Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

தினம் தினம் திருக்குறள் 08

திருக்குறள் மொழிப்பெயர்ப்பு:

•    இலத்தின் = வீரமாமுனிவர்
•    ஜெர்மன் = கிரால்
•    ஆங்கிலம் = ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
•    பிரெஞ்ச் = ஏரியல்
•    வடமொழி =அப்பாதீட்சிதர்
•    இந்தி = பி.டி.ஜெயின்
•    தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை

சிறப்பு:

பாரதியார் வள்ளுவரை பாராட்டுதல்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

•பாரதியார் மேலும், “கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார்.

மனோன்மணியம் சுந்தரனார் வள்ளுவரை புகழ்தல்:
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி

சுத்தானந்தபாரதி கூறுவது:
எம்மதம் எவ்வினமும் எந்நாளும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்

திரு.வி.க கூற்று:
•திருக்குறள் ஒரு வகுப்பாற்கோ, ஒரு மதத்தாற்கோ, ஒரு நிறத்தாற்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டாற்கோ உரியதன்று; அது மன்பதைக்கு உலகுக்குப் பொது.

கி.ஆ.பெ.விஸ்வநாதம் கூற்று:
• திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகிற்கு தெரிந்திருக்காது.

முக்கிய அடிகள்:
•    அறத்தான் வருவதே இன்பம்
•    மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
•    திருவேறு தெள்ளியராதலும் வேறு
•    பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
•    ஊழிற் பெருவழி யாவுள
•    முயற்சி திருவினை யாக்கும்
•    இடுக்கண் வருங்கால் நகுக
•    கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
•    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
•    ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்