Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Time and Work காலம் மற்றும் வேலை (15 Questions) Blueprint

Time and Work
காலம் மற்றும் வேலை (15 Questions)
TNPSC Last 10 Questions Blueprint
Minnal Vega Kanitham 1.A, B, C என்ற மூவர் ஒரு வேலையை முறையே 8, 12, 16 நாட்களில் முடிப்பார்கள். A, C இருவரும் சேர்ந்து அவ்வேலையை 2 நாட்களுக்கு செய்தனர். பின்னர் C விலகுகிறார். B சேருகின்றார் எனில் A, B ஆகிய இருவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
3

2. ஓர் வேலையின் ஒரு பகுதியை A என்பவர் 10 நாட்களிலும் B என்பவர் 15 நாட்களிலும் செய்வர். இருவரும் 5 நாட்கள் வேலை செய்தனர். மீதி வேலையை C என்பவர் 2 நாட்களில் செய்து முடித்தார். மொத்த வேலைக்குரிய கூலி ரூ. 5,000 எனில் B மற்றும் C-யின் தினக்கூலி

ரூ. 225.

3. A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள்.

10 நாட்கள்

4. A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B, 20 நாட்களில் முடிப்பார். A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A சென்று விட்டார். மீதி வேலையை B முடிக்க தேவைப்படும் நாட்கள்

12 நாட்கள்

5. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்

60 நிமிடங்கள்

6. A, B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B, C அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C, A அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். மூவரும் சேர்ந்து மற்றும் தனித்தனியாகவும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

சேர்ந்து = 10 நாட்கள் தனித்தனியாக A = 30, B = 20, C = 60

1. ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் எத்தனையாக இருக்கும் ?

175 பக்கங்கள்

2. 12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் ?

24

3. 100 மீ நீளமுள்ள ஒரு ரயிலானது மணிக்கு 30 கி.மீ/மணி வேகத்தில் செல்கிறது எனில் அந்த ரயிலானது ஒரு மின் கம்பத்தை கடக்கும் நேரம் என்ன?

12 நொடி

4. 12 மனிதர்களும் 16 மாணவர்களும் சேர்ந்து ஒரு வேலையை 5 நாட்களில் முடிக்கின்றனர். 13 மனிதர்களும், 24 மாணவர்களும் சேர்ந்து அவ்வேலையை 4 நாட்களில் முடித்தால், தினமும் மனிதனும் மாணவரும் செய்யும் வேலையின் விகிதத்தை கூறு.

2:1

5. 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

28 நாட்கள்

6. 9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும்?

9 நாட்கள்

7. 8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் சேர்ந்து 14 நாட்களில் செய்து முடிப்பர். ஒரு ஆண் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? ஒரு சிறுவன் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பான்?

ஆண் 140 நாட்கள், சிறுவன் 280 நாட்கள்

8. ஒரு இராணுவ முகாமில் 1000 வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 70 நாட்களுக்கு போதுமான மளிகைப் பொருட்கள் உள்ளன? அந்த முகாமிற்கு மேலும் 400 வீரர்கள் வந்து சேர்ந்தார்கள் எனில் எத்தனை நாட்களுக்கு அந்த மளிகைப் பொருட்கள் போதுமானதாக இருக்கும்.

50 நாட்கள்

9. ஒரு குறிப்பிட்ட வேலையை 3 ஆண்கள், 4 பெண்கள், 6 சிறுவர்கள் சேர்ந்து 7 நாட்களில் முடிப்பர். ஒரு பெண், ஆண் செய்யும் வேலைப் போல் இரு மடங்கு வேலை செய்வார். ஒரு சிறுவன் ஆண் செய்யும் வேலையில் பாதி வேலை செய்வார் எனில், அதே வேலையை 7 நாட்களில் முடிக்க எத்தனை பெண்கள் தேவைப்படுவர்?

7

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham