அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு (12 questions)

Share:
அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு (12 questions) இயற்பியல் (Physics ) Blueprint TNPSC, RRB, TNEB, TET, PC -----------------------
Minnal Vega Kanitham அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு (12 questions)
1. சிறிய நீர்த்துளி அல்லது பாதரசத்துளி தூய கண்ணாடித் தகட்டில் இருக்கும் போது கோளக வடிவம் பெறக் காரணம் ஏன்? (24/12/2019)

பரப்பு இழுவிசையினால்

2. புவி ஈர்ப்பின் முடுக்கம் நிலநடுக்கோட்டுப் பகுதிகளிலிருந்து துருவப் பகுதிகளில்

கூடும்

3. நீருடன் சிறிது சலவைத்தூள் கலந்து துவைத்தால், துணியில் அழுக்கு எளிதில் அகற்றப்படும் இந்த பயனுக்கு காரணம்

பரப்பு இழுவிசை

4. வெள்ளி, ஒரு ஒளிரும் வெண்மையான உலோகமாகும், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வெள்ளியின் நிறம் கருப்பாக மாறுவது ஏன்?

வெள்ளி, வளிமண்டலத்தில் உள்ள உைறட்ரஜன் சல்பைடு வாயுவுடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது.

5. தாவரத்தின் இலைகள் பச்சை நிறமாக இருப்பதற்குக் காரணமான, தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் :

மெக்னீசியம்

6. பொழுதுபோக்குப் பூங்காவில் குடை இராட்டினத்தில் சுற்றும் போது, குடை இராட்டினம் ஒரு செங்குத்து அச்சைப்பற்றி சுழலும் போது, நாம் ஒரு வெளிநோக்கிய திசையில் ஏற்படும் இழுவிசையை உணர்கிறோம். அதற்கான காரணம் எது ?

மைய நோக்கு விசை

7. சிறு ஆணி நமது உடலைத் துளைக்கும் போது வலியை உணர்கிறோம். ஆனால் சிலர் ஆணிப் படுக்கையில் படுத்தாலும் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லையே - எப்படி?

ஏனெனில் அதன் தொடு பரப்பு அதிகம்.

8. கூற்று (A): சில கடல் ஆமைகள் (லாகர்ஹெட் கடல் ஆமை அவை பிறந்த கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து முட்டையிடுகின்றன. காரணம் (R) : ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய புவிக்காந்த உருப்பதித்தல் எனும் முறையைக் கையாளுகின்றன. இந்த ஆமைகள் பல்வேறு இடங்களின் காந்தப்புலவலிமையை நினைவில் கொள்ளும் ஆற்றல் உடையவை. இது அவை தாயகத்திற்குத் திரும்புவதற்கு உதவுகிறது.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.

9.வைரம் கண்ணைக் கவர ஜொலிப்பதற்கும், விண்மீன்கள் மின்னுவதற்கும் காரணம் :

முழு அக எதிரொளிப்பு

10. அறிவியல் மனப்பாங்கின் பண்பியல்புகள் யாவை? (i) மற்றவர்களின் கருத்துக்களை அவர்களின் சமூக நிலையைப் பொருட்படுத்தாமல் கேள்விக்குள்ளாக்குவது. (ii) மற்றவர்களின் கருத்துக்களைப் பகுப்பாய்வு செய்வது. (iii) தர்க்கத்தை பயன்படுத்துவது. (iv) மற்றவர்களின் கருத்துக்களை அவர்களின் சமூக நிலையின் காரணமாக கேள்வி கேட்காமலும், பகுப்பாய்வு செய்யாமலும் ஏற்றுக் கொள்வது.

(i), (ii) மற்றும் (iii) மட்டும்

11.பின்வருவனவற்றில் மூட நம்பிக்கைகளுக்கான மிக வீரியமான எதிர் மருந்து எது?

அறிவியல் மனப்பாங்கு.

12. பொருளுணராமல் கற்றலுக்குரிய பண்பியல்புகள் யாவை? (i) கற்பவர் தன்னைச் சுற்றியுள்ள சூழலோடு ஒருங்கிணைந்து செயல்பட அனுமதிப்பதில்லை. (ii) சிந்திக்கும் முறையில் இறுக்கமான தன்மையை உட்புகுத்துகிறது. (iii) கற்பவரைச் சூழ்நிலைக்கேற்ப தொடர்ந்து உத்வேகமாகத் தன்னை மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது. (iv) கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கிறது.

(i) மற்றும் (ii) மட்டும்

-------------------------

கருத்துகள் இல்லை