Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test 05 ஜூலை 2020 தினசரி நடப்பு நிகழ்வுகள்

Refer from Hindu & Dinamani Newspapers
Minnal Vega Kanitham 1. டில்லியில் உள்ள உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தின் வார்டுகளுக்கு யாருடைய பெயர்களைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது?

கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள்

2. ஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயலியின் பெயர் என்ன?

'ஜியோ மீட்'

3. ஜி 4 என்ற புதிய பன்றிக் காய்ச்சல் வைரஸ் கீழ்கண்ட எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது?

சீனா

4. தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்த 'அந்தமான் நிகோபார் கமாண்ட்' என்கிற படைப்பிரிவு எந்த ஆண்டு துவங்கப்பட்டது.?

2001

5. கரோனா வைரஸ் மூலத்தைக் கண்டுபிடிக்க கீழ்கண்ட எந்த அமைப்பின் குழு அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளது?

உலக சுகாதார அமைப்பின் மருத்துவக்குழு

6. சுதந்திரமான இந்திய-பசிபிக் பிராந்தியம் என்ற நோக்கத்துக்கு ஆதரவாக தென் சீனக்கடலுக்கு இரண்டு விமானந்தாங்கி கப்பல்களை அனுப்பியுள்ள நாடு எது?

அமெரிக்கா

7. வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ ஒட்டி, ஊக்கமளிக்கும் மரியாதை என்ற பொருள்படும் ‘பிரேரக் தவுர் சம்மான்‘ (Prerak Dauur Samman) எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக கூறிய மத்திய அமைச்சர் யார்?

ஹர்தீப் சிங் பூரி

8. மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருப்பவர் யார்?

கே விஜயராகவன்

9. நாட்டிலேயே பள்ளிப் பாடத்திட்டத்தை முதன்முதலில் குறைத்திருக்கும் வாரியம் எது?

CISCE

10. 8250 கோடி ரூபாய் செலவில் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு கீழ்கண்ட எந்த மாநிலங்கள் வழியாக பிரமாண்ட சாலையமைக்கும் சம்பல் எக்ஸ்பிரஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது?

மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான்


கருத்துரையிடுக

0 கருத்துகள்