Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC Percentage விழுக்காடு (25 Questions) Blueprint

விழுக்காடு (25 Questions) Blueprint 
 TNPSC Last 10 Questions Blueprint
Minnal Vega Kanitham 1. ஒரு தேர்வில் 35 சதவீதம் மாணவர்கள் தேறியுள்ளனர். 455 பேர் தோல்வி அடைந்தனர் எனில், தேர்வில் கலந்து கொண்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையானது

700

2. 20 பொருட்களின் வாங்கிய விலையும், x பொருட்கள் விற்ற விலையும் சமம். இதில் லாப சதவீதம் 25% எனில் விற்ற பொருட்களின் எண்ணிக்கையானது

16

3. 28% இல் 450 + 45% இல் 280-ன் மதிப்பு

252

4. 1/35 ஆனது 2/7 ல் எத்தனை சதவீதம்?

10%

5. ஓர் எண்ணின் (3/5) மடங்கின் 60% -ன் மதிப்பு 36 எனில் அந்த எண்ணைக் காண்.

100

6. ஒரு பழ வியாபாரி 12 பெட்டி திராட்சைகளை ஒரு பெட்டி ரூ. 160 என்ற வீதம் வாங்கினார். அதில் இரண்டு பெட்டிகள் அழுகிவிடுகிறது. மீதமுள்ள பெட்டிகளை ஒரு பெட்டிக்கு ரூ. 200 வீதம் விலைக்கு விற்கிறார் எனில் இலாப சதவீதம்

4.167

7. ஒரு மொத்த வியாபாரி ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை ரூ. 10,000க்கு வாங்கி ரூ. 12,000க்கு விற்கிறார். ஒரு பெட்டியின் இலாபம் / நட்டத்தைக் காண்க

ரூ.2,000 இலாபம்

8. ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூ. 1,200க்கு வாங்கினார். பின்பு அதன் அடக்கவிலைக்கு மேல் 30% உயர்த்தி, குறித்த விலை ஆக்கினார். இதற்கு 20% தள்ளுபடி கொடுத்து விற்றார் எனில், விற்பனை விலை மற்றும் இலாப சதவீதம் காண்க.

Rs. 1,248, 4%

9. ஒரு கடைக்காரர் தன் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி தந்தும் 20% இலாபம் அடைகின்றார். ஒரு பொருளின் உண்மை விலை ரூ. 450 எனில், அப்பொருளின் குறித்த விலையைக் காண்க.

ரூ.600

10. தொடர் தள்ளுபடிகள் முறையே 15% மற்றும் 25% என்றவாறு தரப்பட்டு ஒரு சலவை இயந்திரம் ரூ.15,000க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?

ரூ. 25,000

10. ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம் ?

41.67%

11. பிருந்தா என்பவர் 100, 150 மற்றும் 200-ஐ அதிகபட்ச மதிப்பெண்களாகக் கொண்ட தேர்வில் முறையே 85%, 86% மற்றும் 84% பெற்றார் எனில் அவரின் மொத்த தேர்ச்சி சதவீதம் என்ன?

84.88%

12. 5 பொருட்களை விற்பதால், ஒரு நபருக்கு ஒரு பொருளின் அடக்க விலையானது இலாபமாகக் கிடைக்கிறது எனில் இலாப சதவீதம்

20%

13. 8(1/2) மீட்டர் என்பது 11(1/3) மீட்டரில் எத்தனை சதவீதம்?

75%

14. 25 கைக்கடிகாரத்தின் அடக்க விலை 20 கைக்கடிகாரங்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.

இலாபம் 25%

15. ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு RS 30,000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் மதிப்பு என்ன?

21,870

16. 40kgs ன் 0.75% மதிப்பு காண்க.

0.3 கிலோ

17. அருண் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RS .15,000 க்கு வாங்கி அதனை 15% நட்டத்திற்கு விற்றார் எனில் அத்தொலைக்காட்சி பெட்டியின் விற்பனை விலை யாது?

RS.12,750

18. x மதிப்பின் 20% ஆனது 50 எனில், x -ன் மதிப்பு

250

19.ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஒரே சீராக ஒவ்வொரு ஆண்டும் 4 % கூடிக் கொண்டே செல்கிறது. இப்பொழுது அதன் மக்கள் தொகை 32,448 எனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை என்னவாக இருந்திருக்கும் ?

30000

20. ஒரு உடையின் பட்டியல் விலை 220 ரூபாய். அதன் விற்பனையில் 20% தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடையின் மேல் தள்ளுபடி எவ்வளவு? அதன் விற்பனை விலை என்ன?

44, 176

21. பூமியின், 2250 பாகத்தில் 5 பாகம் சல்பர் உள்ளது. எனில் பூமியில் எத்தனை சதவீதம் சல்பர் உள்ளது?

2/9

22. x ன் y சதவீதம் 50 எனவும் y ன் z சதவீதம் 25 எனில் x க்கும் z க்கும் உள்ள தொடர்பு

x = 2z

23. 21 பேனாக்களின் அடக்கவிலை 20 பேனாக்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதம் ஆனது

5%

24. ஒரு உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி உள்ள இந்த உலோக கலவையில் நிக்கலின் எடை யாது?

6 கி.கி

25. தொடர் தள்ளுபடிகள் முறையே 10%, 20% என்றவாறு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 14,400க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?

ரூ. 20,000


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham