எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
8th Tamil Book
பாடம் 1.1 தமிழ்மொழி வாழ்த்து
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட
  வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர். ·        
  இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர் ·        
  கவிதைகள்மட்டுமின்றி சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும்,
  வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும்
  எழுதியவர். ·        
  சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம்
  பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.  | 
 
பாடம் 1.2 தமிழ்மொழி மரபு
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். ·        
  தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். ·        
  இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
  ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. ·        
  பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இஙகுத்
  தரப்பட்டுள்ளன.  | 
 
பாடம் 1.4 சொற்பூங்கா
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப்
  பணியாற்றியவர். ·        
  நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொப்பாசிரியர் எனப் பன்முகத் திறன்
  பெற்றவர். ·        
  இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை
  எழுதியுள்ளார். ·        
  தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார். ·        
  திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும்
  அமைத்துள்ளார். ·        
  இவரது தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து
  தரப்பட்டுள்ளன.  | 
 
பாடம் 2.1 ஓடை
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். ·        
  அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர். ·        
  இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார் ·        
  தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர் ·        
  கவிஞரேறு, பாவலர்மணி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றவர். ·        
  பிரெஞ்சு அரசு இவருக்கு செவாலியர் விருது வழங்கியுள்ளது. ·        
  தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன
  இவரது நூல்களில் சிலவாகும்.  | 
 
பாடம் 2.2 கோணக்காத்துப் பாட்டு
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில்
  வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாக பாடினர். ·        
  பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. ·        
  புலவர் செ.இராசு தொகுத்த பஞ்சக் கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள
  வெங்கபம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச்
  சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன  | 
 
பாடம் 2.6 திருக்குறள்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய சிறப்பு பெயர்களால் குறிக்கப்படும்
  திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். ·        
  திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ·        
  அறம், பொருள், இன்பம் என முப்பால் பகுப்பகள் கொண்டது ·        
  அறத்துபால் பாயிரவியல், இல்லறவியல் துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களை
  கொண்டது. ·        
  பொருட்பால் அரசியல், அமைச்சியல் ஒழிபியல் என மூன்று இயல்களை கொண்டது. ·        
  இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என இரு இயல்களை கொண்டது.  | 
 
பாடம் 3.1 நோயும் மருந்தும்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. ·        
  இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. ·        
  கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்துச் சருக்கங்களை கொண்டது. ·        
  சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. ·        
  நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரை சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத்
  தரப்பட்டுள்ளன.  | 
 
பாடம் 3.2 வருமுன் காப்போம்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  கவிமணி எனப் போற்றப்படும் தேசி விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர். ·        
  முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். ·        
  இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை
  நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார். ·        
  மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.  | 
 
பாடம் 3.4 தலைக்குள் ஓர் உலகம்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும். ·        
  இவர் சிறுகதைகள், புதினங்கள் நாடகங்கள், அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக்கதை
  வசனம் எனப் பல துறைகளில் பணியாற்றிவர். ·        
  மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார். ·        
  என் இனிய எந்திரா, மீண்டம் ஜீனோ, ஸ்ரீரங்ககத்துத் தேவைகள், தூண்டில் கதைகள்
  உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ·        
  இவரது தலைமைச்செயலகம் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்துக் தரப்பட்டுள்ளன.  | 
 
பாடம் 4.1 கல்வி அழகே அழகு
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ·        
  இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார். ·        
  கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,
  முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும். ·        
  மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி
  விளக்கம் எனப் பெயர் பெற்றது. ·        
  நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது. ·        
  இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்கு பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.  | 
 
பாடம் 4.2 புத்தியைத் தீட்டு
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர் ·        
  சிவகங்கை மாவட்டத்திலுள் ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர் ·        
  தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்  | 
 
பாடம் 4.3 பல்துறைக் கல்வி
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாண
  சுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு
  கொண்டவர். ·        
  சிறந்த மேடைபேச்சாளர் ·        
  தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர். ·        
  இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை
  வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ·        
  இவரது இளமை விருந்து என்னும் நூலிலிருந்து சில பகுதிகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.  | 
 
பாடம் 4.4 ஆன்ற குடிப்பிறத்தல்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர். ·        
  இவர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாறறி ஓய்வு பெற்றவர். ·        
  ஜெயகாந்தனாேடு நெருங்கிப் பழகி ஜெயகாந்தனாேடு  பல்லாண்டு என்னும் நூலை
  எழுதியுள்ளார். ·        
  இவர் எழுதிய ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலிலிருந்து
  ஒரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது.  | 
 
பாடம் 5.1 திருக்கேதாரம்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும்
  சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள்
  ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல்
  நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுரணாத்தை படைத்தளித்தார். ·        
  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய பாடிய பாடல்களின் தொகுப்பே
  தேவாரம் ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இந்நூலில் சுந்தரர்
  பாடியுள்ள கேதாப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது. ·        
  தே + ஆரம் – இறைவனுக்குச் சூடப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை
  பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். பதிகம் என்பது பத்துப் பாடல்களை
  கொண்டது.  | 
 
பாடம் 5.2 பாடறிந்து ஒழுகுதல்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. ·        
  இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல். ·        
  குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து
  பிரிவுகளை உடையது. ·        
  கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். ·        
  நெய்தற்கலிப் பாடல்கள் இயற்றியவரும் இவரே.  | 
 
பாடம் 6.1 வளம் பெருகுக
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை. ·        
  தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது. ·        
  இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. ·        
  தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது.  | 
 
பாடம் 6.2 மழைச்சோறு
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்கு நாட்டு மழைச்சோற்று
  வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. ·        
  இந்நூலின் பதிப்பாசிரியர் அ.கெளரன்  | 
 
பாடம் 7.1 படை வேழம்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர். ·        
  முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராக திகழந்தவர். ·        
  பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாத புலவர் புகழ்ந்துள்ளார். ·        
  96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சாரந்த நூல் ·        
  இதுவே தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல் ·        
  இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான்
  ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியை பேசுகிறது. ·        
  இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். ·        
  கலித்தாழிசையால் பாடப் பெற்றது. ·        
  599 தாழிசைகள் கொண்டது ·        
  போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழந்து பாடும்
  இலக்கியம் பரணி ஆகும்.  | 
 
பாடம் 7.2 விடுதலைத் திருநாள்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  மீ.இராேசேந்திரன் என்னும் இயற்பெயர் மீரா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார் ·        
  அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர். ·        
  ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும் இவரது
  படைபுகளாகும் ·        
  இவர் எழுதிய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத்
  தரப்பட்டுள்ளது.  | 
 
பாடம் 8.1 ஒன்றே குலம்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில்
  ஒருவராகவும் கருதப்படுபவர். ·        
  இவர் இயற்றிய திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. ·        
  இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.  | 
 
பாடம் 8.4 மனித யந்திரம்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைபித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாச்சலம். ·        
  சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள்
  போற்றுகின்றனர். ·        
  நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார், ·        
  சில திரைப்படங்களுக்கு கதை, உரையாடலும் எழுதியுள்ளார். ·        
  கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒரு நாள் கழித்து
  போன்றவை இவரது சிறுகதைகளுள் புகழ் பெற்றவை. ·        
  மணிக்கொடி இதழில் வெளியான புதுமைபித்தனின் சிறகதை ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.  | 
 
பாடம் 9.1 உயிர்க்குணங்கள்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  இறையரசனின் இயற்பெயர் சேசுராசா என்பதாகும். ·        
  கல்லூரி ஒன்றில் தமிழப்பேராசிரியராகப் பணிபுரிந்தார் ·        
  ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.  | 
 
பாடம் 9.2 இளைய தோழனுக்கு
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா. ·        
  கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ·        
  புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர் ·        
  கண்ணீர்ப் பூக்கள், சோழ நிலா, மகுட நிலா உள்ளிட்ட பல நூல்களையும், திரையிசைப்
  பாடல்களையும் எழுதியுள்ளார். ·        
  இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய
  அகாதெமி விருது வழங்கப்பட்டது. ·        
  மு.மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.  | 
 
பாடம் 9.4 பால் மனம்
| 
   நூல் வெளி  | 
 
| 
   ·        
  கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி; ·        
  சிறுகதைகள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை
  எழுதியுள்ளார். ·        
  இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது. ·        
  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார். ·        
  உயிர் அழுதாய், நிலாக்கால நட்சித்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை
  எழுதியுள்ளார். ·        
  பால் மனம் எனும் இக்கதை அ.வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும்
  நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.  | 
 

Thanks sir useful ungalpani thodarattum
பதிலளிநீக்குminnal vega kanitham