Type Here to Get Search Results !

Last Minute Study-10 [தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்] PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

பகுதி – இ: தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

3

2

1

4

5.நிகழ்கலை (நாட்டுபுறக்காலைகள்) தொடர்பான செய்திகள்.

11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

2

4

2

0

21. நூலகம் பற்றிய செய்திகள்




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

21. நூலகம் பற்றிய செய்திகள்

நூலகம் பற்றிய செய்திகள்.

8th Tamil பாடம் 4.5 வேற்றுமை

6th Tamil  பாடம் 4.4 நூலகம் நோக்கி

7th Tamil  பாடம் 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

9th Tamil பாடம் 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

நூலகம் – 10th வகுப்பு சமச்சீர் (Old Book)

8th Tamil பாடம் 4.5 வேற்றுமை

"நூலகம் அறிவின் ஊற்று"

‘வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்’- என்றார் பேரறிஞர் அண்ணா .

ஊரில் உள்ள ஒரு நூலகத்தையாவது, நாம் பயன்படுத்த வேண்டாமா? நூலகத்தைப் பயன்படுத்தும் முன் நூலகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நூலகத்தின் தேவை : ‘சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக உயர்த்துவது நூலகம்’

ஏழை மாணவர்களும் இளைஞர்களும் படிப்பதற்குத் தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

அன்றாடச் செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது.

ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது.

வகைகள் : மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின் நூலகம் எனப் பலவகை நூலகங்கள் உள்ளன.

நூலகத்தில் உள்ளவை : ‘அறிவுப் பசிக்கு உணவு நூலகம்’

தமிழ் மற்றும் ஆங்கிலக் கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுநூல்கள், வரலாற்று நூல்கள், அறிவியல் நூல்கள், தொழில்நுட்ப நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், அகராதிகள், களஞ்சியங்கள் ஆகியவை நூலகத்தில் உள்ளன.

படிக்கும் முறை : நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாகப் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும். நூல்களைக் கிழிக்கவோ, சேதப்படுத்துவதோ கூடாது. படித்து முடித்தவுடன் மீண்டும் உரிய அலமாரியில் நூலை வைக்க வேண்டும்.

‘நம் அகம் நூல் அகம்’ - நாளும் நூல் பல கற்று சிறந்த மேதையாக வரவும், நூலகம் துணை செய்கிறது. நூலகம் தேடிச் சென்று, நூல்களைப் படிப்போம்! உயர்வோம்!!

‘நூலகம் அறிஞர்களின் வாழ்வில்லம்’

6th (2) பாடம் 4.4 நூலகம் நோக்கி

1.‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’? முதுமொழி.

2. நூலகத்தின் வகைகள் : மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், பகுதி நேர நூலகம், தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும்.

3. நூலக விதிகளை உருவாக்கியவர் யார்? நூலக விதிகளை உருவாக்கியவர் முனைவர் இரா. அரங்கநாதன் ஆவார்.

4. இந்திய நூலகவியலின் தந்தை என அழைக்பபடுபவர் யார்? முனைவர் இரா. அரங்கநாதன் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

5. சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கப்படுகிறது? சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

6. நூலகத்தில் படித்து உயர்ந்தோர் சிலரது பெயர்களை எழுதுக? அறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்

7. தமிழக அரசு நூலகம் இல்லா ஊருக்காக செயல்படுத்திய திட்டம் யாது? தமிழக அரசு நூலகம் இல்லா ஊருக்காக நடமாடும் நூலகம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

8. அண்ணா நூற்றாண்டு நூலகம்

i. ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். (ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.)

ii. இது சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் உள்ளது

iv. இது எட்டு அடுக்குகளைக் கொண்டது.

i.              இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர்.

ii.             

தரைத்தளம்

·         தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது.

·         அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள்
உள்ளன.

·         கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன.

·         அவர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர்.

·         இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது.

·         படியெடுக்கும் வசதியும் உண்டு.

 

முதல் தளம்

·         முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி.

·         குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

·         இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.

·         பிற நாடுகளில் இருந்து திரட்டப்ப ட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

 

பிற தளங்கள்

§  இரண்டாம் தளம் – தமிழ் நூல்கள்

§  மூன்றாம் தளம் – கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்

§  நான்காம் தளம் – பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி

§  ஐந்தாம் தளம் – கணிதம், அறிவியல், மருத்துவம்

§  ஆறாம் தளம் – பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை

§  ஏழாம் தளம் – வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

§  எட்டாம் தளம் – கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு

 

(i) ரயிலின் கதை – பெ.நா. அப்புஸ்வாமி

(ii) சிறுவர் கலைக் களஞ்சியம் – பெ. தூரன்

(iii) எங்கிருந்தோ வந்தான் – கோ. மா. கோதண்டம்

(iv) நல்ல நண்பர்கள் – அழ. வள்ளியப்பா

(v) நெருப்புக்கோட்டை – வாண்டுமாமா

(vi) சிறுவர் நாடோடிக் கதைகள் – கி. ராஜநாராயணன்

(vii) பனியார மழையும் பறவைகளின் மொழியும் – கழனியூரன்

(viii) மீசைக்காரப் பூனை – பாவண்ண ன்

(ix) எழுதத் தெரிந்த புலி – எஸ்.ராமகிருஷ்ணன்

(x) குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் – லியோ டால்ஸ்டாய்.

 

7th (2)  பாடம் 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் :

·         இதுதான் தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.

·         இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று.

·         கி.பி. 1122 முதல் இயங்கி வருகிறது என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

·         இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.

·         தலை சிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக்கருவிகளும் இடம்பெற்றுள்ளன.

 

உ.வே.சா. நூலகம் – சென்னை :

·         இந்நூலகம் கி.பி. 1942 இல் தொடங்கப்பட்டது.

·         தமிழ், தெலுங்கு , வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன.

·         2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

 

கீழ்த்திசை நூலகம் – சென்னை

·         இந்நூலகம் கி.பி. 1869ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

·         இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன.

·         கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் உள்ளன.

·         தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகிறது.

 

கன்னிமாரா நூலகம் – சென்னை :

·         இது கி.பி. 1896இல் தொடங்கப்பட்டது.

·         தமிழ்நாட்டின் மைய நூலகம்.

·         இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்று.

·         ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.

·         இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி இங்குப் பாதுகாக்கப்படுகிறது.

·         மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது.

 

9th Tamil பாடம் 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா

புத்தகம் பற்றிய பொன் மொழிகள்

·         தொட்டுப் பார்த்தால் காகிதம்

·         படித்துப் பார்த்தால் ஆயுதம்

·         புத்தகமே நம்மைச் சீர்திருத்தும் நண்பன்.

·         உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம்

·         போக விரும்பினால் ஒரு நூலகத்துக்குச் செல் – டெஸ்கார்ட்ஸ்

·         கைத்துப்பாக்கிகளை விடப் பெரிய ஆயுதம் புத்தகமே – லெனின்

·         உடலுக்கு உடற்பயிற்சி போல் மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு – சிக்மண்ட் ஃபிராய்ட்

·         புது வாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்

·         நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன். – ஆபிரகாம் லிங்கன்

·         எந்தப் புத்தகத்தையும் படிக்காத புத்தகம் என்று சொல்லாதீர்கள்; படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லுங்கள் – விவேகானந்தர்

 

தேசிய நூலக நாள் – காரணங்கள்

·         இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் நூலகவியலாளருமான சீர்காழி இராமாமிர்தம் ரங்கநாதன் (சீர்காழி. இரா.அரங்கநாதன்] 09.08.1892 – ல் பிறந்தார். இவரது பிறந்த தினம் “தேசிய நூலக நாள்ஆகும்.

·         இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இவர், நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் என்னும் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்.

·         நூலகவியலின் சிந்தனைகளுக்காக உலக அளவில் பல பரிசுகளைப் பெற்ற பெருந்தகையாளர். இந்திய அரசு இவருக்குப் பத்ம ஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

·         இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நூலகத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

·         நூலகவியலின் உயர்பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட “இந்தியலகவியல் பள்ளியில்பணியாற்றினார்.

·         வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்தர நூலகங்களில் உறுப்பினராகவும், உயர்பதவிகளையும் பெற்றிருந்தார்.

·         ஐதராபாத்தில் உள்ள “நகர நடுவ நூலகத்தில்இவரது உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.

·         27.09.1972ல் பெங்களுரில் இறுதிநிலை அடைந்த, சீர்காழி இரா. அரங்கநாதனின் மேற்கூறிய பெருமைகளே, அவரது பிறந்தநாளை “தேசிய நூலக தினமாககொண்டாடு வதற்கான காரணங்கள் ஆகும்.

 

அறிஞர் அண்ணா

நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரை

·         மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப் போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலைஎன்னும் அண்ணாவின் வானொலி உரை

நூலகம்:

·         ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும் எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே .

·         வீட்டிற்கோர் புத்தகசாலைஎன்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும்.

·         வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும்.

·         நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூல்களையாவது கற்க முனையுங்கள்.

·         பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர் “திருக்குறள்கட்டாயம் வேண்டும்.

·         சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.

·         விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.

·         நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள்

·         மக்களின் மனமாசு துடைத்தவர்கள்

·         தொலைதேசங்களைக் கண்டவர்கள்

·         வீரர்கள், விவேகிகள் வாழ்க்கை - ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .

·         புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் - என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.

 

அண்ணாவின் புகழ்பெற்ற மொழிகள்

·         மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு .

·         கத்தியைத் தீட்டாதே, உன்றன் புத்தியைத் தீட்டு

·         இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்

·         நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

·         சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.

·         பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

1. அண்ணா நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் தமிழக அரசு உருவாக்கியது? நூலகம்

2. வீட்டிற்கோர் புத்தக சாலை என்பது அண்ணாவின் ………… ஆகும்? வானொலி உரை

3. தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்டவர் ………? அறிஞர் அண்ணா

4. அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு? 2010

5. நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு? 2009

6. இருமொழிச்சட்டத்தை உருவாக்கியவர் யார்? அறிஞர் அண்ணா

7. அறிஞர் அண்ணாவின் படைப்பு? சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், இன்ப ஒளி

8. அறிஞர் அண்ணா இதழாசிரியராகப் பணியாற்றிய இதழ்? ஹோம்ரூல், திராவிட நாடு, ஹோம்லேண்ட், மாலை மணி, நம்நாடு, காஞ்சி

9. அறிஞர் அண்ணா துணையாசிரியராகப் பணியாற்றிய இதழ்? குடியரசு, விடுதலை

 

நூலகம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் (Old Book)

·         ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.

·         கிரீஸ் நகர அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.

·         இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.

·         புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

·         ஆங்கிலத்தில் “லைப்ரரிஎன்னும் சொல் நூலகத்தை குறிக்கின்றது.

·         இலத்தின் மொழியில் “லிப்ராஎன்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.

·         இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழக அரசுத் தான் 1948ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றியது.

·         தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை “புத்தகப்பூங்கொத்துஎன்னும் வகுப்பறை நூலகத் திட்ட்டத்தை தொடங்கியுள்ளது.

·         இந்திய நூலகத் தந்தை : சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்.

 

தமிழகத்தின் மிகப் பழைமையான நூலகங்கள்:

·         சரசுவதி மகால் நூலகம், தஞ்சை. (1820)

·         அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை.

·         கன்னிமாரா நூலகம், சென்னன. (1869),

·         சென்னைப் பல்கலைக்கழக நூலகம் (1907),

·         அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம் (1929),

·         டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை (1947),

·         மறைமலை அடிகளார் நூலகம், சென்னை (1958),

·         மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் (1966),

·         உலகத் தமிழ் ஆராய்;ச்சி நிறுவன நூலகம், சென்னை (1970),

·         தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் (1981)

கருத்துரையிடுக

0 கருத்துகள்