Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test ஜூன் 29 – ஜூலை – 05 நடப்பு நிகழ்வுகள்

Minnal Vega Kanitham ஜூன் – 29

•தேசிய புள்ளியியல் நாள் (PC மகாலநோபிஸ் பிறந்த நாள்)
•உலக வெப்ப மண்டல நாள்

1.அயர்லாந்தின் துணைப் பிரதமர்

விடை : லியோ வராட்கர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்). அயர்லாந்தின் 14வது பிரதமராக (2017) இருந்தவர்.

2.ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா கட்டப்படும் இடம்

விடை : சேலம் மாவட்டம் தலைவாசல்

ஜூன் – 30

•உலக குறுங்கோள் நாள்
•உலக பாராளுமன்ற நாள்

3.இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் அமைக்கப்படவுள்ள 5-வது நீர் மின் உற்பத்தி நிலையம் அமையவுள்ள இடம்

விடை : கிழக்கு பூடானின் கொலோங்சு நதி. 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது.

4.ரஃபேல் போர் விமானங்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்குகிறது?

விடை : பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸோ ஏவியேஷன்’ நிறுவனம். மொத்தம் 10இல் ஆறு தற்போது அனுப்பியுள்ளது.

ஜூலை – 01

•தேசிய மருத்துவர்கள் நாள் (‘பாரத ரத்னா’ டாக்டர் பி.சி. ராய் பிறந்த நாள்). கருப்பொருள் – கரொனா உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைத்தல்
•சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட நாள் (2017முதல்)

5.‘நமோ’ செயலி யாருடைய அதிகாரப்பூர்வ செயலி

விடை : பிரதமர் நரேந்திர மோடி

6.நாட்டின் முதல் கரொனா மருந்து தயாரிக்கும் நிறுவனம்

விடை : பாரத் பயோடேக், மருந்தின் பெயர் – கோவாக்சின்

ஜூலை – 02

•World UFO (Unidentified Flying Objects) Day.
மக்கள் ஒன்று கூடி அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களுக்கான வானத்தைப் பார்ப்பதற்கான விழிப்புணர்வு நாள்(2001 முதல்)

7.ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெறும் நகரம்

விடை : காரைக்கால்

8.தேர்வில் மோசடி செய்து பைலட் ஆன விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் வான்வெளியில் எந்த நாட்டு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது?

விடை : பாகிஸ்தான்

ஜூலை – 03
9.இறந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நலஉதவி வழங்கும் திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு

விடை : 1987 (எம்ஜிஆர்)

10.இளம் வழக்கறிஞர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000/- உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கபட்டுள்ளது?

விடை : முதல் 2 ஆண்டுகளுக்கு

ஜூலை – 04

•USA Independent day (1977)
•விவேகானந்தரின் 118வது நினைவு நாள்

11.லடாக் எல்லை ராணுவ முகாமில் பிரதமர் மோடி எடுத்துக்காட்டி கூறிய திருக்குறள்

விடை : மறமானம் மாண்ட வழிசெலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. (அதிகாரம் – படைமாட்சி)

12.ஆத்மாநாம் விருதுகள் – 2020

விடை : றாம் சந்தோஷ் – சொல் வெளித் தவளைகள் (கவிதைத் தொகுப்பு)
சந்தியா நடராஜன் – தாவோ தே ஜிங் (மொழிபெயர்ப்புத் தொகுப்பு)

ஜூலை – 05
13.கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் யாருடைய பெயரில் உலகளாவிய தமிழ் விருது வழங்கப்படவுள்ளது?

விடை : நாவலர் நெடுஞ்செழியன் (தகைசால் தமிழ் இலக்கிய விருது)

14.ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபு மாதம்’ என்று கனடா நாடாளுமன்றம் அறிவித்த ஆண்டு

விடை : 2016 (2017 முதல் கடைபிடிக்கப்படுகிறது)

15.போபோஸ் எனும் துணைக்கோள் எந்த கிரகத்தின் துணைக்கோளாகும்?

விடை : செவ்வாய் (மங்கல்யாண் ஜூலை 1-ல் படம் பிடித்து அனுப்பியது)

16.தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நடுவண் அரசு எந்தநாட்டு நிறுவனத்திடம் கடன் கோரியுள்ளது?

விடை : JICA [Japan International Cooperation Agency], 1264 கோடியில் 750 படுக்கை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

17.‘சிந்து தர்ஷன்’ பூஜை ஆண்டுதோறும் எப்போது நடைபெறுகிறது?

விடை : ஜூன் மாத பவுர்ணமி நாளில்

18.சாம்பல் விரைவுக் சாலைத் திட்டம் எந்த இரு மாநிலங்களை இணைகிறது?

விடை : உ.பி. to ராஜஸ்தான், தொலைவு – 404 கி.மீ., செலவு – 8250கோடி

19.ரஷிய அதிபராக விளாதிமீர் புதின் எத்தனையாவது முறை பதவி வகித்து வருகிறார்?

விடை : 4வது முறை. அதிபரின் பதவிக் காலம் 6ஆண்டுகள். ஒருவரால் 4 முறை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்தச் சட்டத் திருத்தம் தரோது துருத்தம் செயப்பட்டுள்ளது. அதன்படி 2036 வரை புதின் அதிபராக பதவி வகிக்க முடியும். 1999-ல் முதன்முறையாக அதிபராகப் பதவியேற்றார்.

20.பொது சேவை மையம் நடத்தும் நாட்டின் முதல் திருநங்கை

விடை : ஜோயா கான் (குஜராத் மாநிலம் வதோதரா)

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham