Type Here to Get Search Results !

சொல்லும் பொருளும் 2022 குரூப் 4 (VAO) 3 to 7 கேள்வி உறுதி PROOF

1



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

1. பொருத்துதல் -

(i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

(ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

1. பொருளறிந்து பொருத்துக : (2019 G4)

(a) தடக்கர் - கரடி

(b) எண்கு - காட்சி

(c) வள்உகிர் - பெரிய யானை

(d) தெரிசனம் - கூர்மையான நகம்

a.  3 1 4 2

b.  1 4 3 2

c.  1 2 3 4

d.  1 3 2 4

 

2. சொல்லுக்கேற்ற பொருளறிக : (2019 G4)

a.  வலிமை - திண்மை

b.  நாண் - தன்னைக்குறிப்பது

c.  கான் - பார்

d.  துணி – துன்பம்

 

3. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் (2019 G4)

றுண்டாகச் செய்வான் வினை

- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?

a. படை கவசம்

b. படை கருவிகள்

c. கைப்பொருள்

d. வலிமையான ஆயுதம்

 

4. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய - இத்தொடரில் உள்ள "துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க. (2018 G4)

a.  மாணிக்கம்

b.  மரகதம்

c.  இரத்தினம்

d.  பவளம்

 

5. "வித்தொடு சென்ற வட்டி”

என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன? (2018 G4)

a.  பனையோலைப் பெட்டி

b.  வயல்

c.  வட்ட வடிவு

d.  எல்லை

 

6. சொல்லைப் பொருளோடு பொருத்துக: (2018 G4)

சொல் - பொருள்

(a) வனப்பு 1.காடு

(b) அடவி 2.பக்கம்

(c) மருங்கு 3.இனிமை

(d) மதுரம் 4.அழகு

a.  2 1 4 3

b.  3 2 1 4

c.  4 1 2 3

d.  1 2 3 4

 

 

 

 

7. “என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க. (2018 G4)

a.  பவளம்

b.  முத்து

c.  மாணிக்கம்

d.  மரக்தம்

 

8. கடிகை என்பதன் பொருள் யாது? (2016 G4)

 a. அணிகலன்

 b. கடித்தல்

 c. கடுகு

 d. காரம்

 

9. செறு என்பதன் பொருள் (2016 G4)

a.  செருக்கு

b.  சேறு

c.  சோறு

d.  வயல்

 

10. பொருத்துக: (2016 G4)

சிந்தை - நீர்

நவ்வி - மேகம்

முகில் - எண்ணம்

புனல் - மான்

a.  2 1 3 4

b.  1 3 4 2

c.  3 4 2 1

d.  4 3 1 2

 

11. வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும். (2016 G4)

a.  சிங்கம்

b.  கடல்

c.  மாலை

d.  சந்தனம்

 

12. மடங்கல்- என்னும் சொல்லின் பொருள் (2016 G4)

a.  மடக்குதல்

b.  புலி

c.  மடங்குதல்

d.  சிங்கம்

 

13. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல் (2016 G4)

a.  பொன்மனம்

b.  ஆர்த்து

c.  உற்றார்

d.  சார்பு

 

14. அங்காப்பு என்பதன் பொருள் (2016 G4)

a.  சலிப்படைதல்

b.  வாயைத் திறத்தல்

c.  அலட்டிக் கொள்ளுதல்

d.  வளைகாப்பு

 

15. யாப்பு என்றால்---- என்பது பொருள் (2014 G4)

a.  அடித்தல்

b.  சிதைத்தல்

c.  கட்டுதல்

d.  துவைத்தல்

16. கண்ணகி- எனும் சொல்லின் பொருள் (2014 G4)

a.  கடும் சொற்களைப் பேசுபவள்

b.  கண் தானம் செய்தவள்

c.  கண்களால் நகுபவள்

d.  கண் தானம் பெற்றவள்

 

17. சதகம் என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் (2014 G4)

a.  ஐம்பது

b.  நூறு

c.  ஆயிரம்

d. பத்தாயிரம்

 

18. வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள் (2014 G4)

a.  நிலம்

b.  மலை

c.  காடு

d.  நாடு

 

19. முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை - இதில் மகடூஉ என்பது------- (2014 G4)

a.  மகள்

b.  மகன்

c.  பெண்

d.  ஆண்

 

20. பொருத்துக - சரியான விடையைத் தேர்ந்தெடு (2014 G4)

(a) விசும்பு 1. தந்தம்

(b) மருப்பு 2. வானம்

(c) கனல் 3.யானை

(d) களிறு 4. நெருப்பு

a.  2 1 4 3

b.  3 2 1 4

c.  1 3 4 2

d.  4 3 2 1

 

21. பொருள் தேர்க.

அங்காப்பு - என்பது (2014 G4)

a.  வாயைப் பிளத்தல்

b.  அங்கம் காப்பு

c.  அகம் காத்தல்

d.  வாயைத் திறத்தல்

 

22. பட்டியல் I ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க. (2013 G4)

(a) புள் 1.விரைவு

(b) குலவு 2.கலப்பை

(c) மேழி 3.அன்னம்

(d) ஒல்லை 4.விளங்கும்

a.  2 4 1 3

b.  4 1 2 3

c.  3 1 4 2

d.  3 4 2 1

 

23. சரியான பொருள் தருக (2013 G4)

இந்து

a.  நிலவு

b.  துன்பம்

c.  படகு

d.  தலைவன்

 

24. பொருத்துக : (2013 VAO)

சொல் -  பொருள்

(a) களபம் - 1. அம்பு

(b) புயம் - 2. பெயர்

(c) நாமம் -  3. சந்தனம்

(d) பகழி -  4. தோள்

(A) 1 2 3 4

(B) 2 3 4 1

(C) 3 4 2 1

(D) 4 2 1 3

 

25. ‘பாம்பு’ என்னும் பொருளைத் தராத சொல்லைத் தேர்வு செய்க. (2013 VAO)

(A) பாந்தள்

(B) முழை

(C) உரகம்

(D) பன்னகம்

 

26. பொருத்துக : (2013 VAO)

சொல் -  பொருள்

(a) கேசரி - 1. துன்பம்

(b) பூதரம்  - 2. குடை

(c) கவிகை -  3. மலை

(d) இடர் - 4. சிங்கம்

(A) 4 2 3 1

(B) 1 3 2 4

(C) 4 3 2 1

(D) 2 1 4 3

 

27. ‘சலவர்’ என்னும் சொல்லிற்கு உரிய பொருள் (2013 VAO)

(A) தூய்மையானவர்

(B) வஞ்சகர் ..

(C) மென்மையானவர்

(D) கடுமையானவர்

 

28. கடலைக் குறிக்காதச் சொல்லைக் கண்டறிக : (2013 VAO)

(A) பௌவம்

(B) புணை 

(C) புணரி

(D) பரவை

 

29. பொருந்தா இணையைக் கண்டறிக : (2013 VAO)

(A) நூல் - வரை

(B) தாள் - வணங்கு

(C) களை - பறி

(D) நார் - கிழி

 

30. சொல் - பொருள் (2014 VAO)

(a) கலாபம் - 1. கிளி

(b) விவேகன் - 2. பொய்கை

(c) வாவி - 3. ஞானி

(d) அஞ்சுகம் -  4. தோகை

(A) 4 3 2 1

(B) 4 2 3 1

(C) 4 2 1 3

(D) 3 4 2 1

 

 

31. சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக :(2014 VAO)

(a) அம்பி - 1. குஞ்சி

(b) அல்  - 2. பறை

(c) துடி - 3. இருள்

(d) தலைமூடி - 4. படகு

(A) 4 3 2 1

(B) 1 2 3 4

(C) 2 3 4 1

(D) 3 4 1 2

 

32. பொருந்தாததைச் சுட்டுக. (2014 VAO)

(A) வாதம்

(B) ஏமம் ..

(C) பித்தம்

(D) சீதம்

 

33. ‘பீலிபெய் சாகாடும்’ என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள் (2016 VAO)

(A) சுடுகாடு

(B) வண்டி

(C) மண்டி

(D) இடுகாடு

 

34. ‘நவ்வி’ எனும் சொல்லின் பொருள் (2016 VAO)

(A) மான் 

(B) நாய்

(C) நரி

(D) செந்நாய்

Answer Key =  https://www.minnalvegakanitham.in/2022/04/sol-porul-group-4.html


 tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot,  tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham