Type Here to Get Search Results !

50 Days Study Plan 7th தமிழ் (இயல் 4,5,6) முக்கிய குறிப்பு + 100 வினா விடை

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

7th Std Tamil Term 2

UNIT 1: அறிவியல் ஆக்கம்

(தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்)

♦ கலங்கரை விளக்கம் (பெரும்பாணாற்றும்படை)

கவின்மிகு கப்பல்

தமிழரின் கப்பற்கலை

♦ ஆழ்கடலின் அடியில்

♦ இலக்கியவகைச் சொற்கள் (இலக்கணம்)

 

UNIT 2: ஓதுவது ஒழியேல்

♦ இன்பத்தமிழ்க் கல்வி (பாரதிதாசன்)

♦ அழியாச் செல்வம் (நாலடியார்)

♦ வாழ்விக்கும் கல்வி (திருக்குறளார் வீ.முனிசாமி)

♦ பள்ளி மறுதிறப்பு

♦ ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் (இலக்கணம்)

 

UNIT 3: கலை வண்ணம்

♦ ஒரு வேண்டுகோள் (தேனரசன்)

♦ கீரைப்பாத்தியும் குதிரையும் (காளமேகப்புலவர்)

♦ பேசும் ஓவியங்கள் (ஓவியம்)

♦ தமிழ் ஒளிர் இடங்கள்

♦ தொழிற்பெயர் (இலக்கணம்)

திருக்குறள்


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

Modal Questions

1. கடற்பயணம் சென்று கரைத் திரும்ப தமிழர் கண்ட தொழில்நுட்பம் எது?

A. கலங்கரை விளக்கம்

B. கப்பல்

C. நாவாய்

D. கடல்


2. "வானம் ஊன்றிய மதலைப் போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

A. திருவள்ளுவர்

B. கடியலூர் உருத்திரங்கண்ணனார்

C. பெருவாயின் முள்ளியார்

D. நக்கீரர்


3. தூண் என்னும் பொருள் தரும் சொல்?

A. ஞெகிழி

B. சென்னி

C.ஏணி

D. மதலை


4. அகநானூறு --------- நூல்களுள் ஒன்று?

A. பத்துப்பாட்டு

B. எட்டுத்தொகை

C. அறநூல்கள்

D. ஏதுமில்லை


5. மக்கள் -------- ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்?

A. கடலில்

B. காற்றில்

C. கழனியில்

D. வங்கத்தில்


6. பொருத்துக :

1. வங்கம் --- பகல்

2. நீகான் --- கப்பல்

3. எல் --- கலங்கரை விளக்கம்

4. மாட ஒள்ளெரி --- நாவாய் ஓட்டுபவன்

A. 1 2 3 4

B. 2 4 1 3

C. 2 3 4 1

D. 4 3 2 1


7. கடற்பயணத்தை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிடும் நூல் எது?

A. திருக்குறள்

B. புறநானூறு

C. மலைபடுகடாம்

D. தொல்காப்பியம்


8. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது?

A. காற்று

B. நாவாய்

C. கடல்

D. மணல்


9. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் கருவி?

A. சுக்கான்

B. நங்கூரம்

C. கண்ணடை

D. சமுக்கு


10. சரியானதைத் தேர்ந்தெடு?

கூற்று 1: அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்

கூற்று 2: இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்

கூற்று 3: எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களை படைத்துள்ளார்

A. அனைத்தும் சரி

B. கூற்று 1 மட்டும் சரி

C. கூற்று 2 மட்டும் சரி

D. அனைத்தும் தவறு


11. பொருத்துக:

1. பெயர் இயற்சொல் --- மண்

2. வினை இயற்சொல் --- நடந்தான்

3. இடை இயற்சொல் --- அவனால்

4. உரி இயற்சொல் --- மாநகர்

A. 1 2 3 4

B. 2 3 4 1

C. 3 4 1 2

D. 4 3 2 1


12. எல்லாருக்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்?

A. இயற்சொல்

B. திரிசொல்

C. திசைச்சொல்

D. வடசொல்


13. காலத்தின் அருமை கூறும் திருக்குறள் அதிகாரம்?

A. கல்வி

B. காலமறிதல்

C. வினை அறிதல்

D. மடியின்மை


14. பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது?

A. மயில்

B. குயில்

C. கிளி

D. அன்னம்


15. நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்?

A. புறநானூறு

B. அகநானூறு

C. குறுந்தொகை

D. பரிபாடல்


16. "ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்" என்று பாடியவர்?

A. பாரதிதாசன்

B. பாரதியார்

C. கவிமணி

D. அறிவுமதி


17. பெயர்ப் பகுபதம் ---------- வகைப்படும்?

A. ஏழு

B. எட்டு

C. ஒன்பது

D. ஆறு


18. நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை?

A. 40

B. 42

C. 44

D. 46


19. காளமேகப் புலவரின் இயற்பெயர்?

A. வரதன்

B. பாரதிதாசன்

C. வாணிதாசன்

D. மாணிக்கம்


20. "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" என்று புனையா ஓவியம் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியம் எது?

A. மணிமேகலை

B. நெடுநல்வாடை

C. சிலப்பதிகாரம்

D. வளையாபதி


21. பொருத்துக:

1. ஓவியம் --- சித்திரக் கூடம்

2. ஓவியம் வரைபவர் --- வட்டிகைச் செய்தி

3. ஓவியக்கூடம் --- கண்ணுள் வினைஞர்

A. 1 2 3

B. 2 1 3

C. 2 3 1

D.3 2 1


22. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?

A. எழுது

B. பாடு

C. படித்தல்

D. நடி


23. பொருத்துக:

1. சிற்பம் --- Inscriptions

2. கல்வெட்டு --- Sculpture

3. கையெழுத்துப்படி --- Aesthetics

4. அழகியல் --- Manuscripts

A. 1 2 3 4

B. 2 1 4 3

C. 3 1 2 4

D. 4 3 2 1


24. பொருந்தாத ஓசை உடைய சொல்?

A. பாய்கையால்

B. மேன்மையால்

C. திரும்புகையில்

D. அடிக்கையால்


25. ' வனப்பில்லை' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

A. வனம் + இல்லை

B. வனப்பு + இல்லை

C. வனப்பு + யில்லை

D. வனப் + பில்லை


26. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க?

கூற்று 1: துணி ஓவியங்கள் தற்போது கலம்காரி ஓவியம் என அழைக்கப்படுகிறது

கூற்று 2: கலம்காரி ஓவியங்கள் தற்போது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் வரையப்படுகிறது

A. அனைத்தும் சரி

B. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D. அனைத்தும் தவறு


27. கன்னிமாரா நூலகத்தில் எந்த தளத்தில் மறைமலையடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது?

A. 1

B. 2

C. 3

D. 4


28. கன்னிமாரா நூலகம் சென்னையில் தொடங்கப்பட்ட ஆண்டு?

A. 1890

B. 1896

C. 1990

D. 1893


29. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்?

A. குகை ஓவியம்

B. சுவர் ஓவியம்

C. கண்ணாடி ஓவியம்

D. கேலிச்சித்திரம்


30. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?

A. ஊறு

B. நடு

C. விழு

D. எழுதல்


31. பொருத்துக:

1. தமிழ் பல்கலைக்கழகம் ---தஞ்சாவூர்

2. உ.வே.சா நூலகம் ---பூம்புகார்

3. உலகத் தமிழ்ச் சங்கம் --- சென்னை

4. சிற்பக் கலைக்கூடம் --- மதுரை

A. 1 2 3 4

B. 1 3 4 2

C. 2 3 4 1

D. 4 3 2 1


32. காளமேகப் புலவர் எழுதிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

A. சரஸ்வதி மாலை

B. சித்திர மடல்

C. பரபிரம்ம விளக்கம்

D. புதியதொரு விதி செய்வோம்


33. புனையா ஓவியம் புறம் போந்தன்ன என்று குறிப்பிடும் நூல்?

A. நெடுநல்வாடை

B. மணிமேகலை

C. சிலப்பதிகாரம்

D. வளையாபதி


34. தவறானதைத் தேர்ந்தெடு?

A. ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி, திரைச்சீலை, கிழி, படாம் என பல பெயர்களில் அழைப்பர்

B. சிலப்பதிகார காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது

C. ஓலைச்சுவடி ஓவியம் பெரும்பாலும் இதிகாசம், புராண காட்சிகளாகவே இருக்கிறது

D. ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் இராஜா இரவிவர்மா


35. மயிலும் மானும் வனத்திற்கு ---------- தருகின்றன?

A . களைப்பு

B. வனப்பு

C. மலைப்பு

D. உழைப்பு


36. "தமிழ் நாட்டின் மைய நூலகம்" என அழைக்கப்படுவது?

A. அண்ணா நூற்றாண்டு நூலகம்

B. கன்னிமாரா நூலகம்

C. உ.வே.சா நூலகம்

D. கீழ்த்திசை நூலகம்


37. திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட ஆண்டு?

A. 1990

B. 1994

C. 1996

D. 2000


38. பொருத்துக:

1. ஒட்டம் --- முதனிலைத் தொழிற்பெயர்

2. பிடி --- முதனிலை திரிந்த தொழிற்பெயர்

3. சூடு --- விகுதி பெற்ற தொழிற்பெயர்

A. 1 2 3

B. 3 1 2

C. 1 3 2

D. 3 2 1


39. கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர்?

A. பாரதியார்

B.பாரதிதாசன்

C.கவிமணி

D. தாராபாரதி


40. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு?

A. பகுதி

B. விகுதி

C. இடைநிலை

D. சந்தி


41. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி?

A. மலையாளம்

B. கன்னடம்

C. சமஸ்கிருதம்

D. தெலுங்கு


42. கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் --------- என அழைக்கப்படும்?

A. தொகுதி

B. நங்கூரம்

C. சுக்கான்

D. கண்ணடை


43. தமிழர்கள் சிறிய நீர் நிலைகளை கடக்க பயன்படுத்தியது?

A. கலம்

B. வங்கம்

C. நாவாய்

D. ஓடம்


44. எதுகை இடம்பெறாத இணை?

A. இரவு - இயற்கை

B. வங்கம் - சங்கம்

C. உலகு - புலவு

D. அசைவு - இசைவு


45. பொருத்துக:

1. எரா--- திசைகாட்டும் கருவி

2. பருமல் --- அடிமரம்

3. மீகாமன் --- குறுக்கு மரம்

4. காந்த ஊசி --- கப்பலைச் செலுத்துபவர்

A. 1 2 3 4

B. 2 3 4 1

C. 4 2 1 3

D. 4 3 2 1


46. திருவள்ளுவர் சிலையின் மொத்த எடை?

A. 1000 டன்

B. 2000 டன்

C. 5000 டன்

D. 7000 டன்


47. முதனிலை திரிந்த தொழிற்பெயருக்கு எ.கா ?

A. பேறு

B. சூடு

C. வீடு

D. அனைத்தும் சரி


48. வேயாமாடம் எனப்படுவது?

A. வைக்கோலால் வேயப்படுவது

B. சாந்தினால் பூசப்படுவது

C. ஓலையால் வேயப்படுவது

D. துணியால் மூடப்படுவது


49. சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும் வகை?

A. துணி ஓவியம்

B. சுவரோவியம்

C. குகை ஓவியம்

D. ஓலைச்சுவடி ஓவியம்


50. கண்ணாடி ஓவியத்தை உருவாக்கும் ஓவியர்கள் மிகுதியாக உள்ள ஊர் எது?

A. மதுரை

B. சென்னை

C. தஞ்சாவூர்

D. திருச்சி


51. பொருத்துக:

1. சென்னி --- உச்சி

2. கரையும் --- அழைக்கும்

3. மதலை --- தூண்

4. அழுவம் --- கடல்

5. உரவு நீர் --- பெருநீர்ப் பரப்பு

A. 1 2 3 4 5

B. 5 4 1 2 4

C. 1 3 4 2 5

D. 5 4 3 2 1


52. பட்டினப்பாலை என்னும் நூலை இயற்றியவர்?

A. கடியலூர் உருத்திரங்கண்ணனார்

B. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

C. பெருவாயின் முள்ளியார்

D. வாணிதாசன்


53. மக்கள் --------- ஏறி வெளிநாடுகளுக்கு சென்றனர்?

A. கடலில்

B. காற்றில்

C. கழனியில்

D. வங்கத்தில்


54. பல்பொருள் தரும் ஒருசொல் என்பது?

A. இயற்சொல்

B. திரிசொல்

C. திசைச்சொல்

D. வடசொல்


55. சரியானதைத் தேர்ந்தெடு?

கூற்று 1 : பாரதிதாசன் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்

கூற்று 2: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்

கூற்று 3: பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது

A. அனைத்தும் சரி

B. கூற்று 2 மட்டும் சரி

C. கூற்று 1 மட்டும் சரி

D. அனைத்தும் தவறு


56. பின்வருவனவற்றுள் ' மலை ' யைக் குறிக்கும் சொல்?

A. வெற்பு

B. காடு

C. கழனி

D புவி


57. ஒருவர் தம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்?

A. வீடு

B. கல்வி

C. பொருள்

D. அணிகலன்


58. ' பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர்?

A. திருக்குறளார்

B. திருவள்ளுவர்

C. பாரதியார்

D. பாரதிதாசன்


59. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர்?

A. சுரதா

B. சுப்ரபாரதிமணியன்

C. புதுமைப்பித்தன்

D. இராஜமாணிக்கம்


60. 'எழுதினான்' என்பது ?

A. பெயர்ப் பகுபதம்

B. வினைப் பகுபதம்

C. பெயர்ப் பகாப்பதம்

D. வினைப் பகாப்பதம்


61. மண் வாசல் என்னும் கவிதை நூலை எழுதியவர் யார்?

A. சுரதா

B. தேனரசன்

C. அப்துல் ரகுமான்

D. அறிவுமதி


62. 'ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள்?

A. யானை

B. குதிரை

C. மான்

D. மாடு


63. 'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

A. கோடு + ஓவியம்

B. கோட்டு + ஓவியம்

C. கோட் + டோவியம்

D. கோடி + ஓவியம்


64. மிளகாய் வற்றலின் ------------- தும்மலை வரவழைக்கும்?

A. நெடி

B. காட்சி

C. மணம்

D. ஓசை


65. தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ----------- இருக்கக் கூடாது?

A. சோம்பல்

B. சுறுசுறுப்பு

C. ஏழ்மை

D. செல்வம்


66. 'செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

A. செப்பு + ஈடு

B. செப்பு + ஓடு

C. செப்பு + ஏடு

D. செப்பு + யேடு


67. 'வண்கீரை' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

A. வண் +கீரை

B. வண்ணம் + கீரை

C. வளம் + கீரை

D. வண்மை + கீரை


68. கப்பல் ஓரிடத்தில் நிலையாக இருக்க உதவுவது?

A. நங்கூரம்

B. சுக்கான்

C. சமுக்கு

D.அடிமரம்


69. அன்னை தான் பெற்ற ----------- சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்?

A. தங்கையின்

B. தம்பியின்

C. மழலையின்

D. கணவனின்


70. தொல்காப்பியம் கடற்பயணத்தை ----------- வழக்கம் என்று கூறுகிறது?

A. நன்னீர்

B. தண்ணீர்

C. முந்நீர்

D. கண்ணீர்


71. "கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான் மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

A. நக்கீரன்

B. கடியலூர் உருத்திரங்கண்ணனார்

C. மருதன் இளநாகனார்

D. சுரதா


72. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

கூற்று : மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்

காரணம் : குறிஞ்சித்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்

A. கூற்று சரி, காரணம் சரி

B. கூற்று சரி, காரணம் தவறு

C. கூற்று தவறு, காரணம் சரி

D. கூற்று தவறு, காரணம் தவறு


73. "ஆழ்கடலின் அடியில்" என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

A. ஜூல்ஸ் வெர்ன்

B. கலிலியோ

C. சார்லஸ் டார்வின்

D. வெஸ்டர்ன்


74. செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?

A. மதுரை பல்கலைக்கழகம்

B. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்

C. கன்னியாகுமரி பல்கலைகழகம்

D. சென்னை பல்கலைக்கழகம்


75. திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

A. திருச்சி

B. கன்னியாகுமரி

C. திருநெல்வேலி

D. சென்னை


76. மூன்றாம் தமிழ்சங்கம் எங்கு நடைபெற்றது?

A. கன்னியாகுமரி

B. மதுரை

C. சென்னை

D. தஞ்சாவூர்


77. வெள்ளை ரோஜா என்ற நூலை எழுதியவர் யார்?

A. தேனரசன்

B. அறிவுமதி

C. பசுவய்யா

D. கலாப்ரியா


78. தவறானதைத் தேர்ந்தெடு?

A. கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்

B. இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்

C. இவர் எட்டுத்தொகையில் உள்ள பெரும்பாணாற்றுப் படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்

D. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்


79. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழி களின் எண்ணிக்கை 42 எனக் கூறும் நூல் எது?

A. தொல்காப்பியம்

B. நன்னூல்

C. திருக்குறள்

D. வளையாபதி


80. பொருத்துக:

1. கதைப்பாடல் --- Courage

2. பேச்சாற்றல் --- Elocution

3. துணிவு --- Ballad

A. 1 2 3

B. 2 3 1

C. 3 1 2

D. 3 2 1


81. பாரதிதாசன் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

A. பாண்டியன் பரிசு

B. அழகின் சிரிப்பு

C. இருண்ட வீடு

D. கண்ணன் பாட்டு


82. சரியானதைத் தேர்ந்தெடு?

கூற்று 1: சுப்ரபாரதிமணியன் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்

கூற்று 2: கதை சொல்லும் கலை என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்

A. கூற்று 1 மற்றும்,கூற்று 2 சரி

B. கூற்று 1 மட்டும் சரி

C. கூற்று 2 மட்டும் சரி

D. கூற்று 1 மற்றும் கூற்று 2 தவறு


83. கடலில் துறை அறியாமல் கலங்குவன?

A. மீன்கள்

B. மரக்கலங்கள்

C. தூண்கள்

D. மாடங்கள்


84. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ----------- எனக் குறிப்பிடப்படும்?

A. சுக்கான்

B. நங்கூரம்

C. கண்ணடை

D. சமுக்கு


85. என்று + உரைக்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A. என்றுஉரைக்கும்

B. என்றிரைக்கும்

C. என்றரைக்கும்

D. என்றுரைக்கும்


86. பொருத்துக:

1. கழனி --- கதிரவன்

2. நிகர் --- மேகம்

3. பரிதி --- சமம்

4. முகில் --- வயல்

A. 1 2 3 4

B. 3 2 1 4

C. 4 3 1 2

D. 4 3 2 1


87. திருக்குறளில் நகைச்சுவை என்ற நூலை எழுதியவர்?

A. முனிசாமி

B. அறிவுமதி

C. சுரதா

D. தேவநேயப் பாவாணர்


88. கல்வியில்லாத நாடு ---------- வீடு?

A. விளக்கில்லாத

B. பொருளில்லாத

C. கதவில்லாத

D. வாசல் இல்லாத


89. சுப்ரபாரதிமணியன் எழுதிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

A. பின்னல்

B. வேட்டை

C. புத்தகம்

D. தண்ணீர் யுத்தம்


90. ஓரெழுத்து ஒருமொழிகளுள் தவறானதைத் தேர்ந்தெடு?

A. ஆ --- பசு

B. பே --- அன்பு

C. ஏ --- அம்பு

D. ஓ --- மதகு நீர் தாங்கும் பலகை


91. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது?

A. துணி ஓவியம்

B. நாட்காட்டி ஓவியம்

C. கேலி பெயிண்டிங்

D. ஏதுமில்லை


92. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ---------- மீது பொறித்துப் பாதுகாத்தனர்?

A. செப்பேடுகளில்

B. கரும்பலகைகளில்

C. கல்வெட்டுகளில்

D ஏதுமில்லை


93. --------- தீமை உண்டாகும்?

A. செய்யத் தகுந்த செயல்களை செய்வதால்

B. செய்யத் தகாத செயலை செய்யாமல் இருப்பதால்

C. செய்யத் தகுந்த செயல்களை செய்யாமல் இருப்பதால்

D. எதுவும் செய்யாமல் இருப்பதால்


94. சரியானதைத் தேர்ந்தெடு?

கூற்று 1: இலக்கிய வகையில் சொற்கள் நான்கு வகைப்படும்

கூற்று 2: இயற்சொல் பெயர்,வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்

A. கூற்று 1 மற்றும் 2 சரி

B. கூற்று 1 மட்டும் சரி

C. கூற்று 2 மட்டும் சரி

D. அனைத்தும் தவறு


95. பொருத்துக:

1. இயற்சொல் --- பெற்றம்

2. திரிசொல் --- இரக்கம்

3. திசைச்சொல் --- அழுவம்

4. வடசொல் --- சோறு

A. 1 2 3 4

B. 3 4 2 1

C. 3 2 4 1

D. 4 3 2 1


96. கற்றனைத்து + ஊறும் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

A. கற்றனைத்தூறும்

B. கற்றனைதூறும்

C. கற்றனைத்தீறும்

D. கற்றனைத்தோறும்


97. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராக கருதப்படுபவர் ?

A. கொண்டையராஜு

B. பாரதியார்

C. இராஜாஇரவிவர்மா

D. அறிவுமதி


98. ஆயக்கலைகள் எத்தனை வகைப்படும்?

A. 63

B. 64

C. 65

D. 66


99. நாட்காட்டி ஓவியங்களை ---------- என்றும் அழைப்பர்?

A. கேலி பெயிண்டிங்

B. டிராம் பெயிண்டிங்

C. பசார் பெயிண்டிங்

D. ஏதுமில்லை


100. பொருத்துக:

1. கற்கும் முறை --- செயல்

2. உயிருக்கு கண்கள் --- காகம்

3. விழுச்செல்வம் --- பிழையில்லாமல் கற்றல்

4. எண்ணித் துணிக --- எண்ணும் எழுத்தும்

5. கரவா கரைந்துண்ணும் --- கல்வி

A. 1 2 3 4 5

B. 3 4 5 1 2

C. 4 5 1 2 3

D. 5 4 3 2 1

Answer Key = 

https://www.minnalvegakanitham.in/p/60-days-study-plan-group-2.html



tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்