எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு
நுண்ணறிவும் |
(i)
சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி
(HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM). (ii)
விகிதம் மற்றும் விகிதாசாரம். (iii)
தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம்
மற்றும் வேலை. (iv)
தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல்
– எண் வரிசை |
|
2022 GROUP - 2/2A |
விழுக்காடு |
3 |
தனி வட்டி
– கூட்டு வட்டி |
4 |
காலம்
மற்றும் வேலை. |
2 |
LCM
& HCF |
3 |
விகிதம்
மற்றும் விகிதாசாரம். |
2 |
ஒரு வகுப்பில் 40% பேர் மாணவர்கள். 60% மாணவிகள் தரம் பெற்றவர்கள்.
மொத்த மாணவ, மாணவியர்களில் 40% தரம் பெற்றவர்கள். வகுப்பின் மொத்த மாணவ, மாணவியர்களின்
எண்ணிக்கை 50 எனில், தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன ? [A] 2 [B] 4 [C] 6 [D] 8
ஒரு தொகையின் 15 % என்பது ரூ. 3000 எனில் அத்தொகையைக் காண்க
? [A] ரூ. 18,000 [B] ரூ. 20,000 [C] ரூ. 21,000 [D] ரூ. 25,000
80 பேர் கொண்ட வகுப்பறையில் 65 % பேர் ஆண்கள் எனில் பெண்களின்
எண்ணிக்கை எத்தனை? [A] 35 [B] 28 [C] 52 [D] 38
கூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12 % என்ற வீதத்தில் 3 மாதத்திற்கு
ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ஒரு லட்ச ரூபாய் செலுத்தப்பட்ட பின் 9 மாதம் கழித்து
மொத்த தொகை எவ்வளவு? [A] ரூ.1,09,000.00 [B] ரூ.1,09,060.00 [C] ரூ.1,09,060.30 [D] ரூ.1,09,272.70
அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால்
ரூ. 1000-க்கு ஆண்டு வட்டி வீதம் 10 % வீதப்படி, 18 மாதங்களுக்குக் கூட்டு வட்டி
காணவும் ? [A] ரூ. 157.62 [B] ரூ. 157.63 [C] ரூ. 157.61 [D] ரூ. 157.60
ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஒரே சீராக ஒவ்வொரு ஆண்டும்
4 % கூடிக் கொண்டே செல்கிறது. இப்பொழுது அதன் மக்கள் தொகை 32,448 எனில் இரண்டு ஆண்டுகளுக்கு
முன் மக்கள்தொகை என்னவாக இருந்திருக்கும் ? [A] 31424 [B] 28868 [C] 30000 [D] 31242
ரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால்,
வட்டி வீகிதத்தைக் காண்க? [A] 20% [B] 22 % [C] 18% [D] 24 %
ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப்
பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின்
மொத்தப் பக்கங்கள் எத்தனையாக இருக்கும்? [A] 170 பக்கங்கள் [B] 180 பக்கங்கள் [C] 175 பக்கங்கள் [D] 185 பக்கங்கள்
12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர்.
அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் ? [A] 16 [B] 24 [C] 26 [D] 54
இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம.
மற்றும் மி.பொ.வ. முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு
எண்ணைக் காண்க ? [A] 16 [B] 18 [C] 22 [D] 36
200-க்கும் 400-க்கும் இடையேயுள்ள இயல் எண்களில் 3, 5 மற்றும்
6 ஆகிய மூன்று எண்களைக் கொண்டு மீதியின்றி வகுபடும் எண்கள் எத்தனை ? [A] 8 [B] 9 [C] 7 [D] 6
கீழ்க்கண்ட எண்களில் 11 ஆல் மீதியின்றி வகுபடும் எண் எது
? [A] 235641 [B] 245642 [C] 315624 [D] 415624
A, B மற்றும் C என்ற மூன்று நபர்கள் ரூ. 120 – ஐ பகிர்ந்து
கொள்ளும்போது, A-ன் பங்கு B-ன் பங்கைவிட ரூ. 20 கூடுதலாகவும், C- ன் பங்கைவிட ரூ.
20 குறைவாகவும் இருந்தால் B-ன் பங்கு எவ்வளவு ? [A] ரூ. 10 [B] ரூ. 15 [C] ரூ. 20 [D] ரூ. 25
A: B = 4:6,B: C = 18 : 5, எனில் A: B: C யின் விகிதத்தை
காண்க ? [A] 12 : 18 : 5 [B] 12 : 5 : 18 [C] 18 : 12 : 5 [D] 5 : 18 : 12
Answer Key = https://minnalvegakanitham.blogspot.com/2021/12/tnpsc-group-22a-2019-maths.html
|
answer key எப்படி download கொடுக்கனும்னு சொல்லுங்க தம்பி.
பதிலளிநீக்குminnal vega kanitham