Type Here to Get Search Results !

காலம் மற்றும் வேலை Test -2 Group 2A 2022 PDF




எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

குரூப் 2/2A 2022 மாதிரி வினாத்தாள்

Date –10-5-2022     

காலம் மற்றும் வேலை    

Questions – 25

 

1.  A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை __________ நாள்களில் முடிப்பர். (8th New Book)

a. 1

b. 2

c. 3

d. 4

 

2.  A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார்.

(8th New Book)

a. 5

b. 6

c. 7

d. 8

 

3.  A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book)

a. 23

b. 24

c. 25

d. 26

 

 

4.  A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை 200000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில், A பெறும் தொகை ________ ஆகும். (8th New Book)

a. 1,10,000

b. 1,20,000

c. 1,30,000

d. 1,40,000

 

5.  A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? (8th New Book)

a. 2 மணிகள்

b. 3 மணிகள்

c. 4 மணிகள்

d. 5 மணிகள்

 

6.  A ஆனவர் ஒரு வேலையை 45 நாட்களில் முடிப்பார் அவர் 15 நாட்கள் மட்டும் வேலையைச் செய்கிறார். மீதமுள்ள வேலையை B ஆனவர் 24 நாள்களில் முடிக்கிறார்எனில், அந்த வேலையின் 80% ஐ இருவரும் இணைந்து முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.

a. 12 நாள்கள்

b. 14 நாள்கள்

c. 18 நாள்கள்

d. 16 நாள்கள்

 

7.  A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க.

a. 6 நாள்கள்

b. 7 நாள்கள்

c. 8 நாள்கள்

d. 9 நாள்கள்

 

8.   A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்தப் வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க. (8th New Book)

a. 6 நாள்கள்

b. 7 நாள்கள்

c. 8 நாள்கள்

d. 9 நாள்கள்

 

9. P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 30 நாள்களில் முடிப்பர் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாள்கள் வேலை செய்த பிறகு Q ஆனவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P ஆனவர் 5 நாள்களில் முடிக்கிறார் எனில், தொடங்கியதிலிருந்து எத்தனை நாள்களுக்கு பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்? (8th New Book)

a. 6 நாள்கள்

b. 7 நாள்கள்

c. 8 நாள்கள்

d. 9 நாள்கள்

 

10.  5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ________ நாள்களில் செய்து முடிப்பர். (8th New Book)

a. 5

b. 6

c. 7

d. 8

 

11.  210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாள்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து, 20 நாள்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?

 a. 160 ஆண்கள்

 b. 161 ஆண்கள்

 c. 162 ஆண்கள்

 d. 163 ஆண்கள்

 

12.  6 சரக்கு வண்டிகள் 5 நாள்களில் 135 டன்கள் சரக்குகளை இடம் பெயர்க்கின்றன எனில், 1800 டன்கள் சரக்குகளை 4 நாள்களில் இடம் பெயர்க்க எத்தனை சரக்கு வண்டிகள் கூடுதலாகத் தேவை?

a. 2 சரக்கு வண்டிகள்

b. 3 சரக்கு வண்டிகள்

c. 4 சரக்கு வண்டிகள்

d. 5 சரக்கு வண்டிகள்

 

13.  தச்சர் A ஆனவர் ஒரு நாற்காலியின் பாகங்களைப் பொருத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதே வேலையைச் செய்ய தச்சர் B ஆனவர் தச்சர் A ஐ விட 3 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறார். இருவரும் இணைந்து வேலைச் செய்து 22 நாற்காலிகளின் பாகங்களைப் பொருத்த எவ்வளவு நேரமாகும்?

a. 180 நிமிடங்கள்

b. 181 நிமிடங்கள்

c. 182 நிமிடங்கள்

d. 183 நிமிடங்கள்

 

14.  ஒரு சிமிட்டி தொழிற்சாலையானது 36 இயந்திரங்களின் உதவியுடன் 12 நாள்களில் 7000 சிமிட்டி பைகளைத் தயாரிக்கிறது. 24 இயந்திரங்களைப் பயன்படுத்தி 18 நாள்களில் எத்தனை சிமிட்டி பைகளைத் தயாரிக்கலாம்?

a. 5000 சிமிட்டி பைகள்

b. 6000 சிமிட்டி பைகள்

c. 7000 சிமிட்டி பைகள்

d. 8000 சிமிட்டி பைகள்

 

 

 

15.  ஒரு சோப்புத் தொழிற்சாலையானது நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்து 6 நாள்களில் 9600 சோப்புகளைத் தயாரிக்கிறது. நாளொன்றுக்கு கூடுதலாக 3 மணி நேரம் வேலை செய்து 14400 சோப்புகள் தயாரிக்க அதற்கு எத்தனை நாள்கள் ஆகும்?

a. 8 நாள்கள்

b. 8 1/2 நாள்கள்

c. 7 நாள்கள்

d. 7 1/2 நாள்கள்

 

16.  A ஒரு வேலையை 15 நாட்களில் செய்வார். B அதே வேலையை 20 நாட்களில் செய்வார். அவ்வேலையை A, B இருவரும் சேர்ந்து 4 நாட்கள் முடித்தபின் மீதமுள்ள வேலையின் பின்னம் (19-03-2022)

(A) 1/4

(B) 1/10

(C) 7/15

(D) 8/15

 

17.  ஒரு முகாமில் 65 நாட்களுக்கு 490 வீரர்களுக்குப் போதுமான மளிகைப் பொருட்கள் இருந்தன. 15 நாட்களுக்குப் பிறகு, மேலும் பல வீரர்கள் முகாமிற்கு வந்ததால், மீதமிருந்த மளிகைப் பொருட்களானது 35 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது எனில் எத்தனை வீரர்கள் முகாமில் சேர்ந்தனர்? (24-04-2022)

(A) 120

(B) 490

(C) 700

(D) 210

 

18.  A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களில் செய்ய முடியும். B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் செய்யமுடியுமென்றால் அவர்கள் எத்தனை நாட்களில் அதை ஒன்றாகச் செய்து முடிப்பார்கள் [22-01-2022]

(A) 47 நாட்கள்

(B) 10 நாட்கள்

(C) 23 நாட்கள்

(D) 360 நாட்கள்

 

19.  15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில் அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால். அதே வேலையானது முடிய எத்தனை நாள்கள் ஆகும்? (19-03-2022)

(A) 30 நாட்கள்

(B) 40 நாட்கள்

(C) 25 நாட்கள்

(D) 20 நாட்கள்

 

20.  2 அச்சுக்கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக்கோர்ப்பவர்கள் தேவை ? (2019 G4)

a. 12

b. 10

c. 8

d. 7

 

21.  4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாக சேர்த்தால், அதே வேலையை ______ நாட்களில் செய்து முடிப்பார். (23/09/2021)

a. 7

b. 8

c. 9

d. 10

 

22.  X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாள்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ. 31000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க. (8th New Book )

a. 15000, 10000, 6000

b. 15000, 6000, 10000

c. 6000, 10000, 15000

d. 10000, 15000, 6000

23.  A மற்றும் B இருவரும் ஒரு வேலையை செய்கிறார்கள். A 12 நாட்களில் வேலையை முடிக்க முடியும் அதே வேலையை B 20 நாட்களில் முடிக்க முடியும் இருவரும் சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்த பின்பு A அவரை விட்டு சென்றுவிட்டார் மீதி வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார் (07/10/2017, 04/03/2020)

a. 9

b. 10

c. 12

d. 17

 

24.  ஒரு வெள்ள நிவாரண முகாமில் 80 நபர்களுக்குத் தேவையான உணவு 60 நாள்களுக்குப் போதுமானதாக உள்ளது. 10 நாள்களுக்குப் பின்னர், 20 நபர்கள் அந்த முகாமில் வந்து சேர்ந்தார்கள் எனில், அவ்வுணவு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? (7th New Book)

a. 10 நாள்கள்

b. 6 நாள்கள்

c. 15 நாள்கள்

d. 5 நாள்கள்

 

25.  ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்

a. 45 நிமிடங்கள்

b. 50 நிமிடங்கள்

c. 60 நிமிடங்கள்

d. 70 நிமிடங்கள்

 

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/05/test-2-group-2a-2022-answer-key.html 



 tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot,  tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham