினார்.

§  அதன்படி மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்துவது என்றும் முதலில் எட்டையபுரத்தில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாரதியார் பிறந்து எட்டையபுரத்தில் 1956-ல் முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

§  1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.

 

3. ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது? [2022 G4]

A) கி.பி.1730

B) கி.பி.1880

C) கி.பி.1865

D) கி.பி.1800

E) விடை தெரியவில்லை

(ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் –  பக்கம் எண் – 158)

1. வேலுநாச்சியாரின் காலம்? 1730-1796

2. வேலு நாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமையேற்றவர்? குயிலி

3. வேலு நாச்சியாரின் கணவர்? முத்துவடுகநாதர்

4. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தவர்? வேலு நாச்சியார்

5. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு? 1780

 

 

4. சரியான அகரவரிசையைத் தேர்க? [2022 G4]

A) மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்

B) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து

C) முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்

D) மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்

E) விடை தெரியவில்லை

(ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – )

பாடம் 6.5 சுட்டெழுத்துக்கள், வினா எழுத்துகள்

9. பின்வரும் நவமணிகளை அகர வரிசைப்படுத்தி எழுதுக

நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து புஷ்பராகம், மரகதம்

விடை : கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்

 

5. பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக? [2022 G4]

A) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்

B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

C) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி

D) ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்.

E) விடை தெரியவில்லை

(ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 179)

பாடம் 8.5 பெயர்ச்சொல்

கீழ்காணும் பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.

பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

விடை : ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம்,  பூனை, மனிதன், மாணவன், மான், வெளவால

 

6. பெயர்ச்சொற்களைப் பொருத்துக? [2022 G4]

a) மல்லிகை – 1. சினைப்பெயர்

b) பள்ளி – 2. பண்புப்பெயர்

c) கிளை – 3. இடப்பெயர்

d) இனிமை – 4. பொருள்பெயர்

A) 4 3 1 2

B) 3 4 2 1

C) 4 3 2 1

D) 2 3 1 4

E) விடை தெரியவில்லை.

(ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 179)

பாடம் 8.5 பெயர்ச்சொல்

9. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.

·         காவியா புத்தகம் படித்தாள் – பொருட்பெயர்

·         காவியா பள்ளிக்குச் சென்றாள் – இடப்பெயர்

·         காவியா மாலையில் விளையாடினாள் – காலப்பெயர்

·         காவியா தலை அசைத்தாள் – சினைப்பெயர்

·         காவியா இனிமையாகப் பேசுவாள் – பண்புப்பெயர்

·         காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்

 

7. பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக? [2022 G4]

a) காலப்பெயர் – செம்மை

b) சினைப்பெயர் – கண்

c) பண்புப்பெயர் – ஆண்டு

d) தொழிற்பெயர் – ஆடுதல்

A) (a), (c)

B) (a), (b)

C) (c), (d)

D) (a), (d)

E) விடை தெரியவில்லை

(ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் – 178)

பாடம் 8.5 பெயர்ச்சொல்

பண்புப்பெயர்

பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

 

காலப்பெயர்

காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும். (எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

 

8. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்? [2022 G4]

A) ஆத்திச்சூடி

B) கொன்றை வேந்தன்

C) நல்வழி

D) மூதுரை

E) விடை தெரியவில்லை

(ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண். 78)

மூதுரை (ஒளவையார்)

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு  – மூதுரை

 

9. பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு வெளியிட்டவர்? [2022 G4]

A) மெய்யப்பர்

B) உ.வே.சாமிநாதர்

C) இலக்குவனார்

D) மீனாட்சி சுந்தரனார்

E) விடை தெரியவில்லை

(ஆறாம் வகுப்பு – பழைய புத்தகம் – பக்கம் எண் – 9)

 

10. ‘மரமும் பழைய குடையும் – ஆசிரியர்

A. பாரதிதாசன்

B. அழகிய சொக்கநாதப் புலவர்

C. காளமேகப் புலவர்.

D. புதுமைப்பித்தன்

E. விடை தெரியவில்லை

(ஆறாம் வகுப்பு – பழைய புத்தகம் – பருவம் III – பக்கம் எண் – 44)

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்