எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
குரூப் 2 & 4க்கு பொதுத்தமிழ் [இலக்கணம்]
ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து
|
7th
New Book ஓரெழுத்து ஒரு மொழிகளும்
அவற்றின் பொருளும் 1.ஆ- பசு 2.ஈ- கொடு 3. ஊ- இறைச்சி 4. ஏ- அம்பு 5. ஐ- தலைவன் 6. ஓ- மதகுநீர் தாங்கும் பலகை 7. கா- சோலை 8. கூ- பூமி 9. கை- ஒழுக்கம் 10.கோ-அரசன் 11. சா- இறந்துபோ 12. சீ- அடக்கம் 13. சே- உயர்வு 14. சோ- அரண் 15. தா- அழிவு, கொடு 16. தீ- தீமை, நெருப்பு 17. தூ- தூய்மை, சுத்தம் 18. தே- கடவுள் 19. தை- தைத்தல் 20. நா- நாவு 21. நீ- முன்னிலை ஒருமை 22. நே- அன்பு 23. நை- இழிவு 24. நோ- வறுமை 25. பா- அழகு, பாடல் 26. பூ- பூமி 27. பே – மேகம் 28. பை- அழகு, இளமை 29. போ- செல் 30. மா- மாமரம் 31. மீ- வான் 32. மூ-மூப்பு 33. மே- அன்பு 34. மை- அஞ்சனம் 35. மோ- முகத்தல் 36. யா- ஐயம் 37. வா- அழைத்தல் 38. வீ- சாவு 39. வை- புல் 40. வெள- கவர் 41. நொ- நோய் 42. து- உண் |
ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள்.
இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும்
வகையில் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் 42 ஓரெழுத்து
ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார். இந்த 42 ஓரெழுத்து ஒருமொழிகளுள்
நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய 40 சொற்களும் நெடில்
எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.

Sir download pannitom answer eppadi edukurathu sir
பதிலளிநீக்குminnal vega kanitham